http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 68
இதழ் 68 [ பிப்ரவரி 27 - எஸ். ராஜம் சிறப்பிதழ் ] இந்த இதழில்.. In this Issue.. |
"நீ பிறவாப் பிறப்பில்லை; உன்னைப் பிறப்பித்தோரும் இல்லை" என்று சங்கப் புலவர் கடுவன் இளவெயினனார் மூன்றாம் பரிபாடலில் மாயோனைச் சிறப்பித்துப் பாடுகின்றார். வைணவம் போற்றும் பாஞ்சராத்ரமும் அதன் வியூகமூர்த்திகளும் சங்க காலத்திலேயே தமிழகத்தில் பரவலாக அறியப்பட்டிருந்தனர் என்பதனைப் பரிபாடலின் வரிகளின் மூலம் அறியலாம். ஆளவந்தாரும் இராமானுஜரும் வாழ்ந்த காலத்தில்தான் பாஞ்சராத்ர ஆகமங்கள் போற்றப்பட்டுப் பிரபலமடைந்தன என்றாலும்கூட சங்ககாலம் முதலே இவை தமிழர்களால் அறியப்பட்டுப் போற்றப்பட்டுள்ளன. பாஞ்சராத்ரம் போற்றும் நால்வகை வியூகமூர்த்திகளான 1) வாசுதேவன் 2) சங்கர்ஷணன் 3) பிரத்யும்னன் 4) அநிருத்தன் பற்றிய குறிப்புகளை இனி பரிபாடல் தனில் காணலாம். "செங்கட் காரி கருங்கண் வெள்ளை பொன்கட் பச்சை பைங்கண் மாஅல்" - மூன்றாம் பரிபாடல் : 81-82 விளக்கம்: செங்கட் காரி - சிவந்த கண்களையுடைய வாசுதேவனே! கருங்கண் வெள்ளை - கரிய கண்களையுடைய சங்கருடணனே! பச்சையென்பது பிரத்தியும்நன் என்னும் வடமொழித் திரிபு. பைங்கண் மால் - பசிய உடம்பினையுடைய அநிருத்தனே! இவ்வாறாக நான்கு வியூகமூர்த்திகளும் பரிபாடல் கவிஞரால் போற்றப்படுகின்றனர். இதன்மூலம் பாஞ்சராத்ரம் சங்ககாலத் தமிழகத்தில் அறியப்பட்டுள்ளது என்பது தெளிவு. சிலர் உரைப்பதுபோல் காஷ்மீரத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்தடைந்த ஆகமம் அல்ல இது. பின்னாளில், இராமானுஜர் தம்முடைய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்துக்குச் சரணாகதி தர்மத்துக்கும் பிரமாணமாகப் பாஞ்சராத்ர ஆகமங்களை ஆதரித்தார். சங்கத் தமிழர்களால் அறியப்பட்டுப் போற்றப்பட்டுள்ளனர் பாஞ்சராத்ர வியூகமூர்த்திகள் என்பது பரிபாடல் பதிவின் மூலம் தேற்றம். (பாஞ்சராத்ர குறிப்புகள் பரிபாடலில் தேடினால் கிடைக்கும் என்றுரைத்த டாக்டர். இரா. கலைக்கோவன் அவர்களுக்கு என் நன்றிகள் பல.) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |