![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 133
![]() இதழ் 133 [ மார்ச் 2017 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மார்கழியின் மகத்தான இசை அனுபவம் ஒவ்வொருவரும் தவறாமல் பெறவேண்டிய பேறு! இந்த வருடமும் தியாகப்பிரம்ம உற்சவத்தை முன்னிட்டுத் திருவையாறு வழக்கம்போல் விழாக்கோலம் பூண்டது. அடியேனுக்கும் அங்குச் செல்ல அலுவல் நிமித்தமாக ஒரு வாய்ப்புக் கிடைத்தது. சரி, இம்முறை தென்கயிலாயம் கோவிலை நிதானமாகப் பார்த்துவிட்டு வருவோம் என்று மனதிற்குள் ஒரு சங்கல்பம்! தென்கயிலாயம் என்றவுடன் அப்பர் சுவாமிகளின் கயிலாயக்காட்சி நினைவுக்கு வந்தது! "மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி அப்பர் சுவாமிகளின் அரும்பெரும் தவம் அவருக்குக் கண்டறியாதன காணக் கொடுப்பினையாயிருந்தது! நமக்கு என்ன கிடைக்கும்! இந்தக் கணக்குகள் எல்லாம் மனதில் இல்லை! ஓர் இனம்புரியாத உற்சாகம்! கோயிலை நோக்கி ஈர்க்கப்பட்டேன்! வழக்கம்போல் புகைப்படக்கருவி நம்மை ஆட்கொண்டதில் கோயில் கட்டமைப்பை உள்வாங்கிக்கொள்ளாமல் புகைப்படமெடுப்பதிலேயே கவனமிருந்தமையால் கட்டமைப்புக்கூறுகளை உள்வாங்காமல் கருமமே கண்ணாகப் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தேன்! முதல் தளமேறி விமான அமைப்புகளைப் புகைப்படக்கருவிக்குள் உள்வாங்கிக் கொண்டிருக்கும்போது உள்மனம் எதோ ஒன்று இங்கு வழக்கத்திற்கு மாறாகக் கண்ணில் படுகிறதே, உற்றுப்பார் என்று எச்சரித்தது! ஆனாலும் புறமனம் அந்த எச்சரிக்கையைக் கண்டு கொள்ளாமல் அதன் வேலையிலேயே குறியாயிருந்தது! கீழே இறங்கி ஒவ்வொரு பத்தியாகப் படங்கள் எடுக்கும் போதும் உள்மனம் குரலெழுப்ப, வழக்கம்போல் புறமனம் அலட்சியப்படுத்த, மீண்டும் கருமமே கண்ணாகப் புகைப்படங்கள் எடுக்கும் வேலை தொடர்ந்தது!
திருவையாறு அமைவிட வரைபடம் (Courtesy – Google Earth)
வழக்கமான இக்காலக் கட்டுமான அமைப்புகளிலிருந்து இவ்வாலயம் கீழ்க்கண்ட வகைகளில் வேறுபடுவதை நம்மால் உணர முடிகிறது. போன்ற தனித்தன்மையான கூறுகளைத் தரிசிக்கப்பெற்றதில் மகிழ்ந்து, அப்பருக்குக் கயிலாயக்காட்சி அருளியது போல் அடியேனுக்கும் ஐயாறப்பர் சில புதிய செய்திகளை அருளி ஆசீர்வதித்த மகிழ்வுடன் தென்கயிலாயத்தில் இருந்து வீடு திரும்பினேன்!
|
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |