http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 81

இதழ் 81
[ செப்டம்பர் 16 - அக்டோபர்17, 2011 ]


இந்த இதழில்..
In this Issue..

இரவில் வாங்கினோம்
அறிவர் கோயில் - 3
தமிழ்நாட்டுக் கோயில்களில் புதையலா?
செருவென்ற சோழனின் செப்பேடுகள் - 2
இராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 4
இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி
இதழ் எண். 81 > கலையும் ஆய்வும்
இராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 4
ரிஷியா


கோயில் திருப்பணிகள்:

திருக்கோயில் திருவிழாக்களின்போது இவ்வாடல்மகளிர் இறைத்திருமேனிகளுக்குச் சாமரங்கள் வீசுவது, மங்கள ஆரத்தி எடுப்பது, பல வகையான நடனங்களையும், கூத்துக்களையும் அரங்கேற்றுவது, உற்சவர் வீதியுலாக்களின்போது முன்வரிசையில் ஆடல், பாடல் நிகழ்த்துவது எனப் பல கோயில் சேவைகள். இறைக் காரியங்கள் செய்துள்ளனர்.

கோயில் விசேஷம் அல்லாத நாட்களில் மடப்பள்ளி சார்ந்த பணிகள், அதாவது திருத்தளிகை செய்வது, மேலும் நந்தவனப் பராமரிப்பு, இறைத்திருமேனிகளுக்குப் பூக்கொய்து பூமாலைகள் தொடுப்பது, கோயில் பராமரிப்பு, கோயில் திருச்சுற்றுகளில் விளக்கேற்றுவது எனப் பலவகையான பணிகளைச் செய்பவராயிருந்தனர்.

அன்றைய ஈடு இணையற்ற சோழர்கால அரசாட்சியில் இம்மகளிர் பல சமூகத்தினராலும் சோழ அரசாலும் மிகவும் சிறப்பிக்கப்பட்டனர். உயரிய அந்தஸ்து, சிறப்பு மரியாதைகள் இப்பெண்களுக்கு வழங்கப்பட்டது. "அரசமகளிர்" முதற்கொண்டு அனைத்து சமூக மகளிரும் தம்மைக் கோயில் பெண்களாக அர்ப்பணித்துக் கொண்டனர். பல தளிச்சேரிப் பெண்கள் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை நடத்தியுள்ளனர். ஏனைய சமூக மக்களைப் போன்றே இவர்களும் பல அறக்கொடைகள், நந்தாவிளக்குக் கொடைகள் வழங்கியுள்ளனர் என்பது கல்வெட்டுகளின் மூலம் தேற்றம். அந்நாளில் இவர்கள் பொதுமகளிராக விளங்கியதற்கு எந்தவொரு கல்வெட்டும் சான்று பகரவில்லை.

மாபெரும் சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகே பொருளாதார வாழ்வியல் சீர்கேடுகள் தலைதூக்க இவர்களின் வாழ்வுநிலை தாழ்வுற்றது என்பது வரலாறு பேசும் உண்மையாகும்.

பின்குறிப்புகள்:

1. திரு. இராஜராஜன் காலத்தில் இது போன்றே 400 நடனமணிகள் ஆடினார்களா என்ற என் அம்மாவின் கேள்வியே இக்கட்டுரை எழுதத் தூண்டுகோலாய் அமைந்தது. அவருக்கு நான் சொல்லிய தளிச்சேரிப் பெண்டுகள் கதையே இக்கட்டுரை.

2. கோன் உயரக் குடி உயரும்; கோன் வீழக் குடியும் வீழும் என்பது இவ்வாடலரசிகளின் பின்னாளைய நிலை சுட்டும் வரலாற்றுப் பாடமாகும்.

3. தஞ்சையில் அன்று பதுஅக்கா நடன அசைவுகளுக்கு இடையூறு இல்லாமல் கோயில் திருச்சுற்று மாளிகையையும் ஆடல் நிகழ்த்துவதற்குப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனாலும் 1000 நடனமணிகளின் நாட்டிய நிகழ்ச்சி ஓர் அற்புதமே. ஒரு கலையரசியின் இந்நாளைய வரலாற்றுச் சாதனையே!

4. இத்தளிச்சேரிப் பெண்டுகள் நானூற்றுவர் பற்றிப் பல நண்பர்களுடன் நான் உரையாடியுள்ளேன். அச்சமயம் அவர்களின் கண்களையும் Body languageஐயும் கூர்ந்து கவனிப்பேன். ஒரு பிரபல எழுத்தாளர், ஒரு பிரபல டாக்டர் என அறிவாளிகளும்கூட இராஜராஜேசுவரத்து வளாகத்தில் என்னிடம் தவறாகப் பேசியதுண்டு இப்பெண்களையும் திரு. இராஜராஜசோழரையும் பற்றி. ஆனாலும் முனைவர். கலைக்கோவன் (a class above the rest of the pack) ஒருவர் மட்டுமே இப்பெண்களைப் பற்றி மிக மரியாதையாகவும் உயர்வாகவும் பேசியவர். கல்வெட்டுகள் துணைகொண்டு ஆடல்மகளிர் பற்றிய பல நற்செய்திகளை என்னிடம் கதைகளாய்க் கூறியுள்ளார். தாய்க்கழுகு தன் குழந்தையைச் சிறகுக்குள் அணைத்துக் கொள்வது பல தவறான கருத்துக் களங்களிலிருந்து என்னைப் பாதுகாப்பவர் முனைவர். கலைக்கோவன். Thanks Sir.

5. சில மாதங்களுக்கு முன் எங்கள் வரலாற்றுக் குடும்பத்தின் உறுப்பினர் திரு. ஆதித்தகரிகாலன் ஒரு கட்டுரையை அனுப்பியிருந்தார். கீற்று.காம் மின்னிதழில் வெளியான கட்டுரை அது. ஆடல்மகளிர் பற்றிப் பல தவறான கருத்துக்களை ஆசிரியர் எழுதியிருந்தார். கண்டிப்பாக மறுப்புத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். விரைவில் மறுப்புத் தெரிவிக்கப்படும் கீற்று.காம் நண்பர்களுக்கு.

6. என்மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு திரு. இராஜராஜசோழரை அதிகம் நேசிப்பதால் கொஞ்சம் biased ஆக இருக்குமோ உங்கள் கருத்துக்கள் என்பதுதான். மிகத்தவறு. என் வரலாற்றுக் கட்டுரைகளில் கல்வெட்டுகள் சொல்வதைத்தான் நான் நடுநிலைமையோடு (unbiased) எழுதுகிறேன். என் சொந்தக் கற்பனைகளை எல்லாம் கதைகளாய் எழுதுகிறேன். அதுவும் கல்வெட்டுக்கள் சார்ந்ததுதான். Shri Rajaraja Cholan was born great, he achieved greatness. எப்படி அவரைப்பற்றிக் கல்வெட்டுகள் சொல்லாததை எழுத முடியும் என்னால்?
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.