http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 52

இதழ் 52
[ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

எங்கே போயின ஏரிகளும் குளங்களும்?
சிவிகை பொறுத்தாரும் ஊர்ந்தாரும்
திரும்பிப் பார்க்கிறோம் - 24
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 6
திரிபுவன வீரனே! பாண்டியாரியே! - முதல் பாகம்
Virtual Tour On Kundrandar Koil - 4
ஐராவதி நூல் வெளியீட்டு விழா - ஒளிப்படத் தொகுப்பு (Videos)
அவர் - ஆறாம் பாகம்
நீங்கல் சரியோ நீயே சொல்!
பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன்
இதழ் எண். 52 > கலையும் ஆய்வும்
திரிபுவன வீரனே! பாண்டியாரியே! - முதல் பாகம்
ரிஷியா

"தண்ணீரும் காவிரியே! தார்வேந்தன் சோழனே. மண்ணாவதும் சோழமண்டலமே" எனத் தமிழ் நாவலர் சரிதை பெருமையுடன் பேசுகிறது. சோழர் தம் பெருமையைச் 'சொல்லில் அடங்காது இந்தச் சோழவேந்தர்களின் புகழ்' என்ற பழம்பாடலுக்கு ஏற்ப பரகேசரி விஜயலாயன் தொடங்கி பரகேசரி மூன்றாம் குலோத்துங்கன் வரை. இந்த மன்னர்களின் செயற்பாடுகள் மலைப்பும், வியப்பும் ஏற்படுத்துவன.

"புயல் வாய்த்து மண் வளரப் புலியானையும் சக்கரமும்
செயல் வாய்த்த மனுநூலும் செங்கோலுந் திசைநடப்பக்...."


எனத் தொடங்கும் மூன்றாம் குலோத்துங்கனின் மெய்கீர்த்தியில் சில வரிகள் அவரின் சிறப்பு இயல்புகளை விளக்கமாக சொல்கின்றன.

"பொருப்பு நெடுஞ்சிலையான் முப்புரமெரித்த சொக்கற்குத்
திருப்பவனி கண்டருளித் திருவீதியிற் சேவித்துத்...."


மன்னர் மன்னனாக, திரிபுவனச் சக்கரவர்த்தியாகச் சிறப்பு தரிசனம் செய்யாமல் குடிமக்களுடன் திருவீதியில் நின்று சேவித்துள்ளார். மேலும் தம் மெய்கீர்த்தியில் தன்னை,

"வீரமா முடி புனைந்து திரிபுவன வீரரென்
றிரு நிலஞ்சொல முடிசூடி"


படைவலியும், துணைவலியும் கொண்ட மன்னாதி மன்னனாகத் தன்னைக் கூறிக் கொள்ளாமல் "திரிபுவன வீரன்" என்று தன்னை ஒரு வீரனாக, தன் மண்ணின் மைந்தனாக அழைத்துக் கொள்ளும் பாங்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. போற்றுதற்குரியது.

இன்று திரிபுவனத்தில், மூன்றாம் குலோத்துங்கனின் புகழ்போல உயர்ந்து நிற்கின்றது திரிபுவனேச்சுவரம் என்று அழைக்கப்படும் அந்தக் கலைக் கோயில். அது ஒரு சிற்பக்கூடம். கண்களுக்குத் திகட்டாத விருந்தான ஓர் அற்புதக் கலைக்கூடம். சோழச்சிற்பிகள் தம் கலைத்திறனை, கற்பனைத் திறனை, சிற்பத் திறனைக் கருங்கல்லில் அமரத்துவமாய் உளிகொண்டு முத்திரை பதித்த கற்கோயில். கோயிலின் தெற்குப் புறச்சுவற்றில் நீண்டவரிகளை கொண்ட ஒரு கிரந்த கல்வெட்டுத் தொடர் மூன்றாம் குலோத்துங்கனின் புகழை இன்றளவும் பறைச்சாற்றிக் கொண்டிருக்கிறது.

திரிபுவன வீரனின் மெய்கீர்த்திக்கு நிகரான அந்த கல்வெட்டுத்தொடர் பற்றிக் காண்போம்.

"ஸ்வஸ்திஸ்ரீ! ஆசக்கராமானுராதாம் ஸ்மரசிரஸியஹ ஸம்ஹரன் ஸிம்ஹலேந்த்ரோ ந்யொஜெஷித் கேரளேசம் விஜிதாஸுரபதிம் யோவதீத் விரபாண்ட்யம் யோவாவீராபிஷேகம் வ்யதனுத மதுராம் பாண்ட்ய குப்தாம் ஜயித்வா ந்தாத்ரெ வேதஸிரஸ! புவி விஜயதெ ஸ்ரீ குலோத்துங்க சோளஹ"

மங்களம் உண்டாகட்டும்! சக்கரம் எனப்படும் சக்கரக்கோட்டம் முதல் அநுராதம் எனப்படும் அநுராதபுரம் வரையில் உள்ள பூமியை, போரில் சிங்கள அரசனைக் கொன்று, கேரளனை வென்று, தேவர்களுக்கு அரசனான இந்திரனை ஜெயித்த வீரபாண்டியனைக் கொன்று பாண்டிய மன்னனது மதுரையைக் கொண்டு, அங்கெ வீராபிஷேகம் செய்து திரைலோக்ய வீரன் என்று வெற்றி வாகை பெற்ற ஸ்ரீகுலோத்துங்க சோழன் ஆள்கிறான்.

"விச்வம்பரா யஸ்ய புஜார்க்க மார்க்கா ஹதோபஸர்க்கம் பரிபாலயந்த்யாம் ப்ரீத்யா ஸிமரத்யாதி வராஹதம்ஷட்ரா வாஸாஷி தாரா வீரததேகானாம்"

அவ்வரசனது புஜங்கள் திக்குகளை எல்லாம் காத்து ஏதும் நிகரில்லாமல் பரிபாலனம் நடத்தி வருவதால், முன்னொரு காலத்தில் மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைத் தூக்கி நிலைநிறுத்திய போது, வாள்முனையில் இருந்தது போல் அந்த நிலையைப் பூமிதேவி இன்று பிரியத்துடன் நினைக்கின்றாள்.

(தொடரும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.