![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 78
![]() இதழ் 78 [ டிசம்பர் 16 - ஜனவரி 17, 2011 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம். எப்படியும் மாதத்துக்கு ஒன்றிரண்டு செய்திகள் இதைப்பற்றிப் பத்திரிகைகளில் வந்து விடுகிறது. நம் பத்திரிகைகளும் தமது அரிய சேவைகளான நடிகைகளின் கிசுகிசுக்களுக்கும் அரசியல்வாதிகளின் கட்டப் பஞ்சாயத்துகளுக்கும் இடம் தருவதை விடுத்து இது போன்ற செய்திகளிலும் கவனம் செலுத்துகின்றனவே என்றும் தொல்லியல் துறை இப்படியாவது பொதுமக்களின் கண்களில் படுகிறதே என்றும் சற்று ஆறுதல் கொள்ளலாம். அருங்காட்சியகங்களுக்குச் சென்று வந்தவர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருப்பார்கள். எந்தச் சிலை எந்த ஊரில் எப்போது கண்டெடுக்கப்பட்டது என்று ஒவ்வொரு சிலை அல்லது செப்பேடு அல்லது நாணயத்தின் கீழும் எழுதி வைத்திருப்பார்கள். இவை அனைத்தையும் தொல்லியல் துறையினரே தேடிக் கண்டுபிடித்திருப்பார்களா? அது சாத்தியம்தானா? அந்த அளவுக்குத் தொல்லியல் துறையில் ஊழியர்கள் இருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை. ஒரேயொரு துறையால் தமிழகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களுக்குப் பழம்பொருட்களைத் தேடித் தரமுடியாது. அகழ்வாராய்ச்சி நடைபெறும் ஊர்களைத் தவிர்த்த ஒவ்வொரு ஊரிலும் உள்ள புதையல்களை அந்தந்த ஊர்மக்கள்தான் முதலில் பார்க்கின்றனர். காவல்துறை அல்லது தொல்லியல்துறையிடம் ஒப்படைப்பதா வேண்டாமா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். தங்கம் அல்லது வெள்ளிக்காசுகள் கிடைத்தால் அவர்களே பங்கு போட்டுக் கொள்கின்றனர். சிலைகள் அல்லது செப்பேடுகள் ஏதாவது கிடைத்தால் காவல்துறை அல்லது வருவாய்த்துறை வசம் ஒப்படைக்கிறார்கள். இவற்றில் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் சிலைகளும் உண்டு. கண்டெடுக்கும்போது அவ்விடத்தில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. அண்மையில் ஈரோடு அருகே ஒரு கிராமத்தில் தங்கக் காசுகள் நிறைந்த ஒரு பானை கண்டெடுக்கப்பட்டது. அதை அவர்களே பங்கிட்டுக் கொள்ளும்போது ஏற்பட்ட சண்டையில் காவல்துறைக்கு விஷயம் கசிந்து, பறிமுதல் செய்யப்பட்டு, அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேற்சொன்ன பத்திரிக்கைச் செய்தி இதைப்பற்றித்தான். சண்டை வராமலிருந்திருந்தால்? அத்தனை பழம் நாணயங்களும் அருங்காட்சியகங்களுக்கு இழப்புதானே? நம் சொத்தான தொல்லியல் புதையல்கள் நமக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. நம் அனைவருக்குமானவை. எனவேதான், புதையல்களைக் கண்டறிந்தால் உடனே காவல்துறை அல்லது வருவாய்த்துறைக்குத் தகவல் தெரிவிப்பது நாட்டுக்குச் செய்யும் தொண்டாகும். யோசித்துப் பாருங்கள்! சில ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை அருகேயுள்ள செம்பியன் கண்டியூரில் கண்டறியப்பட்ட கோடரியைத் திரு. சண்முகநாதன் அவர்கள் தொல்லியல்துறை வசம் ஒப்படைக்காமல், தானே வைத்துக் கொண்டிருந்திருந்தால்? பழமையான தமிழ் எழுத்துக்களைத் தாங்கிய முற்காலக் கருவி உலகுக்கு அறிமுகமாகாமலேயே போயிருக்கும். ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்களுக்கு 'நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு' என்று வர்ணிக்க வாய்ப்பு இல்லாமலேயே போயிருக்கும். இதுபோன்ற புதையல்களில்தான் தமிழக வரலாறு என்னும் சங்கிலியின் இன்னும் கண்டறியப்படாத கண்ணிகள் ஒளிந்திருக்கின்றன. எனவே, இத்தகைய கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்வது, தமிழர்கள் தம் இன வரலாற்றுக்குச் செய்யும் தொண்டாகும். வரலாற்றுக்கு வெளிச்சம் காட்டுபவர்களை வரலாறு வெளிச்சமிட்டுக் காட்டும் என்பது ஏற்கனவே பலமுறை நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே, இரத்ததானம் செய்வது மட்டுமல்ல; புதையல் தானம் செய்வதும் சமூகசேவைதான். அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |