http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 36

இதழ் 36
[ ஜூன் 16 - ஜூலை 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

நமக்கு நாமே
அபிமுத்தன் திருமடம்
கதை 10 - மதுரகவி
திரும்பிப் பார்க்கிறோம் - 8
ஆடற்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும்
எவ்வுள் கிடந்தான்
ஜப்பானில் பொ.செ தீம்பார்க் போல
திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - 2
Links of the Month
சங்கச்சாரல் - 18
இதழ் எண். 36 > தலையங்கம்
நமக்கு நாமே
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம்.

சென்றமாதத் தலையங்கத்தைப் படித்துவிட்டுத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களைப் போன்றே ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கும் இதே ஆதங்கம் இருப்பது சற்றுச் சிந்திக்க வேண்டிய விஷயம். இதற்கு முன் சந்தித்த சில ஆய்வு மாணவர்களும் இத்தகைய கஷ்டங்களை அனுபவித்திருப்பது புரிந்தது. பல்கலைக்கழகங்களின் சார்பில் நடைபெறும் ஆய்வுகள் எங்குமே முறைப்படுத்தப்படவில்லை என்பது வரலாற்று ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதில் வியப்பில்லை. ஏனெனில், நாங்களும் அந்த அதிர்ச்சியைச் சந்தித்தவர்கள்தாம்.

முனைவர். இரா.கலைக்கோவன் அவர்களை முதன்முதலில் சந்தித்தபோது, திருநெடுங்களம் கோயில் ஒரே தலைப்பில் ஏழுமுறை ஆய்வுக்கு உள்ளானது என்ற அதிர்ச்சித் தகவலைக் கூறியபோதே, இந்நிலையைச் சீர்படுத்த ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. இப்போதுதான் இதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. ஆம். ஏதாவது ஒரு பல்கலைக்கழகமோ அல்லது அரசாங்கமோ இதைச் செய்யவேண்டும் என்று வலியுறுத்திக் காலத்தைக் கழிப்பதைவிட, நாமே முயன்றால் என்ன என்று தோன்றியதன் விளைவே இது. கீழ்க்கண்டவை குறித்த தகவல்களை ஒருங்கிணைத்து இணையத்தில் இலவசமாகக் கிடைக்க வழி செய்துள்ளோம்.

1. கருத்தரங்குகளில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகள்
2. வரலாற்றாய்வு நூல்களில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்
3. பல்கலைக்கழகப் பட்ட ஆய்வேடுகள்

கட்டுரைகளை அப்படியே வலையேற்றம் செய்வது எங்கள் குறிக்கோள் அல்ல. அது சாத்தியமும் அல்ல. ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு, சிறு அறிமுகம், ஆய்வாளரின் விவரம், பதிப்பித்தவர்களின் விவரம் ஆகியவை மட்டுமே தொகுக்கப்படும். சுருங்கச்சொல்லின், Online Catelogue of Research Articles on Tamilnadu History. இந்த முயற்சிகூட ஐந்துபேர் கொண்ட எங்கள் குழுவால் மட்டுமே முடியக்கூடியதன்று. தேனீக்கள் சேர்ந்து கூடு கட்டுவது போலத்தான். வாசகர்களின் பங்களிப்பும் மிக அவசியம். தங்களின் உதவியுடன்தான் இதைச் செயல்படுத்த உள்ளோம்.

இதன் பயன் ஏற்கனவே கூறியதுதான். தமிழக வரலாற்றை நேசிக்கும் ஒவ்வொரு பிரிவினருக்கும் பயன்படக்கூடியதே இது. உதாரணமாக,

ஆய்வாளர்களுக்கு : இதற்குமுன் இதே ஆய்வு பிறரால் செய்யப்பட்டதா எனச் சரிபார்த்துக் கொள்ளலாம். அப்படிச் செய்திருந்தால் அதுபற்றிய விவரங்களை எங்கிருந்து பெறலாம் என்ற தகவல். அதன்மூலம் அந்த ஆய்வை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு.

மாணவர்களுக்கு : வரலாற்று ஆய்வுலகில், பாடத்திட்டம் தாண்டிய எத்தகைய ஆய்வுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று தெரிந்துகொள்ளலாம். துறைபற்றிய அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம்.

கதாசிரியர்களுக்கு : தங்கள் கதைகளுக்குத் தேவையான கருவை எங்கிருந்து பெறலாம் என்ற வழிகாட்டி.

வரலாற்று ஆர்வலர்களுக்கு : தங்களுக்கு விருப்பமான அரசரைப் பற்றி எத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தங்கள் ஊரிலேயே உள்ள பல்கலையில் எத்தகைய ஆய்வுகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் தெரிந்துகொள்ள வழி.

பதிப்பகங்களுக்கு : இதுவரை தாங்கள் வெளியிட்ட வரலாறு சார்ந்த நூல்களை அவற்றை இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடத்தில் தேடிக்கொண்டிருக்கும் வாசகர்களின் கையில் கொண்டு சேர்க்க முடிவது.

வரலாறு.காம் வாசகர்களுக்கு : தாங்கள் அறிந்துகொண்டுள்ள தகவல்களை மற்ற வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதின்மூலம் வரலாற்று ஆய்வுலகுக்குத் தங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்கிறோம் என்ற மனநிறைவு.

வரலாறு.காம் ஆசிரியர் குழுவுக்கு : இதுபோன்று வரலாற்று ஆய்வுடன் தொடர்புடைய அனைத்துத்தள மக்களுக்கும் ஒரே சமயத்தில் சேவை செய்யக் கிடைத்துள்ள வாய்ப்பை எண்ணிப் பெருமிதம்.

இத்தகைய பொக்கிஷத்தை, ஏன் தமிழ்நாட்டு வரலாற்றுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும்? அகில இந்திய மற்றும் உலகளாவிய வரலாற்றுக் களஞ்சியமாகவும் உருவாக்கலாமே என்ற சிந்தனை வாசகர்களிடம் தோன்றுவது இயல்பு. இந்திய மற்றும் உலக வரலாற்றைப் பற்றிய கட்டுரைகளை இதில் சேர்க்கக்கூடாது என்பது எங்கள் நோக்கமல்ல. இது ஒரு தொடக்கம் மட்டுமே. முதல்கட்டமாகத் தமிழ்நாட்டு வரலாறு. பின்னர் அடுத்தடுத்து மற்றவை என்பதே எங்கள் எண்ணம். அல்லது இதன் மூலம் ஈர்க்கப்பட்டு மற்றவர்கள் இதேமுறையிலோ அல்லது இதைவிட மேம்பட்ட வழியிலோ இந்திய மற்றும் உலக வரலாற்றைத் தொகுத்தளிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை.

இதற்குமுன் இதே ஆய்வு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய உதவும் இத்திட்டத்தை இதற்குமுன் வேறு யாராவது செயல்படுத்தியுள்ளார்களா என்று தேடியபோது, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஏற்கனவே சுமார் பத்தாண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தி, அரசு நிறுவனங்களுக்கே உரிய பல்வேறு நடைமுறைச் சிக்கல்களினாலும் கடினமான அணுகுமுறையாலும் தோல்வியடைந்திருப்பது தெரியவந்தது. அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து, எளிய முறையில் தேடுபொறியை அமைத்துள்ளோம். வாசகர்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் பெருவெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வருகிற 2007, ஜூலை 1ம் தேதி முதல் இத்திட்டம் செயல்பட ஆரம்பிக்கும். தொடக்கத்தில் எங்களுக்குத் தெரிந்த நூல்களில் சிலவற்றை மட்டும் பட்டியலில் சேர்த்துள்ளோம். வாசகர்களும் தங்களுக்குத் தெரிந்த நூல்களை research_catalog@varalaaru.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பினால், சரிபார்த்தபின் படிப்படியாக அவையும் சேர்க்கப்படும். எந்தெந்தத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்று இதற்கான பக்கத்திலேயே தகவல் வெளியிடப்படும். இது நாளாவட்டத்தில் பல்கிப் பெருகி அனைவருக்கும் பயன் நல்கவைப்பது வாசகர்களின் கையில்தான் உள்ளது.

நம்பிக்கையுடன்,
ஆசிரியர் குழு.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.