http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 46

இதழ் 46 [ ஏப்ரல் 21, 2008 ]
இரா.கலைக்கோவன் மணிவிழா சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

மணிவிழா நாயகர்
தவறுக்கு தண்டனை
திரும்பிப் பார்க்கிறோம் - 18
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 1
The Chola Temple at Pullamangai(Series)
வேண்டும் நல்வரம் கொள் விசயமங்கை
முதல் நாள் உலா
"கலை" வளர்த்த பயணங்கள்
குறள்வழி வாழும் குணாளர்
கலையே என் வாழ்க்கையின் திசைமாற்றினாய்!!
வணக்கத்துக்குரிய காதல் - சில குறிப்புகள்
Down the memory lane
கம்பன் ஏமாந்தான்
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்
வரலாறே வாழ்வாக - வாழ்வே வரலாறாக... (கலைப்படத் தொகுப்பு)
"கலை" உணர்வு இனிது!!
வாட்டும் வாடையும் ஓடிய ஒன்பதும்
இதழ் எண். 46 > இலக்கியச் சுவை
வாட்டும் வாடையும் ஓடிய ஒன்பதும்
இரா. கலைக்கோவன்

தனித்திருக்கிறாள் தலைவி. தொழத்தக்க கடவுள் தன்மை நிரம்பிய செயலொன்றைச் செய்வதற்காக ('கல்வி கற்க' என்கிறார் உரையாசிரியர்) அவனைப் பிரிந்து சென்றுள்ளான் தலைவன். வாடை வீசுகிறது. அதன் வீச்சில், ஈங்கை மரம் ஆலங்கட்டி போன்ற தன் வெள்ளிய பூக்களைச் சிந்துகிறது. மரத்திலோடும் கரிய வாலையுடைய ஓந்தியின் (ஓணான்) கரிய தாடி போலமைந்த மகரந்தம் நிரம்பிய குவளை மொட்டுகளின் இதழ்கள் அந்த வாடை தாங்காது நெகிழ்கின்றன. உறங்காக் கண்களும் பரந்த பாதங்களும் பெரிய வாயினையும் உடைய மதம் நீங்கிய யானைகள் போல, நீரினைப் பெய்து வறுமை எய்திய மேகங்கள் வானில் உலவுகின்றன. பனி நிரம்பிய நடு இரவில் தனித்திருந்தவர்களின் துன்பத்தின் அளவு புரியாதது போல், காலையிலும் வீசும் வாடை, அதை வெறுக்கும்படியான உள்ளத்தை உண்டாக்கியதால் சினந்த தலைவி, 'வாட்டும் வடையே, என் தலைவன் மட்டும் விரைந்து வரின் நீ ஓடவேண்டியிருக்கும்' என்று எச்சரிக்கிறாள். இங்குதான் பரணருக்கு, ஒருவரை எதிர்த்துத் தோற்றோடிய ஒன்பது பேரின் நினைவு வருகிறது.

'சிறந்த குதிரைப்படையும் பகைவர்க்கு அச்சந்தரும் காலாட்படையும் கொண்டு தாம் விரும்பும் இடத்தை வென்று கொள்ளும் பெரும் வளத்தையுடன் கரிகால் வளவன் முன் நிற்க முடியாமல், வாகைப்பறந்தலை என்னும் போர்க்களத்தில், நல்லதொரு பகல் நேரத்தில் தமது ஒன்பது வெண்கொற்றக்குடைகளையும் நழுவவிட்டு ஓடிப் பெருமை இழந்த ஒன்பது மன்னர்களைப் போல வாட்டும் வாடையே நீயும் ஓடுவாய், என் இனிய தலைவர் இங்கு வரின்' என்று வரலாற்றுத் தகவலை வாடைக்குச் சொல்லிச் சினமாற்றும் தலைவி பரணரின் பாங்கான படப்பிடிப்பு. (அகம். 125)
அகம் 125.

திணை :
பாலை
ஆசிரியர் : பரணர்

அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ,
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
ஆலி அன்ன வால் வீ தாஅய்,
வை வால் ஓதி மைஅணல் ஏய்ப்பத்
தாது உறு குவளைப்போது பிணி அவிழ,
படாஅப் பைங் கண் பா அடிக் கய வாய்க்
கடாஅம் மாறிய யானை போல,
பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர,
பனி அடூஉ நின்ற பானாட் கங்குல்
தனியோர் மதுகை தூக்காய், தண்ணென,
முனிய அலைத்தி, முரண் இல் காலை;
கைதொழு மரபின் கடவுள் சான்ற
செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின்
விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான்
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த
பீடு இல் மன்னர் போல,
ஓடுவை மன்னால் வாடை! நீ எமக்கே.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.