http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 60

இதழ் 60
[ ஜுன் 15 - ஜுலை 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

பேராசிரியர் மா.ரா.அரசு
பேராசிரியர் மா.ரா.அரசு புகைப்படத்தொகுப்பு
அரசு என்னும் அறிஞர் பெருந்தகை
இதழியல் இமயம்
ஓய்வு ஏது ஐயா உங்களுக்கு
இங்கிவரை யாம்பெறவே...
அரசு என்னும் அரிய மனிதர்
பேராசிரியருக்கு, அன்புடன்...
இதழா...? இயக்கமா...?
நிலா நிலா போ! போ!
இதழ் எண். 60 > தலையங்கம்
பேராசிரியர் மா.ரா.அரசு
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம்.

ஜுன் 2009 மாத மலரான இந்த அறுபதாவது இதழ், தமிழ் இதழியல் பேராசிரியராகவும் நாடுபோற்றும் நல்லறிஞராகவும் விளங்கும் முனைவர் மா.ரா. அரசு அவர்களின் பணி நிறைவுச் சிறப்பிதழாக வெளிவருகிறது.

வரலாற்றுப் புகழ்க்கோ முனைவர் மா.இராசமாணிக்கனார் அவர்களின் கடைப்புதல்வரும் மா.இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மைய இயக்குனரும் முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களின் இளவலுமான பேராசிரியர் அரசு அவர்கள் கடந்த பல்லாண்டுகாலமாக சென்னைப் பல்கலைக்குட்பட்ட பச்சையப்பன் கல்லூரியில் இதழியல் பேராசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார்கள். தமிழில் இளங்கலைப் பட்டமும் இதழியலில் முதுகலைப் பட்டமும் பெற்று கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் தமிழ்த்தொண்டைப் பற்றிய ஆய்வில் தம்மைப் பலகாலம் ஈடுபடுத்திக்கொண்டு முனைவர் பட்டமும் வாங்கியுள்ளார்கள்.

கடந்த பலவருட காலமாக பல மாணவர்களுக்கு இதழியல் துறையில் முனைவு வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார் திரு. அரசு. வரலாற்றுப் பின்புலமும் நோக்கும் இயல்பாகவே வாய்த்துள்ள இவர், தமது தந்தையாரின் பல்வேறு ஆய்வு நூல்களையும் வரலாற்றுக் கையேடுகளையும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களையும் புதிய செம்பதிப்புக்களாகக் கொண்டு வரும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

வரலாறு டாட் காம் துவங்கப்பட்ட நாளிலிருந்தே நமது குழுவின் முயற்சிகளுக்குப் பக்க பலமாக இருந்து வரும் திரு. அரசு, நம் குழுவினர் இணைந்து 2005ல் நடத்திய முப்பெரும் விழாவிலும் 2008ல் நடந்த ஐராவதி விழாவிலும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். நமது வளர்ச்சியிலும் ஆக்கத்திலும் பெரிதும் ஆர்வம் கொண்டு பல்வேறு அரிய யோசனைகளையும் உதவிகளையும் வழங்கி வரும் இவருக்கு நன்றி சொல்லும் விதமாகவே இச்சிறப்பிதழை உருவாக்கியிருக்கிறோம்.

வரலாறு டாட் காம் இதுவரை வெளியிட்டுள்ள சிறப்பிதழ்களைக் கவனிப்பவர்களுக்கு ஒரு உண்மை புரியும். அதாவது, ஆயிரம் ஆண்டுகள் பழமையான கலைப்பெட்டகங்களையும் மன்னர்களையும் கொண்டாடும் அதே நேரத்தில் நம் கண்களுக்கு முன்னால் வாழும் வரலாறுகளாக - வழிகாட்டிகளாக விளங்கும் அறிஞர் பெருமக்களையும் வரலாற்றறிஞர்களையும் நாம் மரியாதை செய்யத் தவறுவதில்லை. நாடுபோற்றும் நல்லறிஞர்களை வாழும் காலத்திலேயே சிறப்பிப்பதென்பதும் கொண்டாடுவதென்பதும் தமிழ்க் கலாச்சாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் ஒவ்வாததுதான். இருந்தாலும் (கண்டிக்கத்தக்க) இந்தத் தமிழ்ச் சமுதாயப் போக்கைத் தன்னால் இயன்றவரையில் மாற்றவேண்டுமென்பதில் வரலாறு டாட் காம் முனைப்பாய் உள்ளது.

இதுவரை நாம் வெளியிட்டுள் சிறப்பிதழ்களின் வரிசை, வாசகர்களின் கவனத்திற்கு...

- இராஜராஜேஸ்வரம் (தஞ்சை பெரிய கோயில்) சிறப்பிதழ் மற்றும் முப்பெரும் விழா (ஜனவரி 2005) - இதழ் 7

- இராஜசிம்மேஸ்வரம் (காஞ்சி கயிலாயநாதர் கோயில்) சிறப்பிதழ் (ஆகஸ்ட் 2005 - முதலாண்டு நிறைவு மலர்) - இதழ் 14

- பயணச் சிறப்பிதழ் - இதழ் 15

- மா.இராசமாணிக்கனார் நூற்றாண்டு சிறப்பிதழ் (மார்ச் 2006) - இதழ் 21

- முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் பணி நிறைவுச் சிறப்பிதழ் - இதழ் 24

- திரு.ஐராவதம் மகாதேவன் சிறப்பிதழ் மற்றும் ஐராவதி அறிவிப்பு - இதழ் 28

- அமர(ர்) ஓவியர் சில்பி மகாதேவன் சிறப்பிதழ் - இதழ் 29

- மாமன்னர் இராஜசிம்மர் சிறப்பிதழ் (செப்டம்பர் 2007 - மூன்றாம் ஆண்டு சிறப்பிதழ்) - இதழ் 38

- முனைவர் இரா.கலைக்கோவன் அறுபதாம் ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ் (ஏப்ரல் 2008) - இதழ் 46

- ஐராவதி சிறப்பிதழ் - ஐராவதம் மகாதேவன் பணிப்பாராட்டு மலர் வெளியீடு மற்றும் வரலாறு டாட் காம் 50வது இதழ் வெளியீடு (ஆகஸ்ட் 2008) - இதழ் 50

இந்த வரிசையில் முனைவர் மா.ரா.அரசு அவர்களின் பணி நிறைவுச் சிறப்பிதழைப் பணிவன்புடன் படைக்கிறோம். வாசகர்கள் மனமுவந்து இவ்விதழை ஏற்றுக் கட்டுரைகளைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளக் கோருகிறோம்.

அன்புடன்
ஆசிரியர் குழு
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.