http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 55
இதழ் 55 [ ஜனவரி 24 - ஃபிப்ரவரி 15, 2009 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
சங்கச்சாரல்
அவள் ஒருவனைக் காதலித்தாள். அந்தக் காதலைத் தோழி செவிலிக்குத் தெரிவித்தாள். செவிலி காதலியின் தாய்க்குத் தகவல் தந்தாள். இதற்கிடையில் காதலியை மணக்க விரும்பிய தலைவன் பெண் கேட்டு அவள் வீட்டுக்குத் தன் உறவையும் சுற்றத்தையும் அனுப்பினான். நடந்தவை எவையும் அறியாத பெண்ணின் தந்தையும் தமையன்களும் தங்கள் குலக் கொழுந்திற்கு இதனினும் சிறந்த இடம் தகுமெனக் கருதி மறுக்க முனைந்தனர்.
நிலைமையறிந்த தாய் (அகம் 234) உடன் தலையிட்டாள். ‘பெண்கேட்டு நெடுந்தொலைவிலிருந்து வந்துள்ளனர். அவர்களுடைய வழிநடை வருத்தம், முயற்சி இவற்றை எண்ணுங்கள். உங்களுடைய குலப்பெருமையையும் கருதுங்கள். விலையுயர்ந்த மணிகளை அள்ளி வரும் அருவிகள் பல வீழும் வானளவு உயர்ந்த குன்றத்தின் தலைவனுக்குப் பெண் கேட்டு, அக்குன்றையே நம் மகளின் இளமுலைகளுக்கு விலையாக அளிக்க வந்துள்ளனர். அந்தப் பெருந்தன்மையை மதித்து அவர்களிடம் மணவினை கொள்வது நன்று. அங்ஙனமின்றி, நம் மகளின் மதிப்பு இவ்வளவுதானா என்று கருதுவீர்களாயின், இல்லைதான். கழுமலப்போரில் எதிர்த்தாரை அவர்தம் கொற்றக்குடையுடன் கைப்பற்றிய நல்ல தேர்களை உடைய செம்பியனின் பங்குனித்திங்களில் விழாவெடுத்துக் கொண்டாடும் தலைநகரமான உறையூரையும் உள்ளிவிழா நிகழ்தற்குக் களமான சேரர்களின் தலைநகரமான வளம் நிறை வஞ்சியையும் சேர்த்தளித்தாலும் அவை இவள் முலைகளுக்கு ஒப்பான விலையாகா! அவையும்கூட இவள் தகுதியின் முன் மிகச் சிறியனதான்! என்றாலும், தேடி வந்தாரை மறுத்துவிடாதீர்கள். ’ தாயின் இந்த மதிநுட்ப உரை தந்தைக்கு உண்மையை உணர்த்தியது. தாய் சொல்லிக்காட்டிய குடிப்பெருமை, மகள் ஏற்கனவே குன்றத்தானுடன் கொண்டிருந்த உறவைக் குறிப்பாகச் சுட்ட, மாறியது உள்ளம்; மலர்ந்தது மன்றல். அகம் : 234 கார்பயம் பொழிந்த நீர்திகழ் காலை, நுண்ணயிர் பரந்த தண்ணய மருங்கின், நிரைபறை அன்னத்து அன்ன, விரைபரிப் புல்உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய, வள்புஒருங்கு அமையப் பற்றி, முள்கிய பல்கதிர் ஆழி மெல்வழி அறுப்பக், கால்என மருள, ஏறி, நூல்இயல் கண்நோக்கு ஒழிக்கும் பண்ணமை நெடுந்தேர் வல்விரைந்து ஊர்மதி!- நல்வலம் பெறுந! ததர்தழை முனைஇய தெறிநடை மடப்பிணை ஏறுபுணர் உவகைய ஊறுஇல உகள, அம்சிறை வண்டின் மென்பறைத் தொழுதி முல்லை நறுமலர்த் தாதுநயந்து ஊத, எல்லை போகிய புல்லென் மாலைப் புறவுஅடைந் திருந்த உறைவுஇன் நல்ஊர், கழிபடர் உழந்த பனிவார் உண்கண் நல்நிறம் பரந்த பசலையள் மின்நேர் ஓதிப் பின்னுப்பிணி விடவே. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |