http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 15

இதழ் 15
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15
பயணச் சிறப்பிதழ் ]


இந்த இதழில்..
In this Issue..

வந்தியத்தேவன் வழியிலிருந்து வரலாற்று வழிக்கு
பழுவூர் - 5
கல்வெட்டாய்வு - 11
காந்தள்
ஒரு கடிதம்
மூன்றாம் யாத்திரை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
நான்கு மணிக்குப் பின் நாகேஸ்வரன் கோயில்
Around My World in Two Days
சங்கச் சிந்தனைகள் - 3
அத்யந்தகாமம் - பின்னூட்டம்
இதழ் எண். 15 > தலையங்கம்
வந்தியத்தேவன் வழியிலிருந்து வரலாற்று வழிக்கு
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம்.

பொன்னியின் செல்வன் என்னும் நாவலால் ஈர்க்கப்பட்டு, அதன் மூலம் வரலாற்றின் பால் வந்தவர்கள் நாங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. நவீன இலக்கியத்தைப் பற்றிப் பல கருத்துக்கள் நிலவினும், 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி என்னும் எழுத்தாளருக்கு அதில் ஒரு முக்கிய இடம் உணடு. கல்கி என்றதும், பேராசிரியர் முனைவர் மா.ரா.அரசு கூறியதுதான் நினைவிற்கு வருகிறது. "கல்கியின் எழுத்து ஓர் ஆலமரம் போல. அதைப் பல வகையில் அனுபவிக்கலாம். ஆலமரத்தின் நிழலில் பல கணங்களைச் சந்தோஷமாகக் கழிக்கலாம். ஆலமரத்தின், கிளைகளையும், விழுதுகளையும் பற்றிக் கொண்டு கல்கியுடன் ஆனந்தமாய் வலம் வரலாம். அல்லது, ஆலமரத்தின் உச்சியை அடைந்து, அதனை அடித் தளமாகப் பயன்படுத்தி, இன்னும் பல உயரங்களை அடையலாம்."

எங்களை வரலாற்று வழிக்கு இட்டுச் சென்ற வந்தியத்தேவன் வழியை 'முதல் யாத்திரை' என்று அழைப்பதுண்டு. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும், இந்த யாத்திரைக்கு வந்தவர்களை நேரில் சந்திக்கும் பொழுதும், பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்தில் உரையாடும் பொழுதும் அடிக்கடி, இந்த யாத்திரையைப் பற்றிய பேச்சு எழும். முதல் யாத்திரையின் பொழுது பொ.செ குழுவில் இல்லாது, சமீபத்தில் சேர்ந்த பல உறுப்பினர்களுக்கு, இன்னொரு முறை இப்படியொரு பயணம் நடக்காதா? என்ற எண்ணம் தோன்றியது நியாயம்தானே!

யாத்திரைக்குக் குரல் கொடுத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமான அளவைத் தொட, எங்கள் குழுவின் 'பெரியண்ணன்' சுந்தர் பரத்வாஜும், சதீஷ்குமாரும் பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய முன்வர, எம்மை இவ்வழிக்கு ஈர்த்த கல்கியின் பிறந்தநாளும் இம்மாதத்தையொட்டி விழ, எங்களது "இரண்டாவது பொன்னியின் செல்வன் யாத்திரை" இனிதே தொடங்கி, இரண்டு நாட்கள் இவ்வளவு சீக்கிரம் ஓடிவிட்டதே என்ற ஏக்கத்துடன் முடிந்தது.

பயணத்தில் பார்த்த வீராணமும், பறவைப் பார்வையில் பார்த்த கங்கை கொண்ட சோழபுரத்து விமானமும், இராஜராஜீஸ்வர விமானமும், அவ்விமானச் சாந்தார நாழியில் இருக்கும் சிற்பங்களும், ஓவியங்களும், அவை எழுப்பிய கேள்விகளும், விவாதங்களும் எங்களை வேறு உலகிற்குத் தூக்கிச் சென்றுவிட்டன. இராஜராஜன் மணி மண்டபத்தில், வலஞ்சுழியிலிருந்து எடுத்து வரப் பட்ட க்ஷேத்ரபாலரைக் கண்டதும் எங்கள் உள்ளம் அடைந்த உவகையை வார்த்தைகளில் அடக்க முடியாது. புள்ளமங்கையில் வடக்கு நோக்கி ஒயிலாக நிற்கும் துர்க்கையும், முக மண்டபத்தின் கூரையின் உச்சியில் அமர்ந்து மெய் மறந்து இசை பரப்பும் பூதங்களையும், ஆயிரம் வருஷத்து புன்னகையை தன் இதழில் ஏந்தி நிற்கும் அம்மையப்பரையும், இராமாயணச் சிறு சிற்பங்களையும், உமா சகிதரையும் பற்றிக்கூற ஆரம்பித்தால், இத்தலையங்கத்தை முடிக்கவே முடியாது. சமீபத்தில் பலமுறை சென்று வந்த வலஞ்சுழியை இக்குழுவுடன் சென்று பார்த்ததும், நாங்கள் கண்டு களித்த ஏகவீரியின் அழகை அனைவருக்கும் எடுத்துச் சொன்னதும், புதிய அனுபவங்கள். இராஜேந்திரன் தன் சிற்றன்னைக்கு எழுப்பிய பள்ளிப்படை சிதிலத்திற்கிடையிலும் எங்கள் கண்ணிற்கு மட்டும் சிறப்பாக மிளர்ந்ததற்குக் காரணம் எங்கள் கண்களா அல்லது மனங்களா? யாமறியோம்!

வேறொரு உலகில் சஞ்சரிக்கும் பொழுதே, அவ்வுலகைப் பற்றிய பதிவுகளைச் செய்துவிடுவதன் பொருட்டு வரலாறு.காம்-இன் 15-ஆவது இதழ் "பயணச் சிறப்பிதழாக" மலர்கிறது. இவ்விதழில், வழக்கமான பகுதிகளினூடே, பொ.செ குழுவின் "இரண்டாவது பொன்னியின் செல்வன் யாத்திரைக்கு" வந்த நண்பர்களின் பயணக் கட்டுரைகளையும் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

சில ஆண்டுகளுக்கு முன் நூற்றாண்டினைக் கடந்த கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தாக்கம் இன்னும் தமிழர்களிடையில் இருப்பது, எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த 700-க்கும் மேற்பட்டவர்களை, பொன்னியின் செல்வன் என்னும் குழுவின் மூலம் இணைத்திருப்பதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இந்த யாத்திரையும் பலரை வந்தியத்தேவன் வழியிலிருந்து வரலாற்று வழிக்கு இட்டுச் செல்லும் என்று நம்புகிறோம்.

வாழ்க கல்கியின் புகழ்!

வளர்க தமிழர் வரலாறு!

-ஆசிரியர் குழு
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.