![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 100
![]() இதழ் 100 [ அக்டோபர் 2013] நூறாவது இதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
சென்னை செங்கல்பட்டு சாலையில் சிங்கப்பெருமாள் கோயில் அருகே திருக்கச்சூர் எனும் சிறப்பான பாடல் பெற்ற திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு கோயில் கொண்டு அருள்புரியும் இறைவன் கச்சபேசுவரர், விருந்திட்ட ஈசுவரர் என்று போற்றி அழைக்கப்படுகிறார். இறைவி அஞ்சனாட்சி அம்மன் எனும் பெயருடன் அருள் பாலிக்கிறார்.
தலபுராணம் தேவர்களும்-அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அமுதம் திரண்டு வருவதற்காக திருமால் கச்சபம் (ஆமை) வடிவில் இருந்து சிவபெருமானை வழிபட்டதாக இத்தல புராண வரலாறு குறிப்பிடுகிறது. இதனைக் குறிக்கும் வகையில் நுழைவாயில் மண்டபத்தின் தூண் ஒன்றில் திருமால் ஆமை உருவில் விளங்கும் சிற்பம் காணப்படுகிறது. தலவரலாற்றுச் சிற்பம் ஆலக்கோயில் ஆலமரம் தலமரமாக விளங்கும் இத்தலம் 'ஆலக்கோயில்' என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. சுந்தரப் பெருமான் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். தமது திருப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் 'கச்சூர் ஆலக்கோயில் அம்மானே' என்று போற்றுவதைக் காணலாம். இக்கோயில் கல்வெட்டுக்களிலும் இத்தல இறைவன் 'திருஆலக்கோயில் உடைய நாயனார்' என்றே குறிப்பிடப்படுவதையும் காண்கிறோம். இக்கோயிலில் தியாகராஜப் பெருமான் (சோமாஸ்கந்தர்) வழிபாடு சிறப்பாக நடைபெறுவதால் திருக்கச்சூர் திருக்கோயில் 'உபயவிடங்கத் தலமாக' சிறப்பித்து அழைக்கப்படுகிறது. கல்வெட்டுக்கள் திருக்கச்சூர் கோயிலில் 80க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இக்கோயிலுக்கு அளிக்கப்பெற்ற கொடைகள், அமைக்கப்பட்ட ந ந்தவனங்கள், திருமேனிகள் போன்ற பல வரலாற்றுச் செய்திகள் அவற்றில் காணப்படுகின்றன. முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், சம்பூவராயர்கள், விருப்பண்ண உடையார், நரசிங்கராயர் போன்ற பல மன்னர்கள் காலக் கல்வெட்டுக்கள் இவற்றில் அடக்கம். கல்வெட்டுக்களில் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர் கோட்டத்து செங்குன்ற நாட்டு நித்த வினோத நல்லூர் எனும் திருக்கச்சூர் என்று குறிப்பிடப்படுகிறது. இறைவன் திரு ஆலக்கோயில் உடைய நாயனார் என்று குறிப்பிடப்படுகிறார். சுந்தரரும் திருக்கச்சூரும் தானத்தில் சிறந்தது அன்னதானம் ஆகும். இறைவனது அடியார்களுக்கு அன்னம் அளிப்பது மிகவும் சிறந்தது. சுந்தரப் பெருமான் திருக்கச்சூர் திருத்தலத்திற்கு வருகிறார். இறைவனை வணங்கியபின்னர் இறைவன் கருணையை வேண்டி பசியுடன் அங்கே அமர்ந்திருக்கிறார். இறைவன் தனது அடியாரான சுந்தரருக்காக வீடுதோறும் சென்று உணவு பெற்று சுந்தரரின் பசியைப் போக்குகிறார். இறைவனது அருட்செயலை சுந்தரப் பெருமான் தமது முதுவாய் ஓரி எனத்துவங்கும் தமது திருப்பதிகப் பாடலில் போற்றுவதைக் காணலாம். இறைவனது இச்செயல் பெரியபுராணத்தில் ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்தில் விரிவாகக் கூறப்படுகிறது. இதனால் இத்தலத்து இறைவனை 'இரந்திட்ட ஈசன்' எனவும் விருந்திட்ட ஈசன் எனவும் அழைக்கின்றனர். இக்கோயிலுக்கு அருகே உள்ள சிறிய குன்றில் மருந்தீசரும் இருள் நீக்கித் தாயாரும் எழுந்தருளியுள்ளனர். இங்கு மருத்துவ குணமுடைய மூலிகைகள் இருப்பதால் இறைவன் மலைமேல் மருந்து என்று போற்றப்படுகிறார். ஞான விநாயகர் கச்சூர் திருக்கோயிலின் திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் விநாயகப் பெருமானுக்கு தனிச்சன்னிதி அமைந்துள்ளது. ஞானவினாயகர் திருமுன் விஜயநகரக் கலைப்பாணியுடன் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களைக் கொண்டு விளங்கும் இச்சன்னிதியில் குடிகொண்டுள்ள விநாயகப் பெருமான் ஞான விநாயகர் என்று அழைத்துப் போற்றப்படுகிறார். கோயில் விமானத்தில் பூதகணங்கள் வாழைப்பழம் - பலாப்பழத்தை தாங்கியுள்ளன. தூண்களில் கஜசம்ஹார மூர்த்தி, விநாயகர், இராசிச் சக்கரம் போன்ற பல சிற்பங்கள் அழகாகக் காட்சியளிக்கின்றன. கலையழகு மிக்க தூண்கள் இராசிச் சக்கரம் கஜசம்ஹாரர் யானையும் காளையும் - தாராசுரம் சிற்பம் போன்றது முன்மண்டப மேற்கூரையின் உட்புறங்களின் பக்கங்களில் சுந்தரர் வரலாறு ஒரு தொடர்ச் சிற்ப வடிவில் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பானது. அவிநாசி திருத்தல வரலாறு, சுந்தரர் பல்லக்கில் வருவது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன. சுந்தரர் வரலாற்றுடன் இத்தலம் தொடர்பு கொண்டு விளங்குவதால் இச்சிற்பங்கள் இங்கு இடம்பெற்றிருக்க வேண்டும். சுந்தரர் வரலாறு சிற்பத்தொடர் சுந்தரர் வரலாறு சிற்பத்தொடர் (தொடர்ச்சி) சுந்தரர் வரலாறு சிற்பத்தொடர் (தொடர்ச்சி) இறைவனது பாதங்கள் படிந்த திருக்கச்சூர் மண்ணில் எழுந்தருளி அருள்புரியும் ஈசனையும் தேவியையும் ஞானவிநாயகப் பெருமானையும் வழிபட்டு வணங்குவோம்!this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |