http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 16
இதழ் 16 [ அக்டோபர் 16 - நவம்பர் 15 ] இந்த இதழில்.. In this Issue.. |
அன்புமிகு இராமசந்திரன் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் மிக நீண்ட, மிக சுவாரசியமான கடிதம் கிடைத்தது. என் உடல்நிலை காரணமாக மிகவும் சுருக்கமாகவே பதிலெழுத முடிகிறது. மன்னிக்கவும். என் ஆய்வு சிந்துவெளி முருகனைப் பற்றியது. தமிழக சங்க கால முருகனைப் பற்றியது அல்ல. சிந்துவெளிப் பண்பாட்டுக்குப் பிற்காலங்களிலிருந்து நான் கொடுத்துள்ள சான்றுகள் ஓரளவே சிந்துவெளி முருகனின் எச்சங்களாகும். ஈராயிரம் ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு சங்க காலத்தில் முருகன் வரலாறு முற்றிலும் மாறிவிட்டது. தமிழகத்தில் இன்று கிடைக்கும் திருவுருவங்கள் கி.பி ஆறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை. அவற்றுக்கும் சிந்துவெளி முருகுவிற்கும் பெயரளவு மட்டுமே தொடர்பு காண முடியும். 'பேய்' என்றால் உங்களுக்குப் பிற்காலத்தில் உருவான பயங்கர தோற்றமே தென்படுகிறது. உண்மையில் 'பேய்' என்பதற்கு ஆதியில் 'உடலிலிருந்து நீங்கிய ஆவி' (disembodied spirit) என்று பொருள் இருந்தது. ஆதி காலப் பேய்க்கு உருவம் கிடையாது. அதைத் தமிழில் 'அணங்கு' 'ஆர்' என்ற மற்ற உருவமற்ற "தெய்வங்களுடன்" ஒப்பிடலாம். சிந்துவெளி முருகனின் எச்சம் சங்ககாலத்துக்கு முந்தைய பெருங்கற்காலத்தில் மட்டுமே இருந்தது. (ஏறத்தாழ கி.மு 1000 - 500). (சிந்துவெளி மற்றும் தமிழகப் பானை ஓடுகளில் உள்ள முருகு எனக் கருதக் கூடிய வடிவங்களை கையால் வரைந்துள்ளார்), இந்த தெய்வத்திற்கு 'முருகு' என்ற பெயர் இருந்திருக்கலாம் என்பது என் ஆய்வின் முடிவு. 'முருகு' என்றால் 'அழகு' என்பதெல்லாம் பிற்காலக் கற்பனைகள். சங்க காலத்தில் கூட முருகுவிற்கு உருவ வழிபாடு கிடையாது. முருகு அதன் பூசாரியான வேலன் மீதோ ஒரு பெண்ணின் மீதோ வந்து வெறியாட்டம் நடைபெறும் போதுதான் முருகன் வெளிப்படுகிறான். முருகனின் அழகையும் தோற்றத்தையும் அழகையும் ஆடை ஆபரணங்களையும் வர்ணிக்கும் பாடல்களெல்லாம் காலத்தால் பிற்பட்டனவாகும். (i.e relating to the harappan and megalithic). நீங்கள் P.L.Samy எழுதிய முருகன் நூலைப் படித்துப் பார்க்கவும். நன்றி. ஐராவதம் மகாதேவன். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |