![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 108
![]() இதழ் 108 [ ஜூன் 2014 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
சோழர்கள் காலத்தில் கோயில்களின் நிர்வாகம் தனி ஒரு மனிதனால் மட்டும் நிர்வகிக்ப்படுவதில்லை. கோயில் ஸ்ரீ காரியம் ஆராயும் அதிகாரி [இக்காலத்தில் செயல்படும் கோயில் செயல் அலுவலர்],கோயில் தேவகன்மிகள்,ஸ்ரீமாகேஸ்வர்ர்கள் ஆகியோர் கூடி முடிவு எடுத்து செயல்படுவர். இக்கோயில்கள் அன்றைய காலத்தில் பல தரப்பு மக்களின் வாழ்வாதாராமாக விளங்கியமையால் சில அவசியமான நேரங்களில் கிராமத்தில் இயங்கி வந்த மக்கள் சபையும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு, எடுக்கப்பட்ட முடிவில் பங்கும் வகித்தன.. கோயில் அமைந்திருக்கும் கிராமத்தில் உள்ள சபை [அந்தணர்கள் மட்டும் உறுப்பினர்களாய் அமைந்த குழு] அல்லது ஊரார் [வேளாளர்களும் இதர ஊர் மக்களும் உறுப்பினர்களாய் அமைந்த குழு] அல்லது நகரத்தார் [ வணிகர்கள் மட்டும் உறுப்பினர்களாய் அமைந்த குழு] - ஆகிய இம்மூன்று குழுக்களும் தனித்தோ அல்லது மற்ற குழுவுடன் சேர்ந்தோ கோயில் நிர்வாகத்தாருடன் சேர்ந்து கோயில் நிர்வாகம் குறித்துக் கலந்து பேசி முடிவு எடுப்பர். கோயில் நிர்வாகத்தாருள் தேவகன்மிகள், கோயில் ஸ்ரீகாரியம் ஆராய்கின்ற அதிகாரி, மாகேஸ்வரர்கள் ஆகியோர் அடக்கம். ![]() இவர்கள் கூட்டும் கூட்டம் பொதுவாக ஊருடன் தொடர்புடைய கோயிலிலோ அல்லது அவ்வூரில் ஊர் மக்கள் கூடும் பொது இடத்திலோ நடைபெறுவது வழக்கம். கோயிலினுள் ஒரு நிர்வாகக் கூட்டம் கூட்டப்படும் பட்சத்தில் அக்கோயிலின் எந்த இடத்தில் கூட்டம் கூட்டப்பட்டது என்ற துல்லியமான விபரம் பல கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றது. ![]() ![]() பொதுவாக இக்கூட்டம் கோயிலில் உள்ள ஒரு மண்டபத்திலோ அல்லது காவணத்திலோ கூட்டப்படுவது வழக்கம். ஆனால், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில் கல்வெட்டுகள், இக்கூட்டங்கள் அக்கோயிலில் இருந்த நாடகசாலையில் அடிக்கடி நடைபெற்றதாக அரியதோர் தகவலைத் தெரிவிக்கின்றன. இக்கோயிலிருந்து பதிவு செய்யப்பட்ட 151 கல்வெட்டுகளில் 9 கல்வெட்டுகள் கூட்டம் நடைபெற்ற இடம் குறித்தான விபரங்களை கீழ்க்கண்டவாறு தெரிவிக்கின்றன.
இக்கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கும் செய்தியிலிருந்து இக்கூட்டங்க்ளில் திரைமூர் சபையினரும்,திரைமூர் ஊராரும், திருவிடைமருதூர் நகரத்தாரும் கலந்து கொண்டனர் என்று தெரியவருகிறது. மன்னரின் அதிகாரி,கோயில் தொடர்புடையவர்கள், மக்களின் பிரதிநிதிகள் என்ற மூன்று கோணத்திலும் கோயிலின் செயல்பாடுகள் அமைந்திருந்தன. பரகேசரிவர்மனின் 4 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு,இக்கோயில் செங்கல் தளியாய் இருந்தபொழுது கற்பலகைகளில் பொறிக்கப்பட்ட இக்கோயில் தொடர்பான ஆவணங்களின் விபரங்கள், இக்கோயில் சுவர்களில் மீண்டும் பொறிக்கப்பட்டு கற்பலகைகள் கீழே பூமியில் [நிலவறையில்] வைக்கப்பட்டன என்ற விபரத்தினை தருகின்றன. சோழர்கள் தாங்கள் முடிசூட்டிகொள்ளும்போது,பரகேசரி, இராஜகேசரி என்று மாறிமாறி பட்டம் சூட்டிக்கொண்டன்ர. முதலாம் பராந்தகன், அரிஞ்சியன், ஆதித்த கரிகாலன்,உத்தமசோழன் ஆகியோர் பரகேசரி என்று முடிசூட்டிக்கொண்ட முற்சோழர்கள் ஆவர். இவர்களில் , ஆதித்தகரிகாலனின் கல்வெட்டு அவனை ’பாண்டியன் முடித்தலைகொண்ட பரகேசரி’ என்று அழைப்பதாலும் இக்கல்வெட்டு முதலாம் பராந்தகன் அல்லது உத்தமசோழன் அல்லது அரிஞ்சியனை சுட்டுவதாக உணராலாம். இக்கோயில் கல்வெட்டுகள் யாவும் 1907 ஆம் ஆண்டு நடைபெற்ற இக்கோயில் திருப்பணியில் அழிக்கப்பட்ட்தால் தற்சமயம் இக்கல்வெட்டு காண கிடைக்கவில்லை. இக்கல்வெட்டு அழிக்கப்ப்டாமல் இருந்திருந்தால் எழுத்தமைதி கொண்டு முதலாம் பராந்தகனா அல்லது உத்தமசோழனா அல்லது அரிஞ்சியனா என்று முடிவு செய்யலாம். மேலும் முதலாபரந்தகனின் ’மதுரைகொண்ட கோப்பரகேசரி’ கல்வெட்டுகள் இக்கோயிலில் பொறிக்கப்பட்டிருந்தாலும் அவை அசலா அல்லது படி எடுத்து பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளா என்பதை அரியக்கூடஇயலவில்லை முதலாம் பராந்தகனின் கல்வெட்டுகள் கூட்டம் நாடகசாலையில் நடைபெற்றதை சுட்டுவதால் கூட்டம் நடத்திட வசதியுள்ள இடமாய் நாடகசாலை இருந்திருக்க வேண்டும். இந்நாடகசாலை இக்கோயில் கற்றளியாக்கப்படுவதற்கு முன்னரே நல்ல நிலைமையில் இருந்திருக்கவேண்டும். பராந்தகர் காலத்திலே திருவிடைமருதூர் கோயிலிலே நாடகசாலை இருந்துள்ளது என அறியும்போது இவ்வூரில் நாடகக் கலைஞ்ர்களும், ஆடல் கலைஞ்ர்களும் பலர் இங்கு வாழ்ந்து நாடகக்கலையை இக்கோயிலில் சிறப்பான இடத்தைபெற்றிருக்கச்செய்தார்கள் என உணரலாம். பராந்தகருக்குப்பின் இக்கூட்டங்கள் கோயில் காவணங்களில் நடத்தப்பட்டிருப்பதால், பராந்தகருக்கு பின் வந்த மன்னர்கள் காலங்களில் கோயில் வளாகம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு காவணங்கள் ஏற்பட்டிருக்கவேண்டும் நாடககலை வளர இக்கோயில் ஒரு களமாக பயன்பட்டுள்ளது. இக்கோயில் நிர்வாகம் செம்மையாய் நடந்திட இந்நாடகச்சாலை ஒரு களமாக செயல்பட்டுள்ளது என்பதை அறியும்போது திருவிடைமருதூர் கோயில் பக்தியை மட்டும் வளர்க்காமல் கலைகளை வளர்த்த காலப்பெட்டகமாய் நம்முன் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. 1-S.I.I-Vol-3-sl.no:124 2-SI.I.-Vol-5-sl.no:721 3-S.I.I.Vol-23-sl.no:222 4-S.I.I.Vol-23-sl.no:227 5-S.I.I.Vol-23-sl.no:224 6-S.I.I.Vol-3-sl.no:203 7-S.I.I.Vol-5-sl.no:718 8-S.I.I.Vol-19-sl.no:300 9-S.I.I.Vol-23-slno:311this is txt file� |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |