http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 80

இதழ் 80
[ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2011 ]


இந்த இதழில்..
In this Issue..

காரணம் என்ன?
செருவென்ற சோழனின் செப்பேடு - 1
சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் - 5
அறிவர் கோயில் - 2
இராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 3
அகவன் மகளிர்
இதழ் எண். 80 > இலக்கியச் சுவை
இராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 3
ரிஷியா
நக்கன் என்ற முன்னொட்டுக்கு அறிஞர்கள் பலவாறு விளக்கம் அளித்தாலும் சிவன் பால் சித்தம் கொண்டோர் அனைவரும் ஆண், பெண், அரசி, குடிமகன் என்ற பேதமில்லாமல் ‘நக்கன்’ என்ற முன்னொட்டைத் தத்தம் பெயருடன் இணைத்துள்ளனர் என்பது அக்காலத்திய கல்வெடுகள் மூலம் தேற்றம்.

தளிச்சேரி பெண்டுகள்: - கல்வெட்டு வரிகள் இவ்வாறு சொல்கின்றன: “ஆக இப்படி உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் திருவாய் மொழிந்தருளியபடி கல்லில் வெட்டியது: தளிச்சேரிப் பெண்டுகள் தெற்குத் தளிச்சேரித் தென்சிறகு தலைவீடு திருவையாற்று உலகமாதாதேவீஸ்வரத்து நக்கன் சேரமங்கைக்கும் பங்கு ஒன்று.” இவ்வரியில் “தலைவீடு” என்பது முதலாம் வீடு என்பதாம். [டாக்டர் திரு. கலைக்கோவன் அவர்கள் தமது “தளிச்சேரி பெண்டுகள்” என்னும் நூலில் இப்பெண்களின் பெயர்களை மிக விரிவான ஆய்வுக்கு உட்படுத்தி பல சுவாரசியத் தகவல்களை அளித்துள்ளார். அவர் உழைப்பை நான் எடுத்துக்கொள்ள இயலாது. என்னைக் கவர்ந்தவை மட்டும் இக்கட்டுரையில் இடம் பெறுகின்றன.]

ஆடலரசிகளின் திருமறைப் பெயர்கள்
தெற்கு தளிச்சேரி தென்சிறகு - 5’ம் வீட்டில் வசித்தவர் ”எடுத்தபாதம்”
-9’ம் வீட்டில் வசித்தவர் ”எடுத்தபாதம்”
-40’ம் வீட்டில் வசித்தவர் ”மழலைசிலம்பு”
வடக்கு தளிச்சேரி தென்சிறகு - 49’ம் வீட்டில் வசித்தவர் “நீறணி பவழக்குன்று”

ஒரே பெயரில் இருவர், மூவர் இருந்தால், “பெரிய”, “சிறிய”, “கரிய” போன்ற அடைமொழிகளால் அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர்.

மரப்பெயர்கள்:-
அக்காலத்தில் மரங்களின் பெயரைத் தம்பெயராய் சூட்டிக்கொள்வது வழக்கில் இருந்துள்ளது. சில ஆடலரசிகள் “இலவம்”, “ஒருப்பனை”, “முருங்கை”, “வெண்ணாவல்” என பெயர் கொண்டவராய்த் திகழ்ந்துள்ளனர். வெண்ணாவல் பாடல் பெற்ற திருவானைக்கோவிலின் தலவிருட்சமாகும்.

மேலும், அரசமரபுப் பெயர்கள், இறைப்பெயர்கள், மற்றும் இறத்தலப்பெயர்களைக் கொள்வது இன்று போல் அன்றும் மரபாய் இருந்துள்ளது.

தொடரும்this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.