http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 14

இதழ் 14 [ ஆகஸ்ட் 16 - செப் 15, 2005 ]
1ம் ஆண்டு நிறைவு - கைலாயநாதர் சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

இராஜராஜரின் பல்லவப் பெருந்தளி
இராஜராஜரின் பல்லவப் பெருந்தளி
கதை 6 - மாதேவடிகள் ஹாரம்
அம்ம அழகிதே
இராஜசிம்மேசுவரம் கல்வெட்டுகள்
தேவதேவிக் கல்வெட்டுகள்
கோயில்களை நோக்கி - 3
நெஞ்சை நிமிர்த்தும் நேற்றைய வரலாறுகள்

கட்டடக்கலைத் தொடர் - 11
அரை நாள் பயணம்....அரை மனதுடன்....
Brushstrokes from Pallava Era - Part I
சங்கச் சிந்தனைகள் - 2
இதழ் எண். 14 > தலையங்கம்
இராஜராஜரின் பல்லவப் பெருந்தளி
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம்,

வாருங்கள், சற்றே பின்னோக்கிச் செல்வோம். எப்பொழுதும் போல சோழர் காலத்திற்கோ பல்லவர் காலத்திற்கோ என்று நினைத்துவிடாதீர்கள். அதற்கு இன்னும் பொழுதிருக்கிறது. இப்போதைக்கு ஓராண்டு காலம் பின்னோக்கிச் செல்வோம்.

அதுவொரு அற்புதமான மாலைப்பொழுது. திருத்தவத்துறையின் (லால்குடி) எழிலில் மூழ்கி பரவச நிலையில் இருந்த வரலாறு அறிஞர்களையும் மாணவர்களையும் சுமந்த வண்ணம் அந்த மாருதி ஆம்னி திருச்சிராப்பள்ளியை நோக்கிப் பயணிக்கிறது. கேள்விகளுக்கென்றே பிறவியெடுத்தாற் போல் கமலக்கண்ணனும், இலாவண்யாவும், இராமசந்திரனும் முனைவர் கலைக்கோவனையும், முனைவர் நளினியையும் துளைத்தெடுக்கிறார்கள். அப்பொழுது ஒரு குரல். வேறு யாருடையதுமில்லை, வெண்பா வேந்தர் கிருபா சங்கரின் குரல்தான்.

"இப்போ நீங்க சொல்றதையெல்லாம் இண்டர்நெட்-ல கொண்டு வந்தா உலகம் பூரா போய் சேருமே".

"தம்பீ! இதைப் பத்தி பலமுறை பேசியாச்சு. இப்படி பேசிக் காலத்தை கழிக்கறதைவிட ஏதாவது காரியத்துல காட்டுங்க. இந்த ஆகஸ்டு 15-ஆம் தேதிக்குள்ள ஒரு இதழ் ஆரம்பிங்க", என்றார் முனைவர். கலைக்கோவன்.

இவ்வாறாக திருச்சி சாலையில் கருவாகி, 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு பதினைந்தாம் நாள் சைபர் உலகில் பிறவியெடுத்த வரலாறு.காம், இன்று முதல் பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. தான் பிறந்த அரையாண்டு நிறைவையே இராஜராஜீஸ்வரம் சிறப்பதிழ் தாங்கி திமிலோகப்படுத்திய வரலாறு.காம், தனது முதலாம் ஆண்டு நிறைவை அவ்வளவு எளிதில் கழித்துவிடுவானா என்ன? இம்முறையும் இராஜராஜன் எழுப்பிய அற்புதப் பல்லவத் தளியை மையமாகக் கொண்டு சிறப்பிதழாய் மலர்கிறான்.

"இராஜராஜனாவது? பல்லவத் தளியை எழுப்புவதாவது? ஆசிரியர் குழுவிற்கு சித்தம் கலங்கிவிட்டதா?" என்று நீங்கள் கேட்பது காதில் விழாமல் இல்லை. முதலாம் இராஜராஜன் என்று வரலாறு குறிக்கும் சோழர் பெருந்தகையான அருமொழிக்கு முன்னிருந்த இராஜராஜன் எழுப்பிய இராஜசிம்மேஸ்வரத்தைத்தான் அப்படிக் குறிப்பிட்டோம். ஆம்! மாமல்லபுரத்து கணேச ரதக் கல்வெட்டு அத்யந்தகாமனான இராஜசிம்மருக்கு இராஜராஜன் என்றொரு பட்டப்பெயர் இருந்ததைத் தெரிவிக்கிறது. "கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளி" என்று இராஜராஜ சோழர் கொண்டாடும் இராஜசிம்மேஸ்வரம், அருமொழிதேவற்கு அத்யந்தகாமர், இராஜராஜன் என்று பெயர் சூட்டிக்கொண்டதில் முன்னோடியாக இருந்தைப் போல இராஜராஜீஸ்வரதிற்கு முன்னோடியாக விளங்கியது என்பது இக்கோயிலைக் காணும் பொழுது விளங்கும்.

இந்திய வரலாற்றின் அதி முக்கியமான கோயில்களுள் ஒன்றான இராஜசிம்மேஸ்வரத்தை முழுதாய் ஒருமுறை காண ஒரு கோடி கண்கள் இருந்தாலும் போதாது. கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுக்கும் தளிகள் எத்தனை. அவற்றில் குடியிருக்கும் சம்சாரியான சோமாஸ்கந்தர்கள் பலருக்குள் எத்தனை ஒற்றுமையும் வேற்றுமையும். அச்சிறுதளியின் கோட்டங்களிள் காட்டப்பட்டிருக்கும் காட்சிகள்தான் எத்தனை. எப்படியோ மனதை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்தால், அந்த கொற்றவையைத் தாண்டி ஒரு அடி எடுத்த வைக்க முடியுமா என்ன? அப்புறம் எங்கிருந்து வரலாற்றின் முதல் சாந்தார விமானத்தையும், வரலாற்றின் ஒரே பிரம்ம சிரச்சேத மூர்த்தியையும் காண்பது? பல காட்சிகள் முதல் முதலாய் தோன்றும் இடமாகவும் பல காட்சிகள் காண கிடைக்கும் ஒரே இடமாகவும் விளங்கும் அத்யந்தகாமனின் அற்புதத் தளி எங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்பின் பிரதிபலிப்பே இந்த இதழ். இராஜசிம்மேஸ்வரத்தைப் பற்றி எழுதுவதென்பது, உலகின் பரப்பளவையொத்த காகிதத்தில் ஓர் ஓவியத்தை வரைவதற்கொப்பாகும். அவ்வோயித்தில் ஆங்கோன்றும் ஈங்கொன்றுமாய் சில கீற்றுகள்தான் இவ்விதழ் தாங்கி வந்துள்ளது. இன்னும் எத்தனை கீற்றுகள் எங்களால் போட முடியுமென்றோ, ஓவியம் முழுமையடைய இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு எத்தனை அறிஞர்கள் பிறவியெடுக்க வேண்டியிருக்கும் என்றோ யாரால் கூறமுடியும்? ஈசனுக்குத்தான் வெளிச்சம்.

பல போர்க் களங்களில் வெற்றி கண்ட ரணஜெயர், தனது புகழைப் போலவும், சிவபெருமானின் சிரிப்பைப் போலவும் எழுப்பிய மிகப்பெரிய இறை இல்லத்தில் (இது நாங்கள் கூறும் வாக்கல்ல. இராஜசிம்மேஸ்வரத்தைப் பற்றி அக்கோயிலில் இருக்கும் கல்வெட்டு கூறும் வாக்கு.) உறையும் பாம்பரசனின் உடல் வளையங்களை ஆபரணங்களாய் அணிந்த சங்கரரின் அருளை, வரலாறு.காம் தொடர்ந்து தோய்வின்றி வரலாற்று உண்மைகளைத் தாங்கி வரவும், இப்பொழுதிருக்கும் வாசகர் ஆதரவு என்றும் நிலைத்திருக்கவும் வேண்டுகிறோம்.

வாருங்கள் செல்வோம் இராஜசிம்மேஸ்வரத்திற்கு!

--ஆசிரியர் குழு.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.