![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 64
![]() இதழ் 64 [ அக்டோபர் 15 - நவம்பர் 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
கோயில்களுக்கு நிலங்களை கொடையாக வழங்குவதாகவோ, அல்லது கோயிலுக்கு நிலம் விற்பதாகவோ பல கல்வெட்டுகள் இருக்கின்றன. அப்படி வழங்கப்படும் நிலங்களை பெரும்பாலும் இறையிலி நிலமாக அதாவது வரிகள் எதுவும் செலுத்த தேவையில்லாத நிலங்களாக செய்து வழங்குவது வழக்கம். அப்படிப் பல கல்வெட்டுகளை காண்கிறோம். ஒரு சில கல்வெட்டுகள் என்னென்ன வரிகள் நிலங்களுக்கு இருந்தன என்று கூறுகின்றன. இறை, எச்சோறு, வெட்டிவேதினை, அந்தராயம் முதலிய பல வரிப்பெயர்கள் கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன. நிலம் விற்கும்பொழுது நிலத்திற்கான தொகையுடன் கூட, அந்நிலத்தை இறையிலியாக செய்வதற்காகவும் சேர்த்து காசு வழங்கப்பட்டதை சில கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அப்படியொரு கல்வெட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில், வேதாரண்யத்திலுள்ள வேதாரண்யேசுவரர் கோயிலில் உள்ள ராஜராஜரின் 22ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு. கல்வெட்டு வரிகள் (முதல் 24 வரிகளில் ராஜராஜரின் மெய்க்கீர்த்தி இருக்கிறது. அவ்வரிகள் நீங்கலாக 25ம் வரியிலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது). கல்வெட்டு வரிகள்: 25 கேசரிவற்மரான ஸ்ரீராசராசதே 26 வற்கு யாண்டு உயஉ ஆவது த 27 ஞ்சாவூ ருள்ளாலைப் பெரிய[ங்] 28 காடி வயாபாரி விழியூருடை[யா] 29 ன் ஆச்சன் பிரம்மாதம[ல்ல] 30 ன் தாயனாச்சனுக்கு[ந் த]மைய 31 ன் ஆச்சன் தாயனுக்குந் தம்பி 32 மார்த் திருமறைக்காடுடை[ய மஹா]தேவற் 33 கு பீடபூஜை செய்வதற்கு நிவந்தம் செய் 34 ய வைத்த காசு இருபது இக்காசில் விலை த்ரவயம் [ய இ] 35 [க்]காசு பத்தும் இறை க[ழி]ப்பதற்கு காசு பத்தும் இக்காசு இ 36 ருபதும் இ தேவர் சண்டேஸ்வரப்பெருமானிடைக்கொண்டு 37 இந்நாட்டு ப்ரம்மதேயம் [கு]திகை சதுர்வேதிமங்கலமா 38 ன இறையான்மங்கலத்து ஸபையோம் விற்றுக்கு[டு] 39 த்த நிலம் இத்த............வெலிக்கு கீழ்பாற்கெல்லை கா 40 வற்காணி உ........தென் சக்ரபாணி கங்கன் பக்கல் ... கொண்டுடைய நில[த்து] 41 க்கு மெற்கு தென்பாற்கெல்லை கரை வாய்க்காலுக்கு வடக்கு வடபாற்கெல்லை வாதூளி 42 சந்திர னாரூரான் [கிள]ற்தலை [கணி] நான்மாவுக்குத் தெற்கும் இவ்விசைந்த பெருநான்கெல்லை 43 யிலு மகப்பட்ட நிலம் வேலி ய மிகுதிக்குறைவுள்ளடங்க விற்று இந்நிலத்தால் 44 வந்த இறையும் எச்சோறும் வெட்டிவேதினையும் மற்றும் கொற்ற வாசலி 45 ற் பொந்த குடிமை எல்லாம் நாங்களே இறுப்பதாக இச்சண்டேஸ்வரப் பெரு 46 மாளுக்கு விற்றுக்குடுத்தோம் இறையான்மங்கலத்து ஸபையோம் 47 இன்நிலங்[கொண்டு] சந்திராதித்தவல் நிசதமும் இரவு ஸந்தியில் ஓட்.. 48 க்கட்டுவ...ச..ங்களாற் சமைத்த பலகை கொண்டு பீடபூஜை 49 செய்யக் கடவோமானோம் திருமறைக்காட்டு ஸ்ரீ கோயிலுடையோம் 50 இது பன்மாஹேஸ்வரர¨க்ஷ இ[ந்]நிலத்துக்கு மேலெல்லிலையும் சந்திர 51 சேகரனாரூராற் நிலத்துக்கு கிழக்கு கல்வெட்டுச் செய்தி: தஞ்சாவூர் பெரியங்காடியைச் சேர்ந்த வியாபாரி விழுயூருடையான் அச்சன் பிரம்மாதமல்லனென்பவன், குதிகை சதுர்வேதிமங்கலத்து சபையாரிடம் 10 வேலி நிலத்தை 20 காசிற்கு இறையிலியாக வாங்கி அந்நிலத்தை திருமறைக்காடுடையாருக்கு பீடபூஜை செய்வதற்காக கொடையாக வழங்கிய செய்தியை தெரிவிக்கின்றது. இதில் 10 காசு நிலத்திற்கான தொகையாகவும், அதற்கு ஈடாக மேலும் 10 காசு அந்நிலத்தை இறையிலியாகச் செய்வதற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது. கடலூரிலுள்ள திருச்சோபுரத்தில் இருக்கும் மங்களபுரீசுவரர் கோயிலில் உள்ள சுந்தரபாண்டியரின் 13ம் ஆட்சியாண்டு கல்வெட்டு மேலும் பல வரிகளின் பெயர்களைத் தருகிறது. எழுத்தமைதியின்படி இக்கல்வெட்டு 13ம் நூற்றாண்டைச் சேர்ந்ததெனக் கொள்ளலாம். கல்வெட்டு வரிகள்: 1 ஸ்வஸ்திஸ்ரீ 2 ஸ்ரீமேற்கித்திக்குமேல் (மெய்க்கீர்த்திக்குமேல் என்று படிக்கவும்) 3 திருபுவனச்சக்கரவத்தி 4 கோனேரிமேல்கொண் (கோனேரின்மை கொண்டான் என்று படிக்கவும்) 5 டான் ஸ்ரீசுந்தரபாண்டியதே 6 வற்க்கு யாண்டு பதின்மூன்றாவதின் 7 எதிராமாண்டு வ்ரிச்சிக நாயற்று [பூ] 8 ர்வபக்ஷத்து தஸமியும் ஸநிக்கிழ¨ 9 மயும் பெற்ற சோதிநாள் இராஜாயி 10 ராஜவளநாட்டு மேற்காநாட்டு கீழ்வ 11 ழி தியாகவல்லிப்பற்றான ஆண்டாகளூ 12 ர்ப்பற்றில் தியாகவல்லி உடையார் திருச்சோபு 13 ரமுடையநாயனார் கோயில் தானத்தார்க்கு 14 இன்னாயநார்க்கு நம் பேரால் கட்டின சுந் 15 தரபாண்டியன் சந்திக்கும் திருநாளுக்கும் அமு 16 துபடி சாத்துப்படி உள்ளிட்டு வேண்டும் நித் 17 தநிமந்தங்களுக்கும் திருப்பணிக்கும் உடலா 18 க இன்னாயனார் பழந்திருநாமத்துக்காணிய 19 ¡ய் இறையிற் கூட்டின இவ்வூர் நன்சைநில 20 ம் பதிற்று வேலியும் நான்கெல்லைக்குட்ப 21 ட்ட மேடுந் திடரும் காடும் களரிலும் திருத்தி 22 ப்பயிர்ச் செய்துகொள்ளலாம் நிலமும் பதி 23 ன்மூன்றாவதின் எதிராமாண்டு காத்திகைமா 24 த முதல் முதல் அடங்க திருநாமத்துக்கா 25 ணி இறையிலியாகக் குடுத்தோம் இன்னி 26 லத்து காரும் மறுவும் ஒருபூவும் கடைப்பூவு 27 ம் கரும்பு செங்கழுநீர் வாழை இஞ்சி மஞ்ச 28 ள் தெங்கு கமுகு பலாமரம் கொழுந்து உள்ளி 29 ட்ட வான்பயிரும் மானவாரி 30 புழுதிநெல்லும் வரகு கேழ்வ 31 ரகு எள்ளு வழுதலை பாகல் உள்ளி 32 ட்ட புன்பயிரும் செய்துகொள்வா 33 ர்களாகவும் இன்னிலத்தால் வரு 34 ம் நெற்கடமை காசுகடமை மாவ¨ 35 ட குளவடை நிராணி புன்பயிர்க்கட¨ 36 ம பொன்வரி அந்தராயம் காணிக்கை கா 37 த்திகைப்பச்சை அபிஷேக கைக்காணி 38 துலாபாரவரி பஞ்சிபிலி சந்திவிக்கிரம 39 பெறு கிற்றுவரி வாசல்வினியோகம் சிறைஅச்சு இலாஞ் 40 சினைப்பெறு ஆனைச்சாலை குதிரைப்பந்தி ஆண்டெழு 41 த்து தேவை வெட்டி நிலை ஆள்அமஞ்சி கூற்றிலக்¨ 42 க கடைக்கூட்டிலக்கை சீகாரியப் பெறு நாட்டுவி 44 னியோகம் உள்பட்ட அனைத்து உபாதிகளும் இவ்வூ 45 ர் நான்கெல்லைக்குள்பட்ட செட்டிறை தறியிறை அழுக 46 ல்சரக்கு ஆயம் வாலமஞ்சாடி தட்டொலி தட்டாரப்ப 47 ¡ட்டம் காடுகாவல் சிருகடை யீழம்புன்சை செக்கிறை 48 மக[ம்]மை உள்ளிட்ட அனைத்தாயங்களும் உபாதி உள்ப 49 ட முதல[டங்க இறையி]லியாக வரியிலும் கழித்தோம் 50 இப்படிக்கு இந்த ஓலையே சாதனமாக கொண்டு சந்திரா 51 தித்தவரையும் செல்வதாக கல்லிலும் செம்பிலும் வெட் 52 டி[க்]கொண்டு பூசையும் திருப்பணியும் திருநாளும் தாழ்வ 53 ற நடத்தி போதுக ___ இவை நெட்டூருடையான் இளை 54 யாழ்வான் காலிங்கராயன் எழுத்து இவை நெட்டூருடை 55 யான் எழுத்து இவை...........வல்லவராயன் எழுத்து கல்வெட்டுச் செய்தி: தியாகவல்லிப்பற்று என்று பெயர்பெற்ற ஆண்டாகளூர்ப்பற்றில் உள்ள தியாகவல்லி உடையார் திருச்சோபுரமுடையநாயனார் கோயில் தானத்தார்க்கு 10 வேலி புன்செய் நிலம் இறையிலியாக கொடை வழங்கப்பட்டதை குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் 34 முதல் 44ம் வரி வரை பல ஆயம் அல்லது வரியின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.. அப்பா! எத்தனை வரிகள். எல்லா காலத்திலும் இந்த எல்லா வரிகளும் இருந்தன என்று கூறமுடியாது.. வெவ்வேறு அரசர்கள் காலத்தில், வெவ்வேறு வகையான வரிகள் விதிக்கப்பட்டிருக்கலாம். அதே போல நிலத்தின் தரத்தைப் பொறுத்தும் வரிகள் மாறுபட்டன. நன்செய் நிலத்திற்கு ஒரு சில வரிகளும், நல்ல தரமான புன்செய் நிலங்களுக்குப் பல வரிகளும் விதிக்கப்பட்டன. இந்த கல்வெட்டு கொடுக்கும் வரி அதாவது ஆயங்களில் சில குளத்தை பராமரிக்கவும், யானை குதிரை முதலியவற்றை பராமரிக்கவும், இப்படி வேறு பல்வேறு செயல்பாடுகளுக்காகவும் விதிக்கப்பட்டன. அந்தராயம் என்பது லாபத்தில் ஒரு பங்கை வரியாகக் கொடுப்பது. அழுகல்சரக்குக்காக கூட ஒரு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. வரிப்பெயர்கள் பலவாக இருந்தாலும் விதிக்கப்பட்ட வரிப்பணம் குறைவாக இருந்ததா அளவுக்கதிகமாக இருந்ததா என்பது இக்கல்வெட்டின் மூலம் தெரியவில்லை. இவ்வளவு வரியினையும் கொடுக்க முடியாது நிலச்சொந்தக்காரர்கள் துன்பப்பட்டார்களா என்பதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கவில்லை. ஆனால் வரி கொடுக்கமுடியாமல் துன்பப்பட்டு வரிவசூலிப்பவனின் பயமுறுத்தல் தாங்காது விஷம்குடித்து ஒரு பெண் மாண்டுபோனதை ஜம்பையில் ஜம்புநாதசுவாமி கோயிலில் உள்ள 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த இராஜேந்திர சோழரின் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டொன்று தெரிவிக்கின்றது.. கல்வெட்டு வரிகள்: முதல் வரியில் தொடங்கும் மெய்க்கீர்த்தி ஐந்தாம் வரியில் முடிவடைகிறது. ஐந்தாம் வரியிலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. 5 மெய்க்கீர்த்தி முடிவு கொப்பரகேசரிபன்மரான உடையார் ஸ்ரீராஜேந்திரதேவற்[கு] யாண்[டு] ஙு வது வாணகோப்பாடியான ரா 6 ஜெந்த்ர வளநாட்டு பெண்ணைத் [¦]தன்கரை நரிப்பள்ளிநாட்டு கூகுர்ப்பாடி யிருக்கு[ம்] மலையமான் காட்டிமேலூருடையான் பழங்கூரன் கு 7 ன்றன் மேற்படியூரிருக்கும் வீரர்பு[த்]திரன் தாய் சே[ந்]தன் உமையாளை இறைகாட்ட அவள் இறைகடவெனல்லெனென்று சொல்ல [அ]வளை 8 கொச்செய்விக்க அவள் நஞ்சு குடித்து சாவ நான்கு திசை பதினெண்பூமி நாநாதேசியும் கூட நி[¨]ரந்து இந்த பழங்கூரன் குன்றன்மேல் ப 9 ழியாக்கி [இ]வன்மெ லிந்த பழிதீர கொண்ட நடையாவது வாளையூராகிய ராஜேந்த்ரபுரத்து திருத்தான்தோன்றி மாதேவர்க்கு திருநுந்தாவிளக் 10 கொன்று வை[க்க]க் கடவனாக்கி இவன் வைத்த காசு முப்பத்திரண்டு இக்காசு முப்பத்திரண்டு வாளையூரா[கிய] ராஜேந்த்ரபுரத்து நகரத்தோம் கொண்டே[¡] 11 ம் கொண்டு அருமொழிதேவ[ன்] மரக்காலோடு ஒக்கும் உழக்கால் நிசதம் உழக்கெண்ணை அட்டக்கடவோம் இவ்வெண்ணை வணிக்கிராமத்தோம் 12 இருகூறும் சங்கரபாடியோம் ஒருகூறும் சந்திராதித்தவல் இது பன்மாஹேஸ்வரர் ர¨க்ஷ. கல்வெட்டுச் செய்தி: பழங்கூரன் குன்றன் என்ற இறை அதிகாரி சேந்தன் உமையாள் என்ற பெண்ணிடம் இறை கேட்க அவள் அந்த இறை கொடுக்கமுடியாத நிலைமையில் இருப்பதாகக் கூறினாள். அப்படியும் அவளை இறை கொடுத்துத்தான் ஆகவேண்டுமென பழங்கூறன் பயமுறுத்த அவள் விஷம் குடித்து மாண்டுபோனாள். இதனை விசாரித்த நான்குதிசை பதினெண்பூமி நாநாதேசிகள் பழங்கூரன் குன்றன்மேல் பழிசொல்லி அப்பழி நீங்க 32காசு திருத்தான்தோன்றி மகாதேவர் கோயிலில் விளக்கெரிக்க கொடுக்கவேண்டுமென சொல்ல அவனும் அப்படியே கொடுக்கிறான். அக்காசை கொண்டு வாளையூர் நகரத்தவர்கள் அருமொழி உழக்கு என்ற அளவையினால் வணிக்கிராமத்தவர்களிடமிருந்து இருகூறு எண்ணையும் சங்கரபாடியை சேர்ந்தவர்களிடமிருந்து ஒருகூறு எண்ணையும் பெற்றுக் கொள்ள இசைந்தனர். முதலில் கொடுக்கப்பட்டுள்ள இராஜராஜர் காலத்தில் ஒரு நிலத்தின் விலையே பத்து காணி நிலத்தின் விலையே பத்து காசுதான். அப்படியிருக்க 32 காசு என்பது பெரிய தொகையாகவே அக்காலத்தில் இருந்திருக்குமெனத் தோன்றுகிறது. இந்த கல்வெட்டில் வரும் இறை நிலத்திற்கான இறைதானா அல்லது வேறு ஏதாவது ஒரு இறையா என்பது தெரியவில்லை. இக்கல்வெட்டிலிருந்து வரிசெலுத்தமுடியாத நிலையிலும் சிலர் இருந்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |