http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 120

இதழ் 120
[ ஜுன் 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

சிராப்பள்ளி முசிறிச் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-3
A Study on Nagaram in Thiruchirappalli District - II
To Sacred Shrines.. with Sacred Hymns..- 1
Chola Ramayana 14
இசையால் இசையும் இடைமருதூர் இறைவன் -2
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 11
திருவல்லம் கம்பராஜபுரம் சிதைந்த திருக்கோயில்
சிறுபாணாற்றுப்படை சுட்டும் மடைநூல்
இதழ் எண். 120 > கலையும் ஆய்வும்
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 11
சு.சீதாராமன்
காமதகன மூர்த்தி குறுஞ்சிற்பம் (குத்தாலம்)


அமைவிடம் - குத்தாலம் சொன்னவாரறிவார் திருக்கோயிலின் முகமண்டபத் தெற்குச் சுவரில் அமைந்துள்ள அகத்தியர் கோட்டத்தின் வலப்புறத் தூணின் வேதிக்கண்டத்தில் 4.5” X 4.5” அங்குலத்திற்குச் செதுக்கப்பட்டுள்ள அற்புதமான குறுஞ்சிற்பம்.



இரு கால்களையும் குறுக்கே மடக்கி யோகாசனத்தில் அமர்ந்துள சிவபெருமான், தனது முன் வலது கரத்தினை ஆசனத்தில் அமர்த்தியும் முன் இடது கரத்தினை தொடையின் மீது அமர்த்தியும் பின் வலது கரத்தில் அக்கமாலையையும் பின் இடது கரத்தில் பாம்பினையும் கொண்டுள்ளார். யோக நிலையில் அமர்ந்துள்ள இவரது பார்வை கீழ்நோக்கியுள்ளது.



கழுத்தில் மாலையொன்றும் முத்துமாலையொன்றும் காணப்படுகின்றன. இறைவன் தனது சடைமுடிகளை ஜடாபாரமாக அலங்கரித்துள்ளார். இடது காதில் பத்ர குண்டலமும் வலது காது வெறுஞ்செவியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இடுப்புப் பகுதியை மார்பிலிருந்து பிரித்துக் காட்டும் உதர பந்தமும் வஸ்திர முப்புரிநூலும் தரித்து தலையில் மண்டையோட்டுடன் காணப்படும் இக்காமதகன மூர்த்தியின் மேல் இருபுறங்களிலும் கந்தர்வர்களும் கீழ் வலப்பக்கத்தில் மன்மதனும் எழிலுடன் காட்டப்பட்டுள்ளனர். கீழ் இடது பக்கத்தில் உள்ள உருவத்தை இச்சிற்பத்தில் சரிவர அடையாளம் காணமுடியாவில்லை. இதே போன்றதொரு குறுஞ்சிற்பம் திருக்கோடிக்கா திருக்கோயிலில் அமைந்துள்ளது. அக்கோயில் சிற்பத்தில் கீழ்ப்புறமுள்ள உருவத்தை இரதியாக அடையாளம் காண முடிவதால் தற்போதைய சிற்பத்தின் கீழ் இடப்பக்கம் உள்ள உருவத்தையும் இரதியாகவே கொள்ள முடியும்.

கிடைத்த இடம் நான்கரை சதுர அங்குலம் மட்டும்தான் என்றாலும் அந்த இடத்திற்குள் இத்தனை உருவங்களை எழிலுறச் செதுக்கிய சிற்பியின் கலைத்திறமை காலம் உள்ளவரை வாழுமல்லவா?
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.