![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 78
![]() இதழ் 78 [ டிசம்பர் 16 - ஜனவரி 17, 2011 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பொதுவாக பழைய கோயில்கள், ஊர்களில் சில பெயர்களும் பெயருக்கான கதைகளும் வழங்கிவரும். உதாரணமாக திருநெல்வேலியைக் குறிப்பிடலாம். மழையில்லாது பஞ்சத்தில் வாடிய அந்த ஊரில் ஒரு சிவபக்தர் நெல்லை வெயிலில் உலர்த்திவிட்டு ஆற்றுக்கு குளிக்க சென்று சிவபெருமானிடம் மழையை வேண்ட, உடனே மழை பொழிந்தாலும் அந்த பக்தர் தான் காயவைத்த நெல்லைப் பற்றி கவலை கொண்டு ஓடோடியும் வந்து பார்க்க நெல் காயவைத்த இடத்தில் மட்டும் மழைநீரில்லாதது கண்டு அதிசயிக்கும் வகையில் சிவபெருமான் நெல்லை வேலி போல் காத்ததால், அந்த ஊருக்கு அத்தகைய நாமகரணம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த சம்பவம் உண்மையா அல்லது பெயரும், பெயர்க்காரணமும் பின்னாளில் திரிந்ததா என்று தெரியாது. ஆனால் சில கதைகளுக்கும் பெயர்க்காரணங்களுக்கும் ஆதாரம் இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒன்று தான் ஆரியபட்டாள் வாசல். ஆரியபட்டாள் வாசல் என்பது திருவரங்கம் கோயிலில் உள்ள ஒரு வாயிலாகும். இந்த வாயிலுக்கு இத்தகைய பெயர் ஏற்பட்டதற்கு ஸ்ரீரங்கத்தில் ஒரு கதையும் உண்டு. அதாவது ஒரு ஆரிய பிராமணர் வடக்கே உள்ள கௌட தேசத்திலிருந்து ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு காணிக்கையாக தன்னிடமிருந்த மதிப்புமிகுந்த பொருள்களை கொண்டுவந்து, பெருமாள் அவற்றை ஏற்கும் முன்னர் அப்பொருட்களை கோயில் வாயிலில் வைத்துவிட்டு காவலுக்கும் இருந்தார். அதனால் அவ்வாயிலுக்கு அப்பெயர் வந்ததென்று தலவரலாறு. இந்த தலவரலாறைத் தரும் கோயிலொழுகு இது கலி 360ல் நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகிறது. இந்த கலி 360 பழைமையது என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று என்றாலும், இந்த கதை என்னவோ உண்மையாக நடந்ததாகத் தான் இருக்கவேண்டும். இந்தக் கதையை உண்மை என்று நம்பத்தகுந்த ஆதாரம் ஒன்று இக்கோயிலிலேயே இருக்கிறது. ஆமாம் இக்கோயிலில் உள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளில், ஒரு கல்வெட்டு ஆரியன் வாசுதேவ பட்டன் என்பவரைக் குறிப்பிடுகிறது. அதோடல்லாமல் இந்த ஆரியபட்டன் காஸ்மீர தேசத்தவன் என்பதும் கல்வெட்டிலிருந்து தெரியவருகிறது. ஆயினும் கல்வெட்டு ஆங்காங்கு சிதைந்திருப்பதால் இது ஏதோ நிலம் கொடுக்கல் வாங்கல் பற்றியது என்பது தெரியவருகிறதே தவிர ஆரியன் வாசுதேவ பட்டன் கோயிலுக்கு பொருள் வழங்கியாதாக தெரியவில்லை. பொதுவாக இத்தகைய நிலக்கொடைகள், நிலத்தை இறையிலியாக்கி (அதாவது வரி நீக்கி) கொடையாகவோ அல்லது விலைக்கோ ஒருவர் பெயருக்குக் கொடுக்க அவர் அதை கோயில் கடவுளுக்குக் கொடையாக வழங்குவதாக பல கல்வெட்டுகளிலும் காணலாம். அப்படி இக்கல்வெட்டையும் நோக்கினோமென்றால், இந்த ஆரியன் வாசுதேவ பட்டன், கோயிலுக்கு அந்நிலத்தை கொடையாகக் கொடுத்திருக்கலாம் அல்லது நிலவருவாயில் கோயிலுக்கு தேவையான சில பொருட்களை கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கலாம். எதுவாக இருப்பினும் ஆரியன் வாசுதேவ பட்டனென்பவர் காஸ்மீர தேசத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறதல்லவா. ஆகவே இந்த ஆரியபட்டாள் வாயில் என்ற பெயர் 12ம் நூற்றாண்டுக் கல்வெட்டு காட்டும் ஆரியன் வாசுதேவ பட்டன் காரணமாக ஏற்பட்டதென்று துணியலாம் அல்லவா. கல்வெட்டு காலம்: 12ம் நூற்றாண்டு, மூன்றாம் குலோத்துங்கசோழனின் 39ம் ஆட்சியாண்டு. வரிகள்: முதல் வரியிலிருந்து பதினெட்டாம் வரி வரை ஸ்வஸ்திஸ்ரீ புகழ் சூழ்ந்த புணரி அகழ் சூழ்ந்த (என்று தொடங்கும் குலோத்துங்கசோழனின் மெய்க்கீர்த்தி). கல்வெட்டுப்பாடத்தை 18ம் வரியிலிருந்து பார்க்கலாம். 18) விற்றிருந்தருளிய கொவிராஜகெசரிபந்மராந சக்கரவத்திகள் ஸ்ரீ கொலொத்துங்க சொழ தெவற்கு யாண்டு 39(தமிழ் எழுத்துக்களில்) ஆவது ஆழ்வார் திருவரங்கதெவ 19) ர்க்கு ஸ்ரீகாரியஞ் செய்கிற நெடுஞ்செரிக்குடையாநாந புலநி நாராயணமு(வெந்த) வெளாந் ஒலைப்படி ஸ்ரீ[வை]ஷ்ணவவாரியம் நாலூர்த் திருநாடுடை[யா] நம்பியும் 20) இடைவை(ய்)த்[த*] திருவரங்க[மா*]ளி அமுதும் காஞ்சிக்குறி வடகொ[புர*]முடை[யா] நம்பியும் பெரும்புலியூர் வண்டுவராபதி நம்பியும் [பாவ] ஸ்ரீ [வை]ஷ்ணவதாஸநும் 21) இவ்வறுவொம் ஸ்ரீ பண்டாரவாரியம் ஆராவமுது புண்டரிகநும் ஆரிதந் ஸ்ரீராகவ ஸ்ரீ காரிமாறநும் ஆரிதந் கெசவந் தநி இளஞ்சிங்கமும் பா 22)ரதாயந் சிராமந் ஆராவமுதும் கௌசிகந் ஸ்ரீ கண்ணந் செம்பொற் சொதியும் பாரதாயந் அ[ல]கெசுவரந் அ[றி வரி]யாநும் இவ்வனைவொம் ஆழ்வார் கொ 23) யில் ஸபைக்கணக்கு பெரும்புறக்கடல் வாமநந்நாதந் பெரிய கொயில் பிரியநு[ம்] ஸ்ரீ[வை]ஷ்னவக் கணக்கு ஆராவமுது வில்லியாநும் பதி(நெட்டு)நெட்டு ஸ்ரீ.....ரி 24).. இவ்வனைவொம் கஸ்மிரதெஸத்து அநிஷ்டாநத்து ஆரியந் வாஸுதெவபட்டநாந [ராஜராஜப்ரம்ஹாராயற்கு] நாங்கள் ......த்த நிலமாவது ஆழ்வார் 25).........திருமடைப்பள்ளிப் புரமாந இராஜமஹெந்திர வளநாட்டு விளத்தூர் நாட்டு திருமுடிக்கு..றைப்கால காவெரிக்குலை உடைந்து...லிடாய்ப் பயிர்ச்சை 26)............லத்தில் மெல்பாற்கெல்லை ..... குடிக்குலையும் வாய்க்காலுக்கு கிழக்கு வடபாற்கெல்லை ... இப்பழவாய்க்காலுக்கு 27).....க்கு கிழ்பாற்கெல்லை வண்டுறைப் பழவாய்க்கு மெற்கும் தெந்பாற்கெல்லை பெரிய திருவரங்க நிலத்துக்கு வடக்கும் பிடாரித்து .. மெல்நிந்[ற] தகவல்: தென்னிந்தியக் கல்வெடுக்கள் தொகுதி 24 (SII Volume XXIV) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |