![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 162
![]() இதழ் 162 [ ஃபிப்ரவரி 2022 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பகுதி - 1 இன் தொடர்ச்சி. முகமண்டபத்தை அடுத்த பகுதி அந்தராளம் போன்று வெளிப்பகுதியில் காட்சியளித்தாலும் உள்ளிருந்து பார்க்கும்போது அவ்வாறு தோன்றவில்லை. வெளியிலிருந்து நுழைவாயில் போல் தோன்றும் பகுதி உள்ளிருந்து ஒரு ஜன்னல் போல் காட்சியளிக்கிறது. மகாமண்டபம் முகமண்டபத்தையும் அந்தராளம் போன்ற இந்தப்பகுதியையும் அடுத்து முன்னே உள்ள மகாமண்டபம் தென்புறத்தே ஒரு திறப்பும் கிழக்கில் ஒரு பலகணியும் கொண்டுள்ளது. முறையான பாதபந்தத் தாங்குதள அமைப்பில் எழுப்பப்பட்டுள்ள இம்மண்டபத்தின் சுவர்கள் தூண்களுடன் பத்திப்பிரிப்பின்றிப் போதிகை பெறாமல் எழுகின்றன. தூண்களின் பலகைக்குமேல் போதிகை, உத்திரம், வாஜனம், வலபியின்றிக் கற்களால் எழும் சுவர் மேற்கு, கிழக்கு மற்றும் வடக்கில் கூடுகளற்ற கபோதக்கூரையைத் தாங்குகின்றது. தெற்கில் மட்டும் நுழைவாயிலில் இரண்டு அரைத்தூண்கள் வீரகண்டத்திற்குமேல் போதிகைகள் பெறாமல் உத்திரம், வாஜனம், வலபி பெற்றும் தெற்குச் சுவரின் மேற்கு மற்றும் கிழக்கு மூலையில் அமைந்துள்ள தூண்கள் முறையான உறுப்புகள் பெற்றுக் கூரை தாங்குகின்றன. இத்தூண்களில் அமைந்த போதிகைகளின் மூன்று கைகளில் இரண்டு வெட்டுப்போதிகைகளாகவும் உள்முகமாக உள்ள மூன்றாவது போதிகைக்கை விரிகோணப்போதிகையாகவும் காணப்படுகிறது. மகாமண்டபத்தின் தென்புற வாயில் முன்னால் ஒரு மண்டப அமைப்புக் கொண்டு "முன்றில்" ஆக விளங்குகின்றது. இம்மண்டபத்தை இரண்டு முழுதூண்களும் இரண்டு அரைத்தூண்களும் தாங்குகின்றன. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() கல்வெட்டுகள் இதுவரை படியெடுக்கப்பட்ட ஒன்பது கல்வெட்டுகளும் மகாமண்டபத்திலேயே (முகமண்டபம் என்று SRB பதிவு செய்திருக்கிறார்) கிடைக்கின்றன என்றும் அவை பாண்டியர் (கி.பி. 13 ஆம் நூற்றாண்டு) காலத்தவை என்றும் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆனால் படியெடுக்கப்படாத, முற்றுப்பெறாத துண்டுக்கல்வெட்டுகள் இரண்டு அவரால் கண்டுபிடிக்கப்பட்டதென்றும் அவை முதலாம் ஆதித்தன் காலத்தைச் சேர்ந்தவை என்றும் கோயிலில் உறையும் இறைவன் "சுப்பிரமணிய தேவர்" என்று கல்வெட்டுகள் கூறுவதாகவும் பதிவு செய்திருக்கிறார். மேலும் இக்கோயிலுக்கு மிக அருகில் "விருதராஜ பயங்கர விண்ணகர எம்பெருமான்" என்று கண்ணனூரிலிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் குறிக்கப்பெறும் ஒரு பெருமாள் கோயில் இருந்தமையும் குறிப்பிடப்படுகிறது. இன்றும் அது சிதிலமடைந்த நிலையில் காணக்கிடைக்கின்றது. Ref 1 : Early Chola art by S.R.Balasubramaniyan -Page 86 to 89 Ref 2 : A topographical List of Inscriptions in the Tamil nadu and Kerala States Vol- VI - Page 150 to 153 General number 616 to 624) |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |