http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 18

இதழ் 18
[ டிசம்பர் 16, 2005 - ஜனவரி 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

பக்தியும் கடமையும்
பழுவூர் - 7
கல்வெட்டாய்வு - 13
தக்கோலம் ஜலநாதீஸ்வரம்
Gopalakrishna Bharathi-4
சங்கச் சிந்தனைகள் - 6
இதழ் எண். 18 > பயணப்பட்டோம்
தக்கோலம் ஜலநாதீஸ்வரம்
ம.இராம்நாத்
சென்ற இதழில் நாம் முழுவதுமாக கருவரையை பார்த்தோம். இப்பொழுது உள்சுற்று பற்றி சிறிது காணலாம். கருவரையில் இருந்து வலது புறமாக வெளியில் வரும் பொழுது சுவர் முழுவதும் நாம் நிறைய கல்வெட்டுகளை காணமுடிகிறது. இங்கு உள்ள உள்மண்டபம் பிற்கால சேர்க்கை. இங்கு செல்பவர்கள் தயவு செய்து கோட்ட தெய்வங்களை சற்று நின்று தரிசனம் செய்யுங்கள். அப்பொழுது நீங்களாகவே ரசிகனாக மாறுவதை உணரலாம்.

தக்ஷிணாமூர்த்தி

குருவை பார்த்தவுடன் நம்மையும் அறியாமல்,

குரு பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மகேஷ்வரஹ
குரு சாக்ஷாத் பரப்பிரம்மா தஸ்மைஸ்ரீ குரவே நஹ

என்று குருவை வேண்டிக்கொண்டு அவரை உற்று நோக்கினோம்..

தனிக்கோவில் போல சற்று முன்னோக்கி இழுக்கப்பட்ட கோட்டத்தில், விழுதுகளுடன் கூடிய ஆலமரத்தின் அடியில் குரு அமர்ந்துள்ளார். உற்றுப்பார்த்தால், தனித்தனியாக உள்ள இலைகள் நிஜ இலைகள் போலவே இருப்பதைக் காணலாம்.





தக்கோலம் தக்ஷினாமூர்த்தி


தலையில் சடாபாரம், காதுகளில் பனை ஓலை (வித்தியாசமாக உள்ளது), கோரைபற்கள், கழுத்தில் சவடி, அழகான வேலைப்பாடுகள் கூடிய சரப்பளி, இடது பின் கையில் தீப்பந்தம், தீப்பந்தத்தில் உள்ள ஜ்வாலையை கவனிக்கவும், வலது பின் கையில் அக்க மாலையுடன் உட்குடி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

காட்டில் அமர்ந்து தவம் செய்வதை குறிக்கும் பொருட்டு, கால்களுக்கு கீழே மான்கள் (2 மான்), பாம்பு (வலது கால் அருகே) என சில
மிருகங்களை காட்டியுள்ளனர்.

பிள்ளையார்




சுற்றில் உள்ள பிள்ளையார்


பிள்ளையார்பட்டியில் உள்ளது போல, பிள்ளையார் ரொம்ப சுகமாக அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கிறார். தலையில் மகுடமும், கழுத்தில் சரப்பளியும், மார்பில் முப்புரினூலும் அணிந்துள்ளார்.

வலது முன்கையில் கொழுக்கட்டையா அல்லது உடைந்த தந்தமா என வந்த நான்குபேரும் சண்டை போட்டு, முடிவில் தந்தம் என்று கண்டுபிடித்தோம்.

திருமால்




திருமால்


திருமால் தலையில் சிம்மமுகம் பதித்த மகுடமணிந்துள்ளார். அவரது கண்களில்தான் என்ன ஒரு கருணை. எதிரில் இருப்பவரை நிச்சியமாக ஈர்க்கும் சக்தியை அந்த கண்களில் நாம் காணலாம். இச்சிலையை செதுக்கிய சிற்பியை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும். கல்லிலே என்ன ஒரு நேர்த்தி. இதழ்களில் என்ன ஒரு புன்னகை. மனதுக்குள்ளே.. குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயும்... . கழுத்தில் அணிகளன்களுடன் கூடிய சரப்பளிகளை, காதுகளில் மகர குண்டலத்துடன் கூடிய முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டே நிற்கலாம்.

வலது பின்கையில் உள்ள சக்கரம் பிரயோக சக்கரம் - அதாவது தீயவைகளை உடனடியாக அழிக்க புறப்படும் நிலையில் சக்கரம் உள்ளது. வலது முன்கை அருள் பாலிக்கும் விதமாக அபய ஹஸ்தத்தில் உள்ளது. இடது பின்கையில் சங்கு உள்ளது, ஒரு வேளை இதை தான்
மறைமுகமாக த்ரேதயுகத்தில் கிருஷ்ணர் சாந்திபனி முனிவர் மூலம் நாடகம் நடத்தி திருப்பாற்கடலில் இருந்து எடுத்து வைத்துக்கொண்டாரோ என்னவோ!!! இடது முன்கையை எந்த ஒரு முத்திரையும் காண்பிக்காமல் இடது தொடையின் மேல் வைத்துள்ளார்.

மார்பில் முப்புரினூலும் அதில் உள்ள வேலைப்பாடும் கவனிக்கத்தக்கது. மார்பையும் இடுப்பையும் பிரிக்கும் விதமாக உள்ள உதரபந்தம் சற்று அகலமாக இருக்க, இடையில் அரைஞாண் கயிறு ஒன்றும் உள்ளது.

இடுப்பில் புலிக்கச்சுடன் கூடிய பட்டாடை அணிந்துள்ளார். பட்டாடைக்கச்சில் உள்ள வேலைப்பாடு கவனிக்கத்தக்கது. வலது காலை மடக்கிய நிலையிலும், இடது காலை தரையில் பதித்த வண்ணம் கால்களில் கழல் அணிந்து சுகாஸனத்தில் அமர்ந்துள்ளார்.

நான்முகன்




நான்முகன்


கோவிலில் நான்முகன் முக்கியமான இடத்தில் உள்ளார். பொதுவாக பிரம்மாவிற்கு கோயில்களில் இந்த இடம் இருக்காது. பிரம்மாவிற்கு கீழே பார்த்தால் கோமுகம் (கருவரையில் உள்ள நீர் வெளியேறும் வழி) உள்ளது. பொதுவாக காணப்படும் கோமுகத்திற்கு பதில், ஒரு அரக்கன் வாயில் இருந்து நீர் வருவது போல கற்பனையுடன் அமைத்துள்ளனர்.

தலையில் சிம்மமுகம் பதித்த மகுடமணிந்துள்ளார். அவரது பார்வையில் என்ன ஒரு அமைதி. ஒருவேளை இந்த அமைதி கொண்டிருப்பதால் தான் எல்லாவற்றையும் படைக்க முடிகிறதோ!!! தெரிவதோ நான்கு காது. அதற்குள் தான் எத்தனை வேலைப்பாடு. எவ்வளவு வித்தியாசம். ஆகா! மிக அழகாக வித்தியாசம் காட்டி உள்ளனர்.

அவரது இதழ்களில் என்ன ஒரு புன்னகை புன்னகை. கழுத்தில் அணிகளன்களுடன் கூடிய சரப்பளிகளை நாம் காணலாம். வலது பின்கையில் அக்கமாலையும் வலது முன்கை அபய ஹஸ்தத்திலும் இடது முன்கையை கரங்களை மூடியவண்ணம் இடது தொடையின் மேல் வைத்துள்ளார்.

மார்பில் வஸ்திர முப்புரினூலும், மார்பையும் இடுப்பையும் பிரிக்கும் விதமாக தடித்த உதரபந்தமும், இடையில் அரைஞாண் கயிறும் உள்ளது.

வலது காலை மடக்கிய நிலையிலும், இடது காலை தரையில் பதித்த வண்ணம், இடையில் புலிக்கச்சுடன் கூடிய பட்டாடை அணிந்து சுகாஸனத்தில் அமர்ந்துள்ளார்.

துர்கை (திரிபங்கி)




துர்கை


முதன் முறையாக மூன்று வளைவுகளுடன் கூடிய துர்கையை இங்கு கண்டேன். அதாவது தலை, இடை, கால்கள் என மூன்றும் வளைவுகளுடன் மிகவும் ஒய்யாரமாக நிற்கும் துர்கையை காணலாம். இப்படி ஒரு சிலையை செதுக்க சிற்பிக்கு சில நாட்கள் கூடுதலாகத்தான் ஆகியிருக்கும்.

தலையில் சிம்மமுகத்துடன் கூடிய கரண்டமகுடமணிந்துள்ளார். கண்களில் தாய்மை. இதழ்களில் ஒரு புன்னகை. காதுகளில் மகர குண்டலமும், கழுத்தில் அணிகளன்களுடன் கூடிய சரப்பளிகளை நாம் காணலாம்.

வலது பின்கையில் உள்ள சக்கரம் பிரயோக சக்கரம். வலது முன்கை அருள் பாலிக்கும் விதமாக அபய ஹஸ்தத்தில் உள்ளது. இடது பின்கையில் சங்கு உள்ளது. இடது முன்கையை எந்த ஒரு முத்திரையும் காண்பிக்காமல் இடது தொடையின் மேல் வைத்துள்ளார்.

இங்கு ஒன்றை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். துர்கைக்கும் விஷ்ணுவிற்கும் கைகளை பொறுத்தவரையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. நான்கு கைகளும் ஒரே மாதிரி அமைக்கப்பட்டுள்ளன.

மார்பில் சன்னவீரம், கொடி இடை, புலிக்கச்சுடன் கூடிய இடை ஆடை. கால்கள் வளைந்த நிலையில் ஸ்வஸ்திகத்தில் உள்ளன.

பூதவரி
பூத வரியில், பறவை முதற்கொண்டு தலைகீழாக தொங்கும் பூதங்கள், மத்தளம், ஒருகண் சிறுபறை முழக்கும் பூதம், கையில் தாளம் போடும் பூதம், இசை பாடும் பூதம் என சிற்பிகள் தமது முழு கற்பனைத் திறனையும் இங்கு காட்டியுள்ளனர்.

சிலைகள் அணிந்துள்ள நகைகளில் இருக்கும் வேலைப்பாடுகளைப் பார்த்தால், கல்லிலேயும் இத்தனை வேலைப்பாட்டுடன் அமைத்திருக்கும் பொழுது, பொன்னிலே பொற்க்கொல்லர்கள் எத்தனை விதமான அணிகளன்களை செய்திருப்பார்கள் என ஊகித்திக்கொள்ளலாம். என்ன இருந்தாலும் அந்தக்காலம் அந்தக்காலம் தான்.

கோவிலில் உள்ள மற்ற தெய்வங்களும், தெய்வநிலைக்கு உயர்ந்தவர்களும் (சமயக்குரவர்)


சந்திரசூரியர்கள்
கோவிலின் உள்ளே நுழையும்பொழுது, வாயிற்படிக்கு தெற்கில் சூரியனையும், வடக்கில் சந்திரனையும் காணலாம்.





சந்திரசூரியர்கள்






சமயக்குரவர் நால்வர்




சப்தகன்னியர்




சப்தகன்னியர்




அம்மன் சன்னிதியின் முன்மண்டபத்திலும் தூண்களில் கல்வெட்டுகளை பார்க்கலாம். பலகை மாதிரி உள்ள கற்களில் எழுதலாம். இந்த உருள் தூணில் எப்படி? எனது சந்தேகத்தை தீர்க்க அங்கு சிற்பிகள் யாரும் இல்லை.

ஒன்று நிச்சயம். அந்த காலத்தில் ஆண்டி முதல் அரசன் வரை, எந்த இடத்தில் பொறுமையை கடைபிடித்து வேலை செய்ய வேண்டுமோ அங்கு பொறுமையை கடைபிடித்து வேலைசெய்துள்ளனர். அந்த பொறுமை இல்லை என்றால் இந்த அளவிற்கு கலைநயம் மிக்க கோவில்கள் இல்லை.

மீண்டும் சந்திப்போம்this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.