http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 124

இதழ் 124
[ அக்டோபர் 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு வெள்ளி இதழ் வெளியீட்டு விழா - அழைப்பிதழ்
திருச்சிராப்பள்ளி மாவட்டக் கோயிற் கட்டடக்கலை (பொ. கா. 500-1300)
சிராப்பள்ளி தொட்டியம் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-7
அன்பில் ஆய்வும் புதிய கண்டுபிடிப்புகளும்
விஜயநகரக் கலைச்சிறப்பு மிக்க அய்யங்கார் குளம்
கான மயிலாட!
இதழ் எண். 124 > கலையும் ஆய்வும்
சிராப்பள்ளி தொட்டியம் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-7
அர. அகிலா
குரங்கநாதர் கோயில்

சிராப்பள்ளி மாவட்டத்தின் மிகச் சிறந்த கோயிற்கட்டுமானங்களில் சீனிவாசநல்லூர்க் குரங்கநாதர் கோயில் குறிப்பிடத்தக்கது. கட்டமைப்பு, சிற்பம், கல்வெட்டுகள் என அனைத்தும் சிறக்க அமைந்த அம்முற்சோழர் கட்டுமானம் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வாளர்களால் முழுமையுற ஆராயப்பட்ட களமாகும். காலமும் தொடர்ந்த பயிற்சியும் பட்டறிவைக் கூர்மையாக்கும் என்ற உண்மை இக்கோயிலால் மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தப்பட்டது.


குரங்கநாதர் கோயில்


முசிறி அறுவை மருத்துவர் திரு. அருள்மொழிவர்மனும் அவர் உறவினர் திரு.பெ.மாணிக்கத்தின் குடும்பத்தாரும் குரங்கநாதர் கோயில் ஆய்வுக்குத் துணைநின்றனர். இக்கோயிலின் விமானம் இருதள நாகரம் எனத் தெளிவுற மையத்தின் முந்து ஆய்வுகளிலேயே அறியப்பட்டிருந்தபோதும், சில ஆய்வாளர்கள் இதை முத்தள நாகரமாகவும் முதலிரு தளங்கள் தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் ஒப்ப ஏறத்தாழ ஒரே அளவினவாக அமைந்திருப்பதாகவும் முதல் தளத்திற்கும் இரண்டாம் தளத்திற்கும் இடையில் ஆரம் இடம்பெறவில்லை எனவும் கூறி வந்தமை மீளாய்வுக்கு வித்திட்டது.

பிரதிபந்தத் தாங்குதளமும் எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவரும் கூரை உறுப்புகளும் பெற்று மூன்று பத்திகளாய்ப் பிரிந்து எழிலுற அமைந்த கீழ்த்தளத்தின் மேல் செங்கற் கட்டுமானமாய் ஆறங்க ஆரம் இடம்பெற்றுள்ளது. கீழ்த்தளம் உத்திரம் வரை கருங்கல்லாலும் ஏனைய கூரையுறுப்புகள் செங்கல்லாலும் அமைந்த கலப்புக் கட்டுமானமாக உள்ளது. ஆரத்தின் கர்ணகூடங்களும் சாலைகளும் பத்தி இழுப்புகளுக்கு ஏற்ப முன்தள்ளி அமைய, தள ஒடுக்க ஒழுங்கில் நாசிகைகள் இடம்பெற்றுள்ளன. கீழ்த்தளம் ஒப்ப உயரம் பெற்று அமைந்துள்ள இந்த ஆறங்க ஆரமே காண்பாரை மயக்கி இரண்டாம் தளமாக எண்ணச் செய்கிறது. உயர்ந்த இந்த ஆரத்தின் பின், பார்வைக்கு மறைந்த நிலையில் இரண்டாம் தள அரமியம் 2. 35 மீ. உயரத்தில் 4 மீ. பக்கமுடைய சதுரமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த அரமியத்திற்கும் முதல் தள ஆரத்திற்கும் இடையில் 85 செ. மீ. அகலச் சுற்று அமைந்து ஆரத்தை ஒட்டாஆரமாக்கியுள்ளது (அனர்ப்பிதம்).


ஆறங்க ஆரம்


இரண்டாம் தள அரமியம் செங்கற் கட்டுமானமாய், நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவருடன், கீழ்த்தளம் போல் பத்திகளின் முன்னிழுப்பற்ற நிலையில் நேரொழுங்கில் கூறுயுறுப்புகள் கொண்டு அமைந்துள்ளது. மேலே நாகர அமைப்பில் கிரீவமும் சிகரமும் அமைந்துள்ளன. கிரீவகோட்டங்கள் சிற்பங்கள் பெறவில்லை. இந்நிலையில் குரங்கநாதர் விமானக் கட்டமைப்பைத் தூய இருதள நாகரமாக உறுதி செய்யலாம்.


இரண்டாம் தள அரமியம்


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்திலுள்ள திருநல்லூர் மணவழகர் கோயில் விமானம் குரங்கநாதர் விமானத்துடன் ஒப்புநோக்கத்தக்கது. இவ்விமானத்தின் இரண்டாம் தள அரமியத்தில் சுவர்ப் பஞ்சரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆரம் குரங்கநாதர் போலவே சுற்றுவழி விட்டு ஒட்டா ஆரமாக அமைந்துள்ளது. மணவழகரின் சிறப்பிருப்பாகக் கீழ்த்தளத் திருச்சுற்றைக் குறிக்கலாம். சாந்தாரமாக அமையாமல், ஆனால் அதே சமயம் சாந்தாரப் பார்வை தரும் இது போன்ற சுற்று, புதுக்கோட்டை மாவட்டம் நகரத்தார் மலை விஜயாலய சோழீசுவரத்திலும் இடம்பெற்றுள்ளமை கருதத்தக்கது. மணவழகர் விமானம் குரங்கநாதர் போலன்றிக் கலப்புத் திராவிடமாக உள்ளது. இதன் ஆரமும் திருப்பணிகளால் மாறுபட்ட அமைப்புகளில் காட்டப்பட்டுள்ளது.

விமானம் சாந்தாரமாகவோ (திருப்பட்டூர்), சாந்தாரப் பார்வையுடனோ (விஜயாலய சோழீசுவரம்) அமையாதபோதும், கீழ்த்தள ஆரம் ஒட்டா ஆரமாக, அரமியத்திற்குச் சுற்றுவிட்டு ஒதுங்கும் குரங்கநாதர் காட்சி மாறுபட்ட கட்டமைப்பாகும். காஞ்சிபுரம் கயிலாசநாதர் விமானம் சாந்தாரமாக அமைந்தபோதும் ஒட்டியஆரம் (அர்ப்பிதம்) கொண்டிருப்பது போல விமானக் கட்டமைப்புகளில் புதிய பார்வைகள் காலந்தோறும் பதிவாகியுள்ளன. தேடும் விழிகளுக்குத் தெரியும் காட்சிகளாய்ச் சிற்பிகள் தெளித்திருக்கும் கட்டுமான நுணுக்கங்கள் இவை.

ஆய்வுக்குத் துணைநின்ற இந்தியத் தொல்லியல்துறையினர், மருத்துவர் அருள்மொழி வர்மன், அவர் உறவினர்கள், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர். இரா. கலைக்கோவன், இணை இயக்குநர் பேராசிரியர் மு. நளினி ஆகியோருக்கு உளமார்ந்த நன்றி உரியது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.