http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 172
இதழ் 172 [ அக்டோபர் 2023 ] இந்த இதழில்.. In this Issue.. |
மூலப்பாடம்: காஞ்சி எழுத்துருக்களில் 風をいたみ 岩うつ波の おのれのみ くだけて物を 思ふころかな கனா எழுத்துருக்களில் かぜをいたみ いはうつなみの おのれのみ くだけてものを おもふころかな ஆசிரியர் குறிப்பு: பெயர்: புலவர் ஷிகேயுக்கி காலம்: கி.பி. 10ம் நூற்றாண்டின் பிற்பகுதி. கி.பி. 858 முதல் 876 வரை ஜப்பானை ஆண்ட பேரரசர் செய்வாவின் கொள்ளுப்பேரன் இவர். இருப்பினும் அரண்மனையில் பெரிய பதவிகளை வகிக்கவில்லை. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 67 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்று இருப்பவர். பாடுபொருள்: காதலியின் பாராமுகம் தரும் வலி பாடலின் பொருள்: காற்றினால் உருவான அலைகள் பாறைமீது மோதும்போது அப்பாறை எதுவும் செய்யாது அசையாதிருப்பினும் அவ்வலைகள் தானே சிதறுவதுபோல் அசையாத உன் கல்மனம் அதை நோக்கிவரும் என் இதயத்தை நொறுக்குகிறது. நேரடியாகப் பொருள்தரும் ஓர் எளிய அகப்பாடல். புலவர் தன் நிலையை நேரடியாக விளக்குகிறார். முதல் இரண்டு அடிகள் பாறைமேல் மோதும் அலைகளைக் கூறுகிறது. கடைசி இரண்டு அடிகள் சிதறுவதைக் கூறுகிறது. இடையிலுள்ள 3வது வரி "எனக்கு மட்டும்" என்பதையும் சேர்த்துப் படிக்கும்போது பாறைமீது மோதும் அலைகள் சிதறுவதைபோல் உன் கல்மனத்தின்மீது மோதும் என் இதயமும் சுக்குநூறாகிறது எனும் பொருளைத் தருகிறது. வெண்பா: காற்றால் தவழும் அலையின் வடிவமதைத் தேற்றார் புரையச் சிதைத்திடும் - வேற்றாள் புரையக் கரையாத வஞ்சியின் நெஞ்செனும் கல்லால் உடையும் மனது தேற்றார் - பகைவர் வேற்றாள் - அந்நியப்பெண் (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |