![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 178
![]() இதழ் 178 [ ஜூன் 2024 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 高砂の をのへの桜 咲きにけり 外山のかすみ 立たずもあらなむ கனா எழுத்துருக்களில் たかさごの をのへのさくら さきにけり とやまのかすみ たたずもあらなむ ஆசிரியர் குறிப்பு: பெயர்: ஆளுநர் மசாஃபுசா காலம்: கி.பி 1041-1111. இத்தொடரின் 59வது பாடலை இயற்றிய எமோனின் கொள்ளுப்பேரன். சிறுவயது முதலே அறிவிற் சிறந்தவராக அறியப்பட்டவர். சீனமொழியிலும் மிகுந்த புலமை பெற்றவர். இவரது குடும்பமே பல தலைமுறைகளாக அறிஞர்களாக விளங்கியது. இவருக்கு ஒரு நூற்றாண்டு முன்னர் வாழ்ந்த அறிஞர் மிச்சிஜானேவுக்கு (இத்தொடரின் 24வது பாடலை இயற்றியவர்) இணையாகப் புகழ்பெற்றிருந்தவர். பேரரசர் ஹொரிகவாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்து பல்வேறு பொறுப்புகளை அரண்மனையிலும் வெளியிலும் வகித்துவந்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 119 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடுபொருள்: மலரின் அழகை இரசித்தல் பாடலின் பொருள்: எதிரிலுள்ள தகாசாகோ மலையில் சக்குரா மலர்கள் அழகாகப் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால் இடையிலிருக்கும் குன்றின் மீது தவழும் மேகக்கூட்டமே, இடையில் வராதே! இயற்கையை வியக்கும் நேரடிப் பொருள்தரும் இன்னோர் எளிய பாடல். இத்தொடரின் 34ம் பாடலின் (நீண்ட வாழ்வே சாபமோ?) நிகழிடமும் இதே தகாசாகோ மலைதான். கவிஞர் நின்றுகொண்டு பார்க்கும் இடத்துக்கும் சக்குரா மலர்கள் பூத்துக்குலுங்கும் தகாசாகோ மலைக்கும் இடையே தொயாமா என்றொரு குன்று இருக்கிறது. அப்போது தொயாமாவின் மீது மேகக்கூட்டம் ஒன்று பயணிக்கிறது. அது இன்னும் சற்று நகர்ந்து வந்தால் சக்குராவின் அழகிய காட்சி பாதிக்கப்படும். எனவே கவிஞர் அம்மேகக்கூட்டத்தை அருகில் வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறார். மிகவும் புலமை பெற்ற கவிஞர் எனப் புகழப்படுபவர் இதுபோன்ற எளிய பாடல்களையும் எழுதியிருக்கிறார். அது சிறந்த 100 பாடல்கள் என்ற தொகுப்பிலும் இடம்பெறுகிறது. ஒருவேளை, புலவருக்கான பொதுவான அங்கீகாரமோ? வெண்பா: சக்குரா பூத்தது கண்ணில் நிறைந்திட அக்குணி மாசில் கவினுறச் - செக்கர் நிறைவானின் பின்னணி மூடாது சற்றே முகிலெனும் பஞ்சே விலகு அக்குணி - சிறிதளவு செக்கர் நிறைவானம் - செக்கச் சிவந்த வானம் (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |