![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 98
![]() இதழ் 98 [ ஆகஸ்ட் 2013 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
விஜயநகரத்தின் மாட்சி, இராயரின் அரசாட்சி, வஞ்சகமாகக் கொல்லப்படும் அவரின் வாரிசு, விஸ்வநாத நாயக்கரின் போர் வெற்றிகள், நமது தென் தமிழகத்தில் 'பாளையம்' என்ற அமைப்பின் உதயம், இலங்கை புத்தளத்தில் நிகழ்த்தப்பட்ட போர் என்று வரலாற்றுப் பின்புலத்தின் நீண்டுகொண்டே போகிறது நாவல். அரியனுர் ஜல்லிக்கட்டு வர்ணனை, திருமலை நாயக்கரின் அரசாட்சியில் கழுவனின் இராஜமுத்திரைக் களவு இரசிக்கும்படியான ஒரு சுவையான கற்பனை நிகழ்வு.
மாநகர் மதுரையில் காவல் உரிமை தாதனூருக்குக் கிடைக்கும் இந்நிகழ்வின் புள்ளியிலிருந்து துவங்குகிறது களவும், காதலும் என்கிற தாதனூரின் வீர சகாப்தம். வீர சொக்கநாதனின் சாகோளியுடனான போர், தஞ்சை ராணி மங்கம்மாவை மணக்க நடத்திய போர் என நீள்கிறது மதுரையின் வரலாற்றுப் பின்னணிக் காட்சிகள். இராணி மீனாட்சியின் தற்கொலை, சந்தா சாகிப்பின் பச்சை துரோகம், யூசுப் கான் என்ற மருதநாயகத்தின் 'கும்பினி' விசுவாசம், மேஜர் காம்பெல்லின் மதுரைத் தாக்குதல், முல்லைப் பெரியாறு அணையின் கர்த்தா பென்னி குக் என சரித்திரத்தின் மாந்தர்கள் நம் கண்முன் உலா வருகின்றனர். சுதந்திரப் போராட்ட வீரன் ஊமைத்துரையின் கதையும் வரலாற்று நூல்கள் சொல்லாத தகவல்களுடன் விவரிக்கப்படுகிறது. இதோ ஒரு பெரிய தரவு.. 'மார்ச்சில் ஊமைத்துரை தூத்துக்குடியைத் தாக்கினான். கோட்டையின் தளகர்த்தா உட்வர்ட் ஓர்ம்ஸ்லே சரணடைந்தார். மற்றொரு அதிகாரியான பாக்காட் சிறைவைக்கப்பட்டார். அவர் மனைவி ஊமைத்துரையைச் சந்தித்து அவருக்கு உயிர்ப் பாதுகாப்பு வேண்டியபோது இரு அதிகாரிகளும் குடும்பம் உடமைகளுன் வெளியேற ஊமைத்துரை அனுமதித்தான்' - நனி நாகரீகம் பேசும் செயல் இது. இந்நெடிய நாவலில் இடம்பெறும் இருளின் மொழிகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். கன்னம் போடுதல், மொண்டிக் கம்பு, கட்டில்கால் வெள்ளி, ரெட்டியைக் கெடுத்த வெள்ளி என சொற்றொடர்களின் பட்டியல் நமக்குப் புதியதொரு உலகத்தைக் காட்டிச் செல்கின்றன. இருளின் பெருவழிகளில் மாயாண்டிக் கொத்தின் இராஜகளவு, சாகசங்கள், தாதனூரின் வாழ்க்கை முறைகள் என இடம்பெறும் அனைத்து வர்ணனைகளும் மிகவும் அருமை. இந்நாவலில் வந்து போகும் பெண்கள் சடச்சி முதல் அங்கம்மாள் கிழவி வரை வீரம் மிக்கவர்களாக உள்ளனர். வரலாற்று நாவல்களில் பெண்கள் காம ப்பொருட்களாக மட்டும் பார்க்கப்படும் வழக்கம் இந்நாவலில் உடைத்தெறியப்படுகிறது. புதிய முயற்சி. வாழ்த்துக்கள் நாவலாசிரியர் சு. வெங்கடேசன் அவர்களுக்கு. போர்கள், பஞ்சங்கள், மனித இனத்தின் அழிவுகள் பலவற்றை மானுடம் கடக்கும் வாழ்வியலை இந்நாவலில் நாம் காணலாம். மொழி நடை, கதை சொல்லும் பாங்கு, வாழ்வின் த த்துவங்கள் பேசும் பக்கங்கள் என அனைத்து பக்கங்களுக்கும் இந்நாவலில் தனியிடம் உண்டு. திரு. வெங்கடேசனின் தனித்துவமான பார்வை உண்டு. தமிழர்கள் வாசித்து மகிழ்ந்து விவாதிக்க வேண்டிய ஒரு சிறந்த வரலாற்று நாவல் இது. 59 நாட்கள் பின்னிரவுகளில் டிவியில் தமிழ்ப் பாடல்களின் பின்னணியில் தெரு நாய்களின் குரைப்புக் கச்சேரிகளுக்கிடையில் சடச்சி மக்களோடு நான் உறவாடிய இரவுகள் நெஞ்சில் நீங்காமல் இருக்கும். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |