http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 54
இதழ் 54 [ டிசம்பர் 18 - ஜனவரி 23, 2009 ] இந்த இதழில்.. In this Issue.. |
வாசகர்களுக்கு வணக்கம்.
சென்ற மாதத் தலையங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பின்னூட்டமிட்டிருந்த மற்றும் தனித்தமிழ்க் கலைச்சொற்களை மின்னஞ்சலில் அனுப்பியிருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி. தனித்தமிழ்க் கலைச்சொற்களின் முதல்பகுதியாக, டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் தாம் அன்றாடம் பயன்படுத்தும் கோயிற் கட்டடக்கலை தொடர்பான வடமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்தியிருக்கும் பட்டியலை அளிக்கிறோம். வாசகர்கள் அனுப்பிய கலைச்சொற்களின் தொகுதி அடுத்த இதழ் முதல் இடம்பெறும். 1. அங்கணம் - தூணிடைவழி 2. சந்திரசீலா - நிலாப்படி 3. கண்டம் - கழுத்து 4. அதபத்மம் - கீழ்நோக்குத் தாமரை 5. ஊர்த்வ பத்மம் - மேனோக்குத் தாமரை 6. பிரதி - மேற்கம்பு 7. ஸ்தம்பம் - தூண் 8. குத்ய ஸ்தம்பம் - அரைத்தூண் 9. பத்ம பந்தம் - தாமரைக் கட்டு 10. மத்ய பந்தம் - இடைக்கட்டு 11. நாகபந்தம் - பாம்புப் படம் 12. மாலாஸ்தானம் - மாலையிடம் 13. கலசம் - பானை 14. தாடி - மூடி 15. கும்பம் - குடம் 16. தரங்கம் - அலை 17. கோஷ்டம் - மாடம் 18. லலாட பிம்பம் - நெற்றி வடிவம் 19. உத்தரம் - விட்டம் 20. கபோதம் - கூரை நீட்சி 21. ஹம்சமாலா - வாத்துவரி 22. ஹாரம் - மாலை 23. ஹாராந்தரம் - மாலை இடைவெளி 24. அர்பிதம் - ஒட்டிய மாலை 25. அனர்பிதம் - விலகிய மாலை 26. மஹா நாஸிகை - பெருஞ்சாளரம் 27. அல்ப நாஸிகை - சிறு சாளரம் 28. சூத்ர நாஸிகை - குறுஞ் சாளரம் 29. அரமியம் - தளச்சுவர் 30. விமானம் - இறையகம் மேற்கண்ட தமிழாக்கங்களில் கருத்து வேறுபாடுகள் கொண்ட அன்பர்களும், மேலும் விளக்கம் வேண்டும் நண்பர்களும் ஆசிரியர் குழுவைத் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெறலாம். நன்றி. வணக்கம். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |