http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 79
இதழ் 79 [ ஜனவரி 16 - பிப்ரவரி 17, 2011 ] இந்த இதழில்.. In this Issue.. |
பல மாவீரர்களைத் தமிழன் வரலாறு சந்தித்த காலம் அது. வீரம் விளையாடிய சங்ககாலம் அது. போர் என்பது வீர மறக்குடியினரின் வாழ்வியல் மரபாய் விளங்கிற்று அன்றைய தமிழ் மண்ணில். 'மிஞிலி' - பல மாவீரர்களில் இவனும் ஒருவன். நன்றி மறவாத பண்பினன். நன்னனின் படைத்தலைவன். நன்னனுக்காய் வாய்மை தவறாத வேள் மரபினனை எதிர்க்கின்றான். ஆய் எயினன் ஒரு மாவீரன், வேள் மரபினன், நன்னனுக்கும் இவனுக்கும் சில காரணங்களால் போர் ஏற்படுகிறது. ஆய் எயினனைப் பொருது வெல்வதற்குத் தனக்குத் துணைபுரிந்தால்தான் "ஊட்டு" போடுவதாக வேண்டிக் கொள்கிறான் மிஞிலி. யாரிடம் நேர்தல் வைக்கிறான்? போர்த் தேவதையான கொற்றவையிடமா? இல்லை. நன்னனது பாழியிலுள்ள பேயிடம் வேண்டிக் கொள்கிறான். பாழிப் பறந்தலையில் போரிட்டு மிஞிலி ஆய் எயினனை வெற்றி கொள்கிறான். அப்போரில் எயினன் இறந்துபட்டான். வெற்றி கிடைத்ததனால் பாழி பேய்க்கு மற்றவரால் செய்தற்கு அரிய வகையில் விழா எடுத்து ஊட்டு எதிர்ந்தான். பரணரின் பாடல் இதோ, "... ... ... நன்னன் பாழி ஊட்டரு மரபினஞ்சுவரு பேஎய்க் கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி புள்ளிற் கேமமாகிய பெரும்பெயர் வெள்ளத்தானை எயினற் கொன்றுவந் தொள்வா ளமலை யாடிய ஞாட்பின்' - அகநானூறு : 142 போர் வெற்றிக்காகக் கொற்றவையை வேண்டுவது சங்ககால வீரமறவர்களின் பழக்கம். இதை ஒட்டியே காளியூட்டும் கணியான் ஆட்டும் என்ற பழமொழி இன்றுவரை தமிழரின் வழக்கில் உள்ளது. தமிழர்களின் சிறு தெய்வ வழிபாடு முறைகளில் சற்றே மாறுபட்டதாய்க் காணப்படுகிறது. இந்தப் பாழி பேய்க்கு ஊட்டுப் போடும் விழா வழிபாடு, நம் தமிழர்கள் பெரும் தெய்வ வழிபாடு மட்டுமல்லாது, இதுபோன்று சிறுதெய்வ வழிபாடு நடத்திய வாழ்வியல் வழக்கம் கொண்டவர்கள் என்பது இப்பாடலின் வழியே தேற்றம். இன்று பல தமிழக, சேர மலைக்கிராமங்களில் இத்தகைய வழிபாடு இன்றும் வழக்கில் உள்ளது. குறிப்பு : இந்தக் கட்டுரை 'ஃபுகுஷிமா 50' என்றழைக்கப்படும் அந்த 50 ஜப்பானியத் தொழிலாளர்களுக்குச் சமர்ப்பணம். தன் உயிரைப் பொருட்படுத்தாது நாட்டு மக்களைக் காக்க விழைந்த அந்த வீரம் தமிழனின் வீரத்திற்கு இணையானது. இயற்பியல் மாணவியான எனக்கு, அணு உலைக் கதிர்வீச்சுதான் முதுநிலை ஆய்வாக அமைந்தது. எனவே, மற்றவரைவிட எனக்கு நன்றாகவே புரியும் அது எத்தகையது என்று; அதன் விளைவு என்னவென்று. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |