http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 38
இதழ் 38[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2007 ] 3ம் ஆண்டு நிறைவு - வாசகர் சிறப்பிதழ் இந்த இதழில்.. In this Issue.. |
அன்பார்ந்த வாசகர்களே,
கலைமாமன்னர் இராஜசிம்மப் பல்லவரின் படைப்புகளை வார்த்தைகளால் வர்ணிப்பதைவிட, புகைப்படத்தொகுப்பு மூலம் விருந்தாக அளிப்பது பொருத்தமாக இருக்கும் என்றெண்ணி இங்கே பகிர்ந்து கொள்கிறோம். பார்த்து மகிழுங்கள். 1. அதிரணசண்டேசுவரத்தின் கனவுக் கல்வெட்டு 2. காலத்தை வென்று நிற்கும் கடற்கரைக்கோயில் 3. கொற்றவை வாழ் குடிசைக்கோயில் 4. கிருஷ்ணன் ஓட்டாத அர்ஜுனன் ரதம் 5. கூர்ந்து நோக்கின் வேழம் தெரியும். கூர்ந்து கேட்கின் ஓசைகூடக் கேட்கும். ஓசை மணியோசையா அல்லது உளியோசையா? 6. பெருமாள் பிடிக்கப்போய் பீமனில் முடிந்தது. 7. முருகன் உண்டு... உமையொரு பாகனாய் சிவனும் உண்டு... கருடன் ஏறும் மாயோனும் உண்டு. இன்னும் பல பேர் கல்லில் சமைந்திருக்க, பெயரளவில் இருக்கும் யதிஷ்டிரனுக்குத்தான் அடித்தது யோகம். 8. பணிதலின் விளக்கம்போல் பத்திமை பூண்டு நிற்கும் சண்டேசுவரர் 9. அடிமுடி அறியவொண்ணாதவர் முன் பாய்ந்து வரும் கங்கை எம்மாத்திரம்? கொட்டம் அடக்கப்பட்ட கங்கையின் ஓய்வு 10. பக்தர்களைப் பாதுகாக்கும் பரந்தாமன் கருடனின் எஜமான விசுவாசத்தை ஏற்கமாட்டாரா என்ன? 11. பாணர் பாடுவது தேவாரமா? அதுவும் இராஜசிம்மர் காலத்தில்! 12. இறைவனின் நெருக்கமான நேயம் ஏற்படுத்தியிருக்கும் உணர்வலைகளை முகத்தில் படமாய்க் காட்டும் மானுட வடிவிலான நந்தி 13. தலைவர் கை தலைப்பட்ட மகிழ்ச்சிப் பூரிப்பில் முகத்தில் கூச்சம் பூசிய துள்ளலுடன் அடியவரும் 'எப்படி இருக்கிறது இந்தப் பண்?' என்ற பார்வையுடன் வீணாதரரும் 14. இயமனுக்குத் திண்டாட்டம்; வதம் செய்பவருக்குக் கொண்டாட்டம் 15. வதம் செய்வதோ ஒரேயொரு ஜலந்திரனை! ஆனால் முகபாவமோ கோணத்திற்கு ஒன்று!! 16. தமிழ்நாட்டின் முதல் காளிங்கவதச் சிற்பம் 17. அரிதான தலையலங்காரத்தில் உள்ள ஈசனின் அரவணைப்பில் பல்லவ நந்தி 18. 'இறைவனே குடும்பிதான்' என்று இல்லற வாழ்வின் சிறப்பை எடுத்துரைக்கும் சோமாஸ்கந்தர் தொகுதி 20. திருநெல்வேலிக்கே அல்வா கொடுப்பதுபோல் ஆடல்வல்லானுக்கே பரதம் ஆடிக்காட்டும் தண்டு முனிவர் பெரிய ஆள்தான்! ஆனால் இறைவனுக்கு முன் சிறிய ஆள்தான்!! 21. அங்காலயத்துடன் கம்பீரமாக நிற்கும் பனைமலை தாளகிரீசுவரர் ஆலயம் 22. ஓவியமா? புகைப்படமா? இல்லையில்லை. பனைமலையிலிருந்து உமை நேரில் வந்திருக்கிறாள்! this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |