http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 172

இதழ் 172
[ அக்டோபர் 2023 ]


இந்த இதழில்..
In this Issue..

கலை, இலக்கியத்தில் பேய், பிசாசு, பூதம்
MUSICAL INSTRUMENTS OF THE ANCIENT TAMILS: PART IV- THIMILAI AND IDAKKAI
MUSICAL INSTRUMENTS OF THE ANCIENT TAMILS: PART III- DAMARUGAM AND UDUKKAI
ஜப்பானியப் பழங்குறுநூறு - 50 (இறப்பினும் வாழினும் ஒந்தொடிகண்ணே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 49 (விளக்கன்ன ஒளிர்தலும் தணிதலும்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 48 (இதயஅலை மோதும் மனக்கல்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 47 (நலிவுதான் தனிமைக்குத் துணையோ?)
இதழ் எண். 172 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 49 (விளக்கன்ன ஒளிர்தலும் தணிதலும்)
ச. கமலக்கண்ணன்

மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்

みかきもり
衛士のたく火の
夜は燃え
昼は消えつつ
物をこそ思へ

கனா எழுத்துருக்களில்
みかきもり
ゑじのたくひの
よるはもえ
ひるはきえつつ
ものをこそおもへ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் யொஷினொபு

காலம்: கி.பி. 921-991.

கொக்கின்ஷூ இலக்கியம் தொகுக்கப்பட்ட காலத்தில் மிகவும் புகழ்வாய்ந்த புலவரும் அமைச்சருமான யொரிமோத்தோவின் மகன் இவர். இவரது பரம்பரையானது வழிவழியாக அரண்மனையின் மதவிவகாரங்களைக் கவனிக்கும் அமைச்சர் பொறுப்பை வகித்து வந்தது. மன்யோஷூ தொகுப்பின் பாடல்களுக்கு அடிக்குறிப்புகள் எழுதிய ஐவர் குழுவைத் தலைமை தாங்கியவர் இவர். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 126 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. யொஷினொபுஷூ என்ற இவரது தனிப்பாடல் திரட்டும் உள்ளது. காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்று இருப்பவர்.

பாடுபொருள்: நிறைவேறாத காதலின் துயரம்

பாடலின் பொருள்: இதோ இந்த அரண்மனையின் காவலர்கள் சுழற்சி முறையில் இரவில் தீப்பந்தங்களைக் கொளுத்தியும் பகலில் அவற்றை அணைத்து வைத்து வேறு அலுவல்களில் ஈடுபடுவதும் போல என் நெஞ்சமும் காதலால் இரவில் விம்மியும் பகலில் தணிந்தும் இருக்கிறது.

முந்தைய பாடலில் கூறப்பட்டதுபோலவே இதுவும் காதலியால் பாதிக்கப்பட்ட ஓர் ஆணின் உள்ளக்குமுறலாக இருக்கிறது. இது தோல்வியடைந்த காதலா அல்லது வெற்றியடைய இன்னும் வாய்ப்புள்ள காதலா என்பது தெளிவில்லை. பகலில் வேறு அலுவல்களில் ஈடுபடுவதால் காதலின் பாதிப்பு குறைவாக உணரப்படுகிறது எனவும் சில உரையாசிரியர்கள் கூறுகிறார்கள். அரண்மனையில் இரவு விளக்குகளை ஏற்றச் சுழற்சிமுறை பயன்படுத்தப்பட்டது என்ற வரலாற்றுக் குறிப்பு இப்பாடலில் பொதிந்துள்ளது.

வெண்பா:

கொளுத்தவே பாயும் ஒளியெனக் காதல்
தளும்புதே அந்தியில் பின்பு - வெளுக்கவே
மங்கிடும் செந்தீச் சுளுந்தாய்ப் பகலில்
அணையுதே காதல் நெருப்பு

சுளுந்து - தீப்பந்தம்

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.