http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 15

இதழ் 15
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15
பயணச் சிறப்பிதழ் ]


இந்த இதழில்..
In this Issue..

வந்தியத்தேவன் வழியிலிருந்து வரலாற்று வழிக்கு
பழுவூர் - 5
கல்வெட்டாய்வு - 11
காந்தள்
ஒரு கடிதம்
மூன்றாம் யாத்திரை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
நான்கு மணிக்குப் பின் நாகேஸ்வரன் கோயில்
Around My World in Two Days
சங்கச் சிந்தனைகள் - 3
அத்யந்தகாமம் - பின்னூட்டம்
இதழ் எண். 15 > கலைக்கோவன் பக்கம்
பழுவேட்டரையன் குமரன் மறவன்

குமரன் கண்டனுக்குப் பிறகு வரலாற்று வரிகளில் இடம்பெறும் அடுத்த பழுவேட்டரையர் குமரன் மறவனாவார். அவனி கந்தர்ப்ப ஈசுவர கிரகத்துத் தென்வாயில் ஸ்ரீ கோயிலின் தென்புறச் சுவரிலுள்ள இராசகேசரியின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இரண்டு இவரை அறிமுகப்படுத்தீப் பெருமையடைகிண்றன. முதலாம் ஆதித்தனுடைய இக்கல்வெட்டுகளுள் ஒன்றைக் கல்வெட்டுத் தொகுதி பதின்மூன்றைப் பதிப்பித்த திரு. ஜி. வி. சீனிவாசராவ் முதலாம் இராசராசனுடையதென்று குறிப்பிட்டுள்ளார்47. இதை அப்படியே ஏற்றுக்கொண்ட பேராசிரியர் கோவிந்தசாமி குமரன் மறவனை இராசராசன் காலத்துப் பழுவேட்டரையனாகவும், கண்டன் மறவன் என்ற பிற்காலத்துப் பழுவேட்டரையர் ஒருவரின் மகனாகவும் அடையாளம் காட்டுகிறார் 48. அதனாலேயே பழுவேட்டரையர் மரபு பராந்தகன் காலந்தொட்டுதான் இயங்கத் தொடங்கியதென்ற பிழையான கருத்தையும் தம் நூலில் வெளிப்படுத்துகிறார். இக்கல்வெட்டுகள் ஆதித்தனுடையவைதாம் என்பதற்கு மூன்று தெளிவான காரணங்களைக் காட்டலாம்.

i) இங்குள்ள முதலாம் இராசராசனின் மெய்க் கீர்த்தியுடன் கூடிய கல்வெட்டுகளுக்கும் இந்த இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளுக்கும் எழுத்தமைதியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

ii) பழுவூர்க் கோயில்களில் காணப்படும் உயரிய ஆட்சியாண்டுள்ள முதலாம் இராசராசனின் கல்வெட்டுகள் எதுவும் மெய்க்கீர்த்தியின்றிக் காணப்படவில்லை. ஆனால் கல்வெட்டுகள் அடைமொழி ஏதுமற்ற இராசகேசரியினுடையவை.

ii) இக்கல்வெட்டுகளில் அவனி கந்தர்வ ஈசுவர கிரகம் உள்ள இடம் 'குன்றக் கூற்றத்து' என்ற சொற்களாலேயே சுட்டப்படுகிறது. வளநாட்டின் பெயர் காணப்படவில்லை. முதலாம் இராசராசனின் பதினேழாம் ஆட்சியாண்டிலேயே வளநாடுகள் பிரிக்கப்பட்ட நிலையில், இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளான இவையிரண்டும், முதலாம் இராசராசனுடையவையாக இருப்பின், குன்றக்கூற்றம் எந்த வளநாட்டில் இருந்தது என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆலந்துறைக் கோயிலில் உள்ள இராசராசனின் இருபத்து நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும் இதே கோயிலில் உள்ள இராசராசனின் இருபத்தேழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும், இதே கோயிலில் உள்ள இராசராசனின் இருபத்தேழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும் 49 வளநாட்டின் பெயர் குறிக்கப்பட்டிருப்பது இங்கு நினைக்கத் தகுந்தது. வளநாட்டின் பெயர் சுட்டப் படாத இக்கல்வெட்டுகளை முதலாம் இராசராசனுக்குரியவையெனக் கொள்வது எவ்விதத்தாலும் பொருந்தாது.

கள ஆய்வில் கண்ட இவ்வுண்மைகளால், குமரன் மறவனைச் சுட்டும் இராசகேசரியின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இரண்டும் முதலாம் ஆதித்தனுடையவையே என்பது உறுதியாகிறது. குமரன் மறவனின் ஆணைப்படி இருவேறு தனியர்கள் செய்த நிலக் கொடைகளைச் சுட்டும் இவ்விரண்டு கல்வெட்டுகளின் சுருக்கமும் கல்வெட்டறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இவ்விரண்டினுள் ஒன்று கல்வெட்டுத் தொகுதி பதின்மூன்றில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.

முதல் கல்வெட்டு

1 ஸ்வஸ்தி ஸ்ரீ கொவிராசகேசரி பன்மர்க்கு யாண்டு இருபத்திரண்டாவது குன்றக் கூற்றத்து

2 அவனி கந்தர்வ ஈசுவரகிரகத்து மகாதேவர்க்கு பொய்கைக் குறுவிடத்து வெட்டக்குடான்

3 வடுகன் மாதவன் பழுவேட்டரையன் குமரன் மறவன் பிரசா

4 தத்தினாலருளிச் செய்ய இத்தளி தேவதானம் ஊரகன்குடி அபோவனங்க் கிடந்

5 த பூமியைக் கல்லி இரண்டு புவும் விளைய மசக்கிக் குடுத்த நீர்நிலம் எட்டு மாஇப்

6 பூமியில் போன்த போகங்கொண்டு இரண்டு தளியிலும் ஒரோநாந்தா விளக்கு இர

7 வும் பகலும் எரிப்போமானோம் இத்தளிப் பட்டுடையோம் எழுவோம் இவ்விளக்கு

8 ரட்சிப்பார் அவனிகந்தர்வபுரத்து நகரத்தாரடி என் தலைமேலென 50.

இரண்டாம் கல்வெட்டு

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வுப் பேரவையால் படிக்கப்பட்ட இக்கல்வெட்டின் ஒவ்வொரு வரியின் முதற்பகுதியும் கட்டடப் பகுதிக்குள் மறநிதுள்ளமையால் அப்பகுதிகளை மட்டும் விடுத்து, பிற பகுதிகள் படியெடுக்கப்பட்டன.

1 ... சரிபம்மர்க்கு யாண்டு இருபத்திரண்டாவது

2 ...து அவனி கந்தர்ப்ப ஈசுவரகிரகத்து மகா தேவர்க்கு செ

3 ...மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள் பெருமாள்

4 ...பழுவேட்டரையன் குமரன் மறவன் பிரசா

5 ...ஹ நங்கிடந்த பூமியை கல்லி எட்டு மா செய் நீர்

6 ...போகங் கொண்டு இரண்டு தளியிலும் ஒரோநந்

7 ...கொண்டோம் இத்தளிப் பட்டுடையோம் எழுவோம் இவ்வி

8 ...கந்தர்ப்பபுரத்து நகரத்தார் ...51.

இவ்விரண்டு கல்வெட்டுகளிலும் வரும் மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள பெருமாள், பொய்கைக் குறுவிடத்து வெட்டக்குடான் வடுகன் மாதவன் ஆகிய இரண்டு தனியர்களின் பெயர்களைப் பழுவேட்டரையன் குமரன் மறவன் பெயரோடு இணைத்து, இரண்டு குமரன் மறவன்களை உற்பத்தி செய்திருக்கிறது, அவனி கந்தர்வ ஈசுவர கிரகத்தின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிவிப்புப் பலகை. பழுவேட்டரையர் என்னும் தலைப்பின் கீழ், இந்த அறிவிப்புப் பலகையில்,

i) மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள பெருமாள் பழுவேட்டரையன் குமரன் மறவன்,

ii) பொய்கைக் குறுவிடத்து வெட்டக்குடான் வடுகன் மாதவன் பழுவேட்டரையன் குமரன் மறவன் என்ற இரண்டு பெயர்களைப் பார்க்கலாம். இதைக் கவனக் குறைவு என்பதா? கருத்துப் பிழை என்பதா? இந்த அறிவிப்புப் பலகையில் இருக்கும் செய்திகள் பெரும்பாலும் பிழைபட எழுதப்பட்டுள்ளன. தொடக்கத்திலிருந்து இறுதிவரை பிழைகள் மலிந்துள்ள இப்பலகையை ஒன்று அகற்றி விடலாம் அல்லது திருத்தி எழுதி அமைக்கலாம். அதுதான் அறிஞர் பெருமக்கள் நிறைந்துள்ள தொல்பொருள் ஆய்வுத் துறைக்குப் பெருமை சேர்க்கும்.

பொதுகள பெருமாள் தந்த கொடையைக் குமரன் மறவனே தந்ததாகத் தவறான தகவல் வெளியிட்டுள்ளது கல்வெட்டறிக்கை52.

குமரன் மறவனைச் சுட்டும் பிற கல்வெட்டுகள் திருப்பழனத்திலொன்றும், லால்குடி சப்தரிஷீசுவரர் கோயிலில் ஒன்றும், திருவையாற்றுப் பஞ்சநதீசுவரர் கோயிலில் ஒன்றுமாய் உள்ளன.

லால்குடி கல்வெட்டு

(தொடரும்)


அடிக்குறிப்புகள்

47. S.I.I> Vol XIII, Ins. No. 298 and notes on the same inscription

48. M. S. Govindasamy, The role of Feudatories in Later Chola History, P. 3

49. A.R.E. 243 of 1926, 385 of 924
50. S. I. I. Vol XIII, Ins. No. 298
51. A. R. E. 355 of 1924
52. Lbid. 355 of 1924this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.