http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 61
இதழ் 61 [ ஜுலை 15 - ஆகஸ்ட் 15, 2009 ] இந்த இதழில்.. In this Issue.. |
இடம் : டோக்கியோ,
நாள் : 01 - ஜூலை - 2009. அன்புள்ள ரிஷியா, வணக்கம். ஏறத்தாழ ஏழு மாதங்களுக்குப் பின் தொடர்பு கொள்கிறேன். டாக்டர் உள்ளிட்ட வரலாறு.காம் குழு நண்பர்களுடனும் அவ்வளவாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை. நெடுநாட்களாகத் தொடர்பு இல்லாததால், நண்பர்கள் என்னைக் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டனர். டாக்டர் இடையில் ஒருநாள் என்னவோ ஏதோவென்று எண்ணி இல்லத்துக்கே தொடர்புகொண்டுவிட்டார். வேலைப்பளு அன்றி வேறு காரணமில்லை. வேலைப்பளு எல்லோருக்கும்தான் இருக்கும். அதற்காக எல்லோரும் எழுதாமலா இருக்கிறார்கள் என்று கேட்பது புரிகிறது. வேலைப்பளு என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டாலும், Work Load என்பதையும் Work Pressure என்பதையும் தமிழில் எப்படி வேறுபடுத்திக் காட்டுவது என்று தெரியவில்லை. Work Load அதிகமாக இருந்தால், இரவில் கண் விழித்தோ அல்லது போலி மருத்துவ விடுப்பு எடுத்தோ கட்டுரை எழுதி விடலாம். ஆனால் Work Pressure இருந்தால், சிந்தனை முழுவதும் வேலையிலுள்ள சிக்கல்களிலேயே மூழ்கியிருக்கும். முற்றிலும் வேறு துறையான வரலாற்றில் எழுதுவதற்குத் தெளிவான சிந்தனை ஓட்டம் இல்லாமல் முடியாது. எனவேதான் இத்தகைய இடைவெளி. நண்பர்களும் இதைப் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எத்தகைய சிக்கல்கள் இருந்தாலும், குறைந்தது மாதம் ஒரு கட்டுரையாவது எழுதிவிடுவது என்று முடிவெடுத்துச் சென்ற மாதம் பேராசிரியர் அரசு அவர்களைப் பற்றி எழுதினேன். எழுதுவதில் ஏற்பட்ட இடைவெளியோ அல்லது சிந்தனையை முழுவதுமாகக் கட்டுரைக்குத் திருப்ப முடியாததாலோ என்னவோ, 'முந்தைய கட்டுரைகளைப் போல் இல்லாமல் சற்று தொய்வு ஏற்பட்டிருக்கிறது' என்று ஒரு நண்பர் கருத்துரைத்தார். எனவே, தொடர்ந்து எழுதினால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். டிசம்பர் 25 அன்று லலிதாராமுக்கும் கோகுலுக்கும் அன்றைய பயண விவரங்களை மடலாக எழுதி வைத்துவிட்டு, நானும் சீதாராமனும் முந்தையநாள் விட்ட இடத்திலிருந்து சொந்தக்கதை, சோகக்கதைகளைத் தொடர்ந்தோம். அவரது வேலை மற்றும் பயண அனுபவங்கள், கழுகுமலை, மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர், திரு. தமிழானந்தன், சீதாராமன் கையிலேயே வைத்திருக்கும் குளிர்சாதனப்பெட்டி, அன்றைய இரவு உணவு என உரையாடல் நீண்டுகொண்டேபோய், இரவு 2 மணிக்கோ 3 மணிக்கோ ஒருவழியாய் நித்திராதேவியிடம் சரணடைந்தோம். அடுத்தநாள் காலை உணவை முடித்துக்கொண்டு மீண்டும் கழுகுமலையை நோக்கிப் பயணித்தோம். அன்றைய பயணத்திட்டம் கழுகுமலையிலிருக்கும் சமணர் சிற்பங்களையும் வெட்டுவான்கோயில் குடைவரையையும் காணவேண்டும் என்பதுதான். இவ்விரண்டைப் பற்றியும் Hinduவில் திரு. டி.எஸ்.சுப்பிரமணியம் அவர்கள் எழுதியிருந்த கட்டுரையை ஏற்கனவே வாசித்து வைத்துக்கொண்டோம். கழுகுமலையின் பிரம்மாண்டம் அங்கு செல்லும்வரை எங்களுக்குப் புலனாகவில்லை. இரண்டுமே கலைப் பொக்கிஷங்கள், சிற்பச் சுரங்கங்கள், சிற்பக்கூடங்கள் என எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் இவை எதுவுமே அவற்றைப் பிரதிபலிப்பதாக ஆகாது. காலையில் சமணர் சிற்பங்களையும், மதிய உணவுக்குப் பிறகு வெட்டுவான்கோயிலையும் பார்க்கலாம் என்று முடிவு செய்துகொண்டோம். நாங்கள் அங்குப் பார்த்தவற்றை என் எழுத்தால் விவரிப்பதைவிட, எனது புகைப்படக் கருவியால் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். சில படங்களுக்கு மட்டும் விளக்கங்கள் அளித்துள்ளேன். மற்றவற்றிற்கு விளக்கம் தேவையிருக்காது என்று எண்ணுகிறேன். தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையின் அறிவிப்புப் பலகை கழுகுமலை அமைந்திருக்கும் இயற்கைச்சூழல் மற்றும் நம் குழு சமணச் சிற்பங்கள் அமைந்திருக்கும் பாறைக்கு எதிரே ஒரு ஓரடி அகலச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. படிகள் ஏதும் இல்லாததால், எப்படிப் பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை. அருகில் கொட்டப்பட்டிருந்த மணற்குவியலின்மேல் ஏறிச் சுவர் மீதேறினோம். இத்துடன் சமணர் சிற்பங்கள் நிறைவடைந்து, வெட்டுவான்கோயில் துவங்குகிறது. சிற்பத்தின் அளவைக் காட்டவேண்டி வைக்கப்பட்ட கையும் பூதகணமும் கற்காரிகைக்கு மெதுவடை ஊட்டும் கல்வெட்டுக்காரிகை தண்ணியடிக்கும் கலையைப் பயன்படுத்தும் நம் குழு வெவ்வேறு முறைகளில் எடுக்கப்பட்ட ஒரே சிற்பம் புகைப்படப் பயணம் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் அடுத்த மடலில் சந்திப்போம். அன்புடன் கமல் this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |