http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 114

இதழ் 114
[ டிசம்பர் 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

ஓவியம்
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 8
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 8
Makeup of Dancers from Sangam Age to Cholas
தலைச்சங்காடு தட்சிணபுரீசுவரர்
தேடலில் தெறித்தவை - 18
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 7
திருப்பணியை எதிர்நோக்கும் சோழர்காலத் திருக்கோயில்
இராமாயணக் காற்று
இதழ் எண். 114 > கலையும் ஆய்வும்
தலைச்சங்காடு தட்சிணபுரீசுவரர்
இரா.கலைக்கோவன், மு.நளினி
தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள தட்சிணபுரீசுவரர் கோயில் 1902 ஜூன் மாதம் 30ம் நாள் திரு. க. கோவிந்தசாமிப் பிள்ளையால் கட்டப்பட்டதாக 1959 ஜூன் மாதம் முதல் நாள் இக்கோயிலைத் திருப்பணி செய்திருக்கும் அவரது மருமகள் திருமதி பட்டம்மாள் இவ்வளாக வாயிலில் அமைத்திருக்கும் கல்வெட்டுக் கூறுகிறது.



துணைத்தளம், உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், உறுப்பு வேறுபாடற்ற உயரமான நான்முகத் தூண்கள் தழுவும் சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரை பெற்றுள்ள எளிய நுழைவாயிலைக் கடந்ததும் கண்களில் படமாகிறது வளாகத்தின் நடுவில் அமைந்துள்ள மாடக்கோயில். அதன் முன்னுள்ள இரண்டடுக்கு மேடையில் கீழடுக்கில் கிழக்குப் பார்வையாகப் பிள்ளையார் சிற்பமும் மேலடுக்கில் மேற்குப் பார்வையாக நந்தியும் உள்ளன. மதிலை ஒட்டிக் கிழக்கில் உள்ள மாளிகை அறைகள் வெறுமையாக உள்ளன. வெளிச்சுற்றின் தென்மேற்கில் ஒருதள வேசர விமானத்தில் பிள்ளையாரும் மேற்கில் முன்றிலுடனான ஒருதளத் திராவிட விமானத்தில் முருகனும் வடபுறத்தே ஒருதள வேசர விமானத்தில் சண்டேசுவரரும் உள்ளனர்.



வெற்றுத்தளம்

2. 26 மீ. உயரமுள்ள வெற்றுத்தளம் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுத்தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுச் செங்கல் கட்டுமானமாக அமைய, அதன் மீது விமானம், முகமண்டபம், மண்டபச் சுற்று, பெருமண்டபம் கொண்டு மாடக்கோயில் பொலிகிறது.



பெருமண்டபம்

பெருமண்டபத்தை அடைய, கிழக்கில் வெற்றுத்தளத்தை ஒட்டித் தெற்கிலும் வடக்கிலும் அமைந்துள்ள பன்னிரண்டு படிகள் உதவுகின்றன. படிகள் முடியுமிடத்தில் உள்ள முன்றில் வளைவில் காளைஊர்தியராக இறைவனின் சுதைவடிவம் உள்ளது. முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுத்தரங்கப் போதிகைகளின் உதவியுடன் கூரை தாங்கும் பெருமண்டபத்தின் வடபுறத்தே தெற்குப் பார்வையாக அகிலாண்டேசுவரி அம்மனின் ஒருதள வேசர விமானமும் முகமண்டபமும் அமைந்துள்ளன. பெருமண்டபத்தின் புறச்சுவர் தாங்குதளமற்ற, வெறுஞ் சுவராக எழுந்து, கூரையுறுப்புகள் பெற்று முடிகிறது. மண்டபத்தின் வட, தென்சுவர்களில் சாளரங்கள் உள்ளன.

அகிலாண்டேசுவரி அம்மன் விமானம், முகமண்டபம்

பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுள்ள அம்மன் விமானத்தின் முத்திசைகளிலும் உள்ள மகரதோரணத் தலைப்பிட்ட கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. விமானத்தின் கட்டமைப்பில் உள்ள முகமண்டபத்தின் கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. பின்கைகளில் அக்கமாலையும் மலர்மொட்டும் கொண்டு, சமபங்கத்தில் விளங்கும் இறைவியின் முன்கைகள் காக்கும் குறிப்பும் அருட்குறிப்பும் கொண்டுள்ளன. தலையில் சடைமகுடம்.



மண்டபச் சுற்று

பெருமண்டபத்தின் மேற்கிலுள்ள வாயில், மண்டபச் சுற்றுக்கு வழிவிடுகிறது. வாயிலின் இருபுறத்தும் காவலர்கள் ஓவியங்களாக நிற்கின்றனர். தெற்கிலும் வடக்கிலும் மேற்கிலும் விரியும் உள்சுற்றின் வண்டிக்கூடு கூரையை நான்முகத் தூண்கள் தாங்குகின்றன. இவ்விரிவிற்கான வாயில்களுள் தென்வாயில் சற்றுச் சிறியதாகவும் வடவாயில் பெரியதாகவும் அமைய, சுவரில் சாளரங்கள் உள்ளன. மண்டபச் சுற்றின் புறச்சுவர் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், சுவர், கூரையுறுப்புகள், சாளரங்கள் பெற்றுள்ளது.



விமானம்

பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் என அமைந்துள்ள விமானத்தின் கீழ்த்தளத்தில் முப்புறத்தும் உள்ள கோட்டப்பஞ்சரங்கள் வெறுமையாக உள்ளன. தென்புறம் கோட்டத்தின் முன் ஆலமர்அண்ணல் சிற்பம் ஒன்று இருத்தப்பட்டுள்ளது. ஒருதளத் திராவிடமாக உள்ள விமானத்தின் கீழ்த்தளம் 5. 15 மீ. பக்கமுடைய சதுரமாக அமைந்துள்ளது. விமானத்தின் கிரீவ கோட்டங்களில் வடக்கில் நான்முகனும் தெற்கில் ஆலமர்அண்ணலும் மேற்கில் விஷ்ணுவும் உள்ளனர்.

விமானத்தின் கட்டமைப்பிலுள்ள முகமண்டபம் உட்புறத்து வெறுமையாக இருக்க, கருவறையில் சதுர ஆவுடையாரின் மீது உயரமான இலிங்கபாணம் இடம்பெற்றுள்ளது.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.