http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 38

இதழ் 38[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2007 ]
3ம் ஆண்டு நிறைவு - வாசகர் சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

தரிசனம் கிடைக்காதா!!!
பிராமி தோன்றிய இடமும் உடையாளூர் அறக்கட்டளையும்
கதை 11 - ஒளி
திரும்பிப் பார்க்கிறோம் - 10
இராஜசிம்மர் கலைப்பட விருந்து (புகைப்படத்தொகுப்பு)
இராஜசிம்மர் நினைத்தார்; இராஜராஜர் முடித்தார்
A Megalithic Pottery Inscription and a Harappan Tablet : A case of extra-ordinary resemblance
Agricultural Terms in the Indus Script - 2
அங்கும் இங்கும் (ஆக. 15- செப். 15)
Silpi's Corner-Introduction
Silpi's Corner-01
Links of the Month
ஆனங்கூர் - உத்தமரா? பராந்தகரா?
நீலப் பூக்களும் நெடிய வரலாறும்
இதழ் எண். 38 > இலக்கியச் சுவை
நீலப் பூக்களும் நெடிய வரலாறும்
இரா. கலைக்கோவன்
எருக்காட்டூர் மிகப் பழைமையான ஊர். தமிழ்நாட்டுக் குடைவரைக் கல்வெட்டுகளில் மிகப் பழைமையானதாகக் கருதப்படும் பிள்ளையார்பட்டிக் குடைவரைக் கல்வெட்டில் இவ்வூர் இடம்பெற்றுள்ளது. இவ்வூரைச் சேர்ந்த தாயங்கண்ணனார் சேரருக்கும் பாண்டியருக்கும் இடையில் நிகழ்ந்த போரொன்றை அகநானூற்றில் (149) பதிவு செய்திருப்பதுடன் முசிறி, பரங்குன்றம் பற்றிய தரவுகளையும் பெய்துள்ளார்.

பொருளீட்டச் செல்ல விரும்பிய தலைவன், அது கூறின், தலைவி பிரிவு தாங்காது துயர் உறுவாள் எனக் கருதித் தன் பயணம் தவிர்த்தான். பிரிவு சொன்னால் தலைவியின் கண்களில் நீர் நிறையும் என்ற சிந்தனை அவனுக்குள் எத்தனை எத்தனை வரலாற்றுப் பதிவுகளை வளையமிடச் செய்துள்ளன!

நீர் தளும்பும் அந்த பெண்ணின் கண்கள் நீண்ட, ஆழமான சுனையிற் பூத்த புத்தம் புது நீல மலர்கள் இரண்டினைப் போல் இருந்தன. இத்தகு அழகு மலர்கள் பூத்த அந்தச் சுனை பரங்குன்றத்தில் இருந்தது. வெல்லும் கொடியினையுடைய மயிலமர் முருகனின் விழாக்களால் சிறந்த அந்தப் பரங்குன்றம், கொடிகள் அசையும் தெருக்களை உடைய மதுரையின் மேற்கில் இருந்தது. மதுரையை ஆண்ட செழியன் நெடிய, நல்ல யானைகளையும் போர்களில் ஈடுபட்டுப் பல வெற்றிகளையும் ஈட்டிய பேரரசன். கடும் போருக்குப் பின் சேரரரின் முசிறியை வென்று அங்கிருந்த அவர்தம் பொற்பாவையைத் தம் வெற்றியின் அடையாளமாகக் கொணர்ந்தமை அப்பெருமான் ஈட்டிய வெற்றிகளுள் குறிப்பிடத்தக்கது.

செழியனால் வெல்லப்பட்ட முசிறி, பெரியாற்றின் வெள்ளிய நுரை சிதறுமாறு யவனர்களின் மரக்கலங்கள் சேரர் மிளகிற்காகப் பொன்னைக் கொணர்ந்து குவித்த வளமான துறைமுகம். இந்தத் துறைமுகம் அண்மைக் காலத்தே அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பல அரிய தொல்பொருட்களை அறிஞர் திரு. செல்வகுமார் கண்டறிந்து கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தலைவியின் கண்களுக்குப் பின்னால் சங்க காலத்து வரலாற்றையும் வணிகத்தையும் வெளிப்படுத்தியிருக்கும் தாயங்கண்ணனார் வரலாற்று நோக்கர்தானே!
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.