http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 83

இதழ் 83
[ நவம்பர் 16 - டிசம்பர் 17, 2011 ]


இந்த இதழில்..
In this Issue..

நூலகம் மட்டும் என்ன விதிவிலக்கா?
பொய்யாமை அன்ன புகழில்லை - 1
கரூர்த் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணர்
சேக்கிழாரும் அவர் காலமும் - 1
துருவ நட்சத்திரம் - நூல் வெளியீடு
புத்தகத் தெருக்களில் - ஆனைக்கா கதாநாயகனும் நானும் - 1
இதழ் எண். 83 > தலையங்கம்
நூலகம் மட்டும் என்ன விதிவிலக்கா?
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம்.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன் நடந்தது மட்டுமா வரலாறு? பல நூறு மற்றும் பல பத்தாண்டுகளுக்கு முன் நடந்ததும்தானே அது? சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தை முகமது-பின்-துக்ளக் என்றொருவர் ஆட்சி செய்துவந்ததாகச் சில வரலாற்று ஆவணங்களும் 1971ல் வெளிவந்த ஒரு பழம் தமிழ்த் திரைப்படமும் (அல்லது நாடகமும்) கூறி வருகின்றன.

"அரசியலைக் கேலி செய்யத் துணிந்தவர்களில் பெரும்பாலோருக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட கட்சியைத்தான் கேலி செய்ய வரும். ஆனால், ஒரு சமுதாயத்தின் பலவீனத்தையே, கட்சிப் பாகுபாடின்றி, முதிர்ந்த ஞானத்துடன் கேலி செய்திருக்கும் சாமர்த்தியத்தால் முகமது பின் துக்ளக் தரத்தில் உயர்ந்து நிற்கிறான்." என்று ஆனந்த விகடன்கூட அந்நாளிலேயே தனது நிலையைப் பதிவுசெய்திருந்தது.

இந்தத் துக்ளக் என்பவர் தனது தான்தோன்றித் தனமான முடிவுகளுக்காகப் பெயர் போனவர். தலைநகரை இருமுறை மாற்றியதற்காகப் பலரின் பழிச்சொல்லுக்கு ஆளாகிய துக்ளக் கூடத் தன் ஆட்சிக்காலத்தில் எந்தவொரு நூலகத்தையும் இடம் மாற்றியதாகச் சரித்திரம் இல்லை.

8 ஏக்கர் நிலப்பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுததப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் எனப் பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீனக் கட்டமைப்புகள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஒலி, ஒளி தொகுப்புகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.

இத்தகைய கட்டடம் முந்தைய ஆட்சியால் கட்டப்பட்டது என்பதன்றி, அதற்கும் முந்தைய ஆட்சியால் தலைமைச்செயலகமாக உருவாக்க எண்ணப்பட்டிருந்தது என்பதையும் மீறிய காரணம் ஏதாவது உள்ளதா? தான் எண்ணியிருந்ததை முந்தைய ஆட்சி மாற்றியது என்பதால் முந்தைய ஆட்சி எண்ணியதை இன்று மாற்ற விழைவதால் பாதிக்கப்படப்போவது முன்பு ஆட்சியிலிருந்த கட்சியா பொதுமக்களா என்று எண்ணிப்பார்த்ததா இன்றைய ஆளுங்கட்சி என்பதே வரலாறு.காமின் கேள்வி.

சமச்சீர் கல்வி முதல் சட்டசபை வரை மாற்றியபோது இதை எண்ணிப் பார்க்காவிட்டாலும், மக்களின் அறிவுக்கு வித்திடும் இந்நூலகத்தை இடம் மாற்றும் முன்பாவது சற்றுச் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்பதே அனைவரின் அவாவும். நூல்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் சென்று, ஆங்கிலமோ, தமிழோ, தமக்குப் பிடித்தமான நூலை எடுத்துக்கொண்டு அவர்களுக்காகவென்றே உருவாக்கப்பட்டிருக்கும் செயற்கை மரத்தடியில் சென்று அமர்ந்து வாசிக்க விழையும் மழலைகளின் எண்ணங்களுக்குத் தடைபோடலாமா? ஊடகங்களின் ஆக்கிரமிப்பால் வாசிக்கும் பழக்கம் அருகி வரும் இந்நாளில் குழந்தைகளை நூல்களை நோக்கி ஈர்க்கும் சூழலைக் கொண்டிருக்கும் இந்நூலகத்தை மாற்றுவது ஒரு தலைமுறையையே படுகுழியில் தள்ளுவதற்குச் சமம். சில பத்தாண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாண நூலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதற்கும் இதற்கும் வேறுபாடு அதிகமில்லை.

என்ன புலம்பி என்ன பயன்? விதை ஒன்று போடச் சுரை ஒன்றுகூட முளைக்கலாம், தெரியாமல் போடப்பட்ட விதை சுரையாக இருக்கும் நிலையில். ஆனால் தமிழக மக்கள் தெரிந்தே ஒரு முடிவை எடுத்தபிறகு இத்தகைய முடிவுகளைக் கண்டு வியப்படைவதுதான் வியப்பு. இன்னும் நான்கரை வருடங்களில் இதைவிட இன்னும் பல 'நல்ல' முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது என்பதை மறக்க வேண்டாம். தமிழக அரசுக்குத் தமிழ் வளர்ச்சி மீதான அக்கறை எந்த அளவுக்கு என்பது ஏற்கனவே தெரிந்ததாதலால் தன்மானமுள்ள தமிழறிஞர்களின் கருத்துக்கு எந்தளவுக்கு மதிப்பிருக்கும் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. இது தொடர்பாகப் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. சமச்சீர் கல்வி மற்றும் சட்டசபைக் கட்டடம் போன்ற வழக்குகளிலும் நீதிமன்றத் தீர்ப்புகள் தடையாக வந்திருந்தாலும், மாற்றும் முடிவுகள் முற்றாகக் கைவிடப்படாமல் நீறுபூத்த நெருப்பாகவே இருப்பது கண்கூடு. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு இந்த முடிவும் மாற்றப்படும் அல்லது மறுபரிசீலனை செய்யப்படும் என்ற நம்பிக்கை ஏதுமின்றி, எதிர்ப்பைப் பதிவு செய்யும் கடமையைச் செய்கிறோம்.

அன்புடன்
ஆசிரியர் குழு
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.