http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 158

இதழ் 158
[ செப்டம்பர் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

துடி, தமருகம், உடுக்கை
மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு -3
சேக்கிழான் செல்வனும் மூன்று விழாக்களும்
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 7
நண்பருமாய் நல்லாசிரியருமாய்
இதழ் எண். 158 > கலையும் ஆய்வும்
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 7
பால.பத்மநாபன்



வெண்கோ வணங்கொண் டொரு வெண்டலையேந்தி
அங்கோல் வளையா ளையொர்பா கமமர்ந்து
பொங்கா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எங்கோ ணுறைகின் றவிடை மருதீதோ

தேவாரம்—சம்பந்தர் -------1.32.3.


பொருள் : வெண்மையான கோவணத்தை அணிந்து ஒப்பற்ற வெள்ளிய பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி அழகியதாய் திரண்ட வளையல்களை அணிந்த உமாதேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று பொங்கிவரும் காவிரிக்கரைமேல் உள்ள இறைவன் உறையும் தலமாகிய இடைமருது இதுதானோ ? (1)




சென்ற இதழில் கோனரின்மைகொண்டான் என்று தொடங்கும் 5 கல்வெட்டுகளை ஆராய்ந்தோம். அவை பின்வரும் மன்னர்களின் கல்வெட்டுகளாய் உள்ளதை உணர்ந்தோம்.
உத்தம சோழன் ------------------------------------------- 1
மூன்றாம் குலோத்துங்கன்---------------------------- 2
மூன்றாம் இராஜராஜன் ------------------------------ 2
_____________
5
_____________

இனி திரிபுவனசக்கரவர்த்திகள் இராஜராஜன் என்று குறிப்பிட்டு தொடங்கும் கல்வெட்டுகள் எந்த மன்னனுடையது என்று பார்ப்போம். இராஜராஜன் என்ற பெயர் கொண்ட மூன்று சோழமன்னர்கள் சோழநாட்டை ஆண்டுள்ளனர். அவர்கள் பின்வறுமாறு உள்ளனர்.

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய முதலாம் இராஜராஜன் (கி.பி.985-1014) (2)
தாராசுரம் கோயிலைக் கட்டிய இரண்டாம் இராஜராஜன் ( கி.பி.1146-1163 ) (3)
பாண்டியணிடம் தோற்று நாட்டைப் பறிகொடுத்த மூன்றாம் இராஜராஜன்(கி.பி.1216-1256) (4)

இதில் முதலாம் இராஜராஜன் திருபுவனச் சக்கரவர்த்தி என்று தன்னை அழைத்துக்கொண்டதில்லை. இரண்டாம் இராஜராஜனும் மூன்றாம் இராஜராஜனும் தங்களை திருபுவனச் சக்கரவர்த்திகள் என்று அழைத்துக்கொண்டனர். இனி கீழ்க்கண்ட கல்வெட்டுகள் எந்த இராஜராஜனுடையது என்பதைப் பார்ப்போம்.

1) ARE 143/1895 S.I.I. Vol 5 No; 707

இது திரிபுவனச்சக்கரவர்த்திகள் இராஜராஜனின் 2-ம் ஆட்சியாண்டு கல்வெட்டு. திருவிடைமருதுர் கோயில் முதல் பிராகரத்து மேலைத் திருமாளிகையில், பெரிய தேவர் திரிபுவனதேவர்க்கு யாண்டு 37-ல் இராஜராஜஸ்வரத்து கோயிலில் நடனமாடும் பதியிலார் ஒருவர் தைப்பூசமுடையநாயனார் என்ற பெயரில் இறைவனை எழுந்தருளுவித்து அதற்கு நிவந்தங்கள் அளித்தார். இக்கல்வெட்டில் வரும் திரிபுவனத்தேவர் என்பது மூன்றாம் குலோத்துங்கனை குறிப்பதாகும். எனவே இக் கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்கனுக்கு பின் ஆட்சிக்கு வந்த அவர் மகன் மூன்றாம் இராஜராஜனுக்குரியதாகும்.

2) ARE 291/1907 S.I.I. Vol. 23 No: 291

கோயிலில் ஸீகாரியம் செய்வானும், ஸீமாகேஸ்வரகண்காணி செய்வானும், கோயில் தேவகன்மியும், மற்றும் கோயில் கணக்கு எழுதுபவனும் கோயில் நிலத்தை ஒருவருக்கு விற்றுக்கொடுத்தனர். வாங்கியவர் அந்த நிலத்தை கோயில் நந்தவனமாக்க கோயிலுக்கே திருப்பி அளித்துள்ளார். கோயில் சார்பாக விற்ற ஒருவர் கோயில் கணக்கு மருதூர் உடையான் ஆவார். இவர் மூன்றாம் இராஜராஜனின் அதிகாரி என்பதை கல்வெட்டு எண் ARE 305/1907- S.I.I.Vol: 23 NO: 305-ல் வழியே பார்த்தொம் மேலும் இக் கல்வெட்டிலுள்ள பஞ்சாங்கக் குறிப்புகள் மூன்றாம் இராஜராஜனின் ஆட்சிக் காலத்தைக் குறிப்பதாலும் இக் கல்வெட்டு மூன்றாம் இராஜராஜனுக்குரியதாகும்.



3) ARE 310/1907 S.I.I. Vol 23 No: 310

இது திரிபுவனச்சக்கரவர்த்திகள் இராஜராஜனின் 7-ம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஆகும். மேலும் இது ஒரு சிதைந்த.கல்வெட்டு. மன்னருக்கு எதிராக துரோகம் செய்தவர்களின் நிலங்கள் ஏலம் விடப்பட்டன. இதில் சில நிலங்கள் கோயிலால் வாங்கப்பட்டன சிதைந்துள்ளாதால் இக் கல்வெட்டிலிருந்து .மேற்கொண்டு முழு விபரம் பெறமுடியவில்லை. இக் கல்வெட்டில் திருமந்திர ஓலை மீனவன் மூவேந்தவேளான் என்ற பெயர் வருகின்றது இவ்வதிகாரி மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலும் மூன்றாம் இராஜராஜன் காலத்திலும் வாழ்ந்தவன் என்பதை இக் கோயில் கல்வெட்டுகள் உறுதி செய்கிறன.(5) எனவே இக் கல்வெட்டு மூன்றாம் இராஜராஜனுக்குரியதாகும்.

எனவே மேற்கண்ட மூன்று கல்வெட்டுகளும் மூன்றாம் இராஜராஜனுக்குரியதாகும்

இனி மன்னர் பெயர் சிதைந்த அல்லது மன்னர் பெயர் அல்லாத கீழ்க்கண்ட கல்வெட்டுகள் யாருடையது எனப் பார்ப்போம்.

1) ARE 212/1907 S.I.I.vol- 23 No: 212

கல்வெட்டின் முற்பகுதி கானாமல் போய்விட்டதால் மன்னர் பெயர் அறிய இயலவில்லை ஆட்சியாண்டு விபரமும் அறியமுடியவில்லை. இக் கோயிலில் ஸிகாரியம் பார்க்கின்ற இங்கனாட்டு பல்லவரையர் திருவிடைமருதூர் கோயிலில் எழுந்தளுவித்த ஆடல்விடங்கதேவருக்கு ஆபரணம் செய்து கொடுத்தமையைக் இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. இக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் அதிகாரி இங்கனாட்டு பல்லவரையர் என்பவர் உத்தமசோழன் காலத்தில் பணிபுரிந்த அதிகாரி ஆவார் என்பதை இக் கோயில் கல்வேட்டுகள் தெரிவிக்கின்றன. (6) எனவே இக்கல்வெட்டு உத்தமசோழன் காலத்திற்குரியதாகும்.

2) ARE 224/1907 S.I.I.- VOL 23 No: 224

இக்கல்வெட்டிலும் முற்பகுதி காணாமல் போய்விட்டதால் மன்னர் பெயர் அறிய இயலவில்லை ஆனால் மன்னனின் ஆட்சியாண்டு 37 என்ற விபரம் தெரியவருகின்றது. இக் கோயிலில் ஸிகாரியம் பார்க்கின்ற குறும்பில் வாசுதேவனார் என்பவர் இக் கோயிலில் இரவில் ஸிபலி பூசை நடத்த ஏதுவாக பல முகம் கொண்ட விளக்குகள் எட்டு வைத்துள்ளார் என்பதை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. இவ்வதிகாரி முதலாம் பராந்தகன் காலத்தில் பணிபுரிந்தவன் என்பதை இக் கோயில் கல்வெட்டுகள் (7) தெரிவிக்கின்றன. எனவே இக்கல்வெட்டு முதலாம் பராந்தகன் காலத்திற்குரியதாகும்



3) ARE 229/1907-S.I.I.Vol -23-No: 229

இக்கல்வெட்டிலும் முற்பகுதி கானாமல் போய்விட்டதால் மன்னர் பெயர் அறிய இயலவில்லை ஆனால் மன்னனின் ஆட்சியாண்டு 14 என்ற விபரம் தெரிவிக்கின்றது. இக் கோயிலில் இறைவன் உணவு உட்கொள்ள, தஞ்சாவூர் திரிபுவனமாதேவிப் பேரங்காடியில் வாய்க்கால் மதகுகளை பேணும் தலைவாயன் எனப்படும் சாத்தன் வடுகன் என்பவன் 95 பொன் எடையுள்ள பொன்னாலான பாத்திரம் ஒன்றை வழங்கினான். இதைத்தவிர வேறுவிபரம் அறிய இயலவில்லை. எனவே இக் கல்வெட்டு எந்த மன்னனுடையது என்ற விபரம் அறியமுடியவில்லை.

4)ARE 232/1907-S.I.I Vol-23:No: 232

இக்கல்வெட்டிலும் முற்பகுதி கானாமல் போய்விட்டதால் மன்னர் பெயர் அறிய இயலவில்லை ஆனால் மன்னனின் ஆட்சியாண்டு 10 என்ற விபரம் தெரிவிக்கின்றது இக் கோயில் ஸிகாரியம் பார்ப்பவன் மகன் ஏதோ நிலம் நிவந்தம் செய்ததாக தெரிவிகின்றது இதைத்தவிர வேறு விபரம் ஏதும் இல்லாததால் இக் கல்வெட்டு எந்த மன்னனுடையது என்று தெரியவில்லை.

5) ARE 233/1907-S.I.I.Vol -23 No:233

இக்கல்வெட்டிலும் முற்பகுதி கானாமல் போய்விட்டதால் மன்னர் பெயரும் ஆட்சியாண்டும் அறிய இயலவில்லை இக்கோயில் இறைவன் திருவோலக்க மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும்பொது தேசி பாட்டு பாடுவதற்கு எழுபணைதேவன் என்பவனுக்கும் அவன் வர்க்கார்த்தார்க்கும் நிலநிவந்தம் கொடுக்கப்பட்டதை இக் கல்வெட்டு தெரிவிக்கின்றது மேலும் இக்கோயில் ஸ்காரியம் பார்ப்பவராக மதுராந்தக வேளாளரைக் குறிப்பிடுகின்றது. இவ்வதிகாரி மதுராந்தக வேளார் உத்தமசோழன் ஆட்சிக் காலத்தில் பணிபுரிந்தவர் என்பதை இக் கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. (8) எனவே இக் கல்வெட்டு உத்தமசோழன் காலத்தைச் சேர்ந்தது ஆகும்.

6) ARE 243/1907-S.I.I.Vol-23 No:243

இக்கல்வெட்டு தொங்கமங்கலத்தை சேர்ந்த ஒருவன் இக் கோயிலுக்கு பொன் தானம் கொடுத்துள்ளான். இதைத்தவிர வேறுவிபரம் ஏதும் இல்லாததால் இக் கல்வெட்டு எந்த மன்னனுடையது என்ற விபரம் தெரியவில்லை. அதனால் இக் கல்வெட்டு எந்த மன்னனுடையது என்று தெரியவில்லை



7) ARE 263/1907-S.I.I. Vol;23 No:263

இக்கல்வெட்டில் முற்பகுதி சிதைந்துள்ளதால் மன்னர் பெயரும் ஆட்சியாண்டும் தெரியவில்லை. தேவனூருடையான் குமரன் சர்ப்பதேவன் என்பவன் இறைவன் கருவறையில் இரண்டு நுந்தா விளக்கும் இரண்டு நிலை விளக்கும் எரிய 75 கழஞ்சு பொன் தானம் கொடுத்தான் இதைத் தவிர வேறு விபரம் பெறமுடியாததால் இக் கல்வெட்டு எந்த மன்னனுடையது என்று தெரியவில்லை

8) ARE 267/1907 –S.I.I.Vol 23-No:267

லிங்கத்தை உதவியாளர் ஒருவருடன் வழிபடும் அடியவர் ஒருவரை குறிப்பிடும் சிற்பத்தின் கீழ் திருத்துருத்திநம்பி சிவசரணசெகரன் என பொறிக்கப்பட்டதை இக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. வேறு விபரம் இல்லாததால் இக் கல்வெட்டு யாருடையது என அறியமுடியவில்லை.

9) ARE 234/1907-S.I.I. Vol-23 No:234

இக்கல்வெட்டு ARE 234/1907 ன் மறு பதிப்பாகும். விடுபட்ட தொடர்ச்சியும் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே மேற்கண்ட 9 கல்வெட்டுகள் கீழ்க்கண்ட விபரப்படி உள்ள மன்னர்களுடையது என அறியலாம்.

முதலாம் பராந்தகன்-------------------------------- -1
உத்தமசோழன் ---------------------------------------- 2
மன்னர் பெயர் அற்றது --------------------------- 5
மறுபடியும் பதியப்பெற்றது------------------------1
------------------------
9
------------------------

பொதுவில் உள்ள பரகேசரி கல்வெட்டுகள், இராஜராஜகேசரி கல்வெட்டுகள், குலோத்துங்கன் கல்வெட்டுகள், திரிபுவனச் சக்கிரவர்த்திகள் இராஜராஜன் கல்வெட்டுகள் கோனரின்மைகொண்டான் கல்வெட்டுகள் மற்றும் மன்னர் பெயர் அற்ற கல்வெட்டுகள் ஆகியவற்றை பரிசீலத்ததில் திருவிடைமருதூர் கல்வெட்டுகள் கீழ்க்கண்ட மன்னர்களுடையது என வகைப்படுத்தலாம்.

முதலாம் பராந்தகன்------------------------------------------------------------- 32
கண்டராதித்தன் ------------------------------------------------------------------ 1
அரிஞ்சன் ------------------------------------------------------------------------------ 1
சுந்தர சோழன் --------------------------------------------------------------------- 3
ஆதித்த கரிகாலன் --------------------------------------------------------------- 5
உத்தமச் சோழன் ----------------------------------------------------------------- 11
முதலாம் இராஜராஜன் ---------------------------------------------------------- 6
முதலாம் இராஜேந்திரன் -------------------------------------------------------- 4
முதலாம் இராஜாதிராஜன் ------------------------------------------------------ 1
முதலாம் குலோத்துங்கன் ----------------------------------------------------- 7
விக்கிரம சோழன் ------------------------------------------------------------------- 29
இரண்டாம் குலோத்துங்கன் ----------------------------------------------------- 3
மூன்றாம் குலோத்துங்கன்-------------------------------------------------------- 7
- மூன்றாம் இராஜராஜன் ------------------------------------------------------------ 7
கோப்பெருஞ்சிங்கன் ---------------------------------------------------------------- 1
குலசேகர பாண்டியன் -------------------------------------------------------------- 1
விக்கிரம பாண்டியன் -------------------------------------------------------------- 1
விருபாட்சன் ----------------------------------------------------------------------------- 1
சதாசிவன் ------------------------------------------------------------------------------------ 1
பரகேசரிவர்மன் --------------------------------------------------------------------------- 15
இராஜகேசரிவர்மன் --------------------------------------------------------------------- 5
காணாமல் போன மசிப்படிகள் --------------------------------------------------- 2
மீண்டும் பதியப்பெற்ற கல்வெட்டுகள் -------------------------------------- 2
மன்னர் பெயர் அற்ற கல்வெட்டுகள் ---------------------------------------- 5
------------------------
கூடுதல் ----------------------------------------------------------------------- 151
------------------------

இனி 149 (காணாமல் போன 2 மசிப்படிகள் தவிர ) கல்வெட்டுகளின் அடிப்படையில் திருவிடைமருதூர் கோயில் மற்றும் சூழ இருந்த மக்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை ஒவ்வொரு தலைப்பின் கீழ்க் காணலாம்.

1) பன்னிரு திருமுறை-மூலமும் உரையும்—ஜீ.ச.முரளி-பக்கம்-57
2) பிற்காலச் சோழர் சரித்திரம் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்-அமிழ்தம் பதிப்பகம் பக்கம்-84
3) பிற்காலச் சோழர் சரித்திரம் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்-அமிழ்தம் பதிப்பகம் பக்கம்-108
4) பிற்காலச் சோழர் சரித்திரம் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்-அமிழ்தம் பதிப்பகம் பக்கம்-182
5) S.I.I. Vol-5 No:706, S.I.I. Vol-23 No:288, S.I.I. Vol-23 No:310
6) S.I.I. Vol-19 No:346,
7) S.I.I. Vol-5 No:721, S.I.I. Vol-23 No:250
8) S.I.I. Vol-19 No:162, S.I.I. Vol-23 No:233

( வளரும் )

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.