http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 119

இதழ் 119 [ மே 2015 ]
டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையச் சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

வாழ்நாள் சாதனையாளர்கள்
மாமண்டூர் நரசமங்கலக் குடைவரைகள் - 05
A Study on Nagaram in Thiruchirappalli District (Between C. E. 500 and 1300)
சிராப்பள்ளி முசிறிச் சாலையில் சில கண்டுபிடிப்புகள் - 2
திருக்கடவூர் திருமயானம்
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் - ஓர் அறிமுகம்
வரலாறு ஆய்விதழின் வரலாறு
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நூல்கள் - முழுத்தொகுப்பு
கற்றலும் களப்பணியும்
மாலைப் பொழுதினிலே ஒரு நாள்..
தொட்டனைத்தூறும் மணற்கேணி
Historical Methods - Learning and Understanding from Dr.R.Kalaikkovan
கட்டடக்கலையில் கையளவும் கடலளவும்
டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையமும் நானும்
இதழ் எண். 119 > சிறப்பிதழ் பகுதி
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நூல்கள் - முழுத்தொகுப்பு
அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்
நூலாசிரியர் இரா. கலைக்கோவனின் படைப்புக்கள்
1. கலை வளர்த்த திருக்கோயில்கள் [1984]
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 522, டி. டி. கே. சாலை, சென்னை - 600 018.பக்கங்கள் 179 விலை ரூ. 20.

நூலாசிரியரின் முதல் ஆய்வு நூல் - மானம்பாடி நாகநாதசாமி கோயில், குடந்தை ஆறைவடதளி, திருச்சத்திமுற்றம், குமார வயலூர், பழையாறை சோமநாதர் கோயில், குடந்தை நாகேசுவரர் கோயில், சோழபுரம் கோயில்கள், கொரநாட்டுக் கருப்பூர்க் கோயில், கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில், அரிசிற்கரைப்புத்தூர் சிவன்கோயில், மேலைக்கடம்பூர் அமிர்தகடேசுவரர், உறையூர்ப் பஞ்சவர்ணேசுவரர்க் கோயில், குடந்தை மேற்றளி, உறையூர் நாச்சியார் கோயில், கங்கைகொண்டசோழபுரம், கண்ணனூர் பற்றிய பதினாறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் தமிழ்நாடு அரசின் முதற் பரிசு பெற்றது.


2. காட்டுக்குள் ஒரு கலைக்கோயில் [1986]

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 522, டி. டி. கே. சாலை, சென்னை - 600 018. பக்கங்கள் 196 விலை ரூ. 20.

நூலாசிரியரின் இரண்டாம் படைப்பு - அல்லூர் பசுபதீசுவரர், எலுமிச்சம்பாளையம் சக்கராயி கோயில், ஆலம்பாக்கம் கயிலாசநாதர் கோயில் - மாடமேற்றளி, ஐயாறு வடகயிலாசம், முள்ளிக்கரும்பூர்க் கோயில், பனமங்கலம் வாரணபுரீசுவரர் கோயில், உறையூர்த் தான்தோன்றீசுவரம், முழையூர்ப் பரசுநாதர்கோயில், கோயிலடி அப்பக்குடத்தான் ஆகிய கோயில்களைப் பற்றிய கட்டுரைகளுடன் திருமலைநாயக்கர் செப்பேடு, சண்டீசக் குழப்பம், கல்லில் வடித்த காதல் கவிதைகள் எனும் பொதுக்கட்டுரைகளும் அடக்கம். சண்டீசக் குழப்பம் நான்குமுக சண்டேசுவரர் திருமேனிகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை. இந்நூல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது.


3. எழில் கொஞ்சும் எறும்பியூர் [1987]

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 522, டி. டி. கே. சாலை, சென்னை - 600 018. பக்கங்கள் 218 விலை ரூ. 20.

நூலாசிரியரின் மூன்றாம் படைப்பு - திருஎறும்பியூர் மலைக்கோயில், திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில், கோயிலடி திவ்யஞானேசுவரர் கோயில், திருவரங்கம், பஞ்சவன்மாதேவீசுவரம் பற்றிய கட்டுரைகளுடன் தாட்சாயணி, சதுரமும் இலலிதமும், தாமரைத் திருவடிக்கீழ், நவகண்ட நடுகற்கள் முதலிய செப்புத்திருமேனி, சிற்பம் சார்ந்த கட்டுரைகளும் சமுதாயத்தில் திருமுறைத்தாக்கம், வாருங்கள் வலம் வருவோம், கல்வெட்டுகளில் இசைக்கருவிகள், கல்வெட்டுகளில் சமுதாயம் மறுபார்வை ஆகிய பொதுக் கட்டுரைகளும் அடக்கம்.


4. சுவடழிந்த கோயில்கள் [1987]

பாரி நிலையம், 184, பிராடுவே, சென்னை- 600 108. பக்கங்கள் 196 விலை ரூ. 18.

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் ஒலிபரப்பிய மூன்று அரைமணிநேர உரைகள் (சுவடழிந்த கோயில்கள்-1984, அழிந்துகொண்டிருக்கும் அழகுக் கோயில்கள்-1985, காலத்தால் அழியாத கலைக்கோயில்-1986) மூன்று கட்டுரைகளாக அமைய, முள்ளிக்கரும்பூர் ஒரு வரலாற்று விடியல், கோனேரிராஜபுரத்துக் குழப்பங்கள், குடந்தைக் கீழ்க் கோட்டம் கல்வெட்டுகள் எனும் தலைப்புகளில் செந்தமிழ்ச் செல்வியில் வெளியான மூன்று ஆய்வுக் கட்டுரைகள் உடன் இணைய உருவான நூல்.


5. பழுவூர்ப் புதையல்கள் [1989]

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 522, டி. டி. கே. சாலை, சென்னை - 600 018. பக்கங்கள் 322 விலை ரூ. 35.

தமிழ்நாட்டின் ஒரு பகுதியை ஆண்ட சிற்றரச மரபினரான பழுவேட்டரையர் களைப் பற்றிய ஆய்வு நூல். புதிய பார்வையில் பழுவூர் உண்மைகள், காற்றில் கரைந்து கொண்டிருக்கும் காவியக் கோயில்கள் (பகைவிடை ஈசுவரம், அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம், ஆலந்துறையார் கோயில், மறவனீசுவரம்), கல்வெட்டுப் பார்வையில் பழுவூர் எனும் தலைப்புகளில் அமைந்த பழுவூர் மரபு குறித்த விரிவான நூல்.6. பழுவூர் அரசர்கள், கோயில்கள், சமுதாயம்,

இலக்கியப்பீடம் பதிப்பகம், 3 ஜெயசங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033. பக்கங்கள் 299 விலை ரூ. 75.

பழுவூர்ப் புதையல்களின் மீள் வடிவாக்கம். பழுவேட்டரையர் கட்டமைப்புகள் மிக விரிவான அளவில் படம்பிடிக்கப்பட்டுள்ளமை தனிச்சிறப்பு.7. சோழர் கால ஆடற்கலை [2003]

அலமு பதிப்பகம் (முதற் பதிப்பு), சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம். ஜி. ஆர். நகர், சென்னை - 600 078. பக்கங்கள் 288 விலை ரூ. 225.

விஜயாலய சோழர் தொடங்கி அதிராஜேந்திரர் காலம் வரை அமைந்த ஆடற்கலைச் சிற்பங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து ஆடற்கல்வி, கலைஞர்களும் கருவிகளும், அரங்கம், ஆடற்கலைஞர்களும் அவர்தம் வாழ்க்கையும் எனும் நான்கு தலைப்புகளில் எழுதப்பட்ட கலை ஆய்வு நூல். தமிழ்நாடு அரசின் முதற் பரிசு பெற்ற நூல்.8. தலைக்கோல் [2004]

சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம். ஜி. ஆர். நகர், சென்னை - 600 078. பக்கங்கள் 264 விலை ரூ. 115.

நூலாசிரியரின் ஆடற்கலை சார்ந்த இரண்டாம் ஆய்வுப் படைப்பு. தலைக்கோல், அப்பரும் அவிநயமும், காந்தள், தேர்க்குரவைகள், முதல் திருமுறையில் ஆடல் குறிப்புகள், அப்பர் என்னும் அரிய மனிதர், சங்க காலத்தில் ஆடற்கலை, சங்கம் மருவிய காலத்தில் ஆடற்கலை, பல்லவர்-பாண்டியர் காலத்தில் ஆடற்கலை, புதிய பார்வையில் சார்ங்கபாணி கரணங்கள் ஆகிய கட்டுரைகளின் அடக்கம்.9. வரலாற்றின் வரலாறு [2006]

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி - 620 018. பக்கங்கள் 146 விலை ரூ. 100.

இலக்கியம், வரலாறு இரண்டிலும் கோலோச்சி முத்திரை நூல்களைப் படைத்த பேராசிரியர் முனைவர் மா. இராசமாணிக்கனாரின் வாழ்வையும் ஆய்வுகளையும் ஏழு தலைப்புகளின் கீழ் விரிவாகப் படம்பிடிக்கும் ஆய்வு நூல். பின் இணைப்புகளாக இராசமாணிக்கனாரின் வாழ்க்கைக் கு றிப்புகள், அவர் குடும்பம், அவர் நினைவு போற்றும் அமைப்புகள், காலநிரல்படி அவர் நூல்கள், அவர் தொடர்பான ஒளிப்படங்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன.


10. மா. இராசமாணிக்கனார் [2006]

சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443 அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018. பக்கங்கள் 132 விலை ரூ. 25.

இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற வரிசையில் தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார் பற்றிய படைப்பு. இலக்கியம், சமயம், வரலாறு, கோயிற்கலைகள், கல்வெட்டு ஆகியவற்றில் ஆழ்ந்த புலமை உடையவரும் ஆய்வு நெறிமுறையிலும் அணுகு முறைகளிலும் புதிய சிந்தனைகளை விதைத்தவரும் சாதி சமயமற்ற சமுதாயத்தை உருவாக்கத் தம் எழுத்தாலும் பேச்சாலும் பாடுபட்டவரும் மாந்த நேயமும் மொழி, நாடு இவற்றில் தளராப் பற்றும் கொண்டு உழைத்து உயருமாறு இளைய தலைமுறையை ஆற்றுப்படுத்தியவரும் பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, பத்துப்பாட்டு ஆராய்ச்சி,பெரியபுராண ஆராய்ச்சி, சைவ சமய வளர்ச்சி, தமிழ் மொழி இலக்கிய வரலாறு முதலிய காலம் கடந்து நிற்கும் அரிய நூல்களைப் படைத்தவருமான பேராசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் எளிமை, இனிமை, உண்மை, உழைப்பு ஆகியவற்றை உரிய தளங்களில் பதிவு செய்திருக்கும் நூல்.11. வாருணிக்கு எழுதிய வரலாற்று மடல்கள் [2010]

சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம். ஜி. ஆர். நகர், சென்னை - 600 078. பக்கங்கள் 224 விலை ரூ. 200.

வரலாறு டாட் காம் மின்னிதழிலும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வரலாறு ஆண்டு ஆய்விதழிலும் எழுதிய பதின்மூன்று மடல் வடிவக் கட்டுரைகளின் தொகுப்பு. பரங்குன்றம் வடகுடைவரை வளாகப் புதிய கண்டுபிடிப்புகள், எனக்கு இந்தியா வேண்டாம், கட்டடக்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும், முல்லை நிலத்தில் ஒரு நாள், மகுடாகமம்-பரசிவம்-தங்கவிமானம், மெய்ப்பொருள் காண்பதறிவு, ஞாலவெளியில் ஒரு கால நடை, உண்மைகள் சுடும், காலந்தோறும் கல்வெட்டுத் தமிழ்நடை, பாராட்டுவோம், ஒரு மனிதன்-ஒரு கோயில்-ஒரு புத்தகம்- ஒரே குழப்பம், அழகாகுமா?, பெருமைச் சுவடுகள் ஆகிய கட்டுரைகள் பதிவாகியுள்ளன.12. திரும்பிப்பார்க்கிறோம் 9 தொகுதிகள், [2007-2015]

டாக்டர் மா. இராச மாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி - 620 018.

கண் மருத்துவர் இரா. கலைக்கோவன் வரலாற்றாய்வைத் தொடங்கிய நாள் முதல் தொடரும் அனுபவங்களின் பிழிவு. டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் தோற்றம், வளர்ச்சி, பங்களிப்புகள், மையம் சார்ந்த ஆய்வாளர்களின் ஆய்வுப் பணிகள், வரலாறு ஆய்விதழின் தோற்றமும் வளர்ச்சிப் பாதையில் அது சந்தித்த சூழல்களும் என ஓர் ஆய்வுக் குழுவின் நெடிய பயணச் சுவடுகள் காலநிரலாகப் பதிவாகியுள்ள தொகுதிகள்.

தொகுதி 1 1981-1983 பக்கங்கள் 108 விலை ரூ. 100.
தொகுதி 2 1983-1988 பக்கங்கள் 115 விலை ரூ. 100.
தொகுதி 3 1988-1989 பக்கங்கள் 112 விலை ரூ. 100.
தொகுதி 4 1989-1991 பக்கங்கள் 112 விலை ரூ. 100.
தொகுதி 5 1991-1993 பக்கங்கள் 124 விலை ரூ. 150.
தொகுதி 6 1993-1995 பக்கங்கள் 164 விலை ரூ. 150.
தொகுதி 7 1995-1999 பக்கங்கள் 164 விலை ரூ. 150.
தொகுதி 8 1999-2004 பக்கங்கள் 168 விலை ரூ. 150.
தொகுதி 9 2004-2007 பக்கங்கள் 168 விலை ரூ. 150.நூலாசிரியர்கள் மு. நளினி, இரா. கலைக்கோவனின் படைப்புக்கள்
1. தளிச்சேரிக் கல்வெட்டு [2002]

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 522, டி. டி. கே. சாலை, சென்னை - 600 018. பக்கங்கள் 261 விலை ரூ. 100.

தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் திருக்கோயிலில் காணப்படும் ஆடல், இசை, கோயிற் பணிகள் தொடர்பான 56 மீட்டர் நீளத் தமிழ்க் கல்வெட்டின் மறு படிப்பில் விளைந்த விரிவான ஆய்வுக் கட்டுரை. இக்கல்வெட்டுக்குத் தளிச்சேரிக் கல்வெட்டு என்ற பெயரைச் சூட்டியவர்கள் இந்நூலாசிரியர்கள். திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் கோயில், கபிலர்மலைக் கோயில், பெருமுடி ஈசுவரர் கோயில், தழுதாழைச் சிவன் கோயில் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளுடன் சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் குறித்த விரிவான ஆய்வும் இடம்பெற்றுள்ளது. குமார வயலூர்க் கோயில் புதிய கண்டுபிடிப்புகளுடன் மீளாய்வுக் கட்டுரையாக, நத்தம் ஆதிமூலநாதப் பெருமாள் கோயிலில் கிடைத்த தனித்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் நத்தத்தில் பழையதும் புதியதும் என்ற தலைப்பில் பதிவாகியுள்ளன. கல்பாளையத்தில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு சந்தியப்பன் கல்லில் சரித்திரச் சுவடுகளாக வடிவெடுத்துள்ளது.2. அத்யந்தகாமம் [2004]

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி - 620 018. பக்கங்கள் 186 விலை ரூ. 90.

மாமல்லபுரம் ஒருகல் தளிகளில் (பஞ்சபாண்டவர் ரதங்கள்) கட்டட, சிற்ப, கல்வெட்டுச் சிறப்பு வாய்ந்த முத்தள ஒருகல் தளியான அத்யந்தகாம பல்லவேசுவர கிருகம் (தருமராஜ ரதம்) பற்றிய முழுமையான ஆய்வு நூல். சிற்ப, கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் இதைக் கட்டமைத்தவர் இராஜசிம்மப் பல்லவரே என்பதை நிறுவும் நூல்.3. மகேந்திரர் குடைவரைகள் [2004]

அலமு பதிப்பகம் (முதற் பதிப்பு), சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம். ஜி. ஆர். நகர், சென்னை - 600 078. பக்கங்கள் 286 விலை ரூ. 225.

தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக அமைந்த பல்லவப் பேரரசர் முதலாம் மகேந்திரவர்மரின் கலையாற்றல் பேசும் நூல். மண்டகப்பட்டு இலக்ஷிதாயதனம், பல்லாவரம் குடைவரை, மாமண்டூர்-நரசமங்கலம் குடைவரைகள், மகேந்திரவாடி மகேந்திர விஷ்ணுகிருகம், சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேசுவரம், தளவானூர் சத்ருமல்லேசுவராலயம், சிராப்பள்ளி இலளிதாங்குர பல்லவேசுவர கிருகம் ஆகிய ஏழு குடைவரைகளைப் பற்றிய விரிவான ஆய்வுக் கட்டுரைகள். மகேந்திரர் குடைவரைகள் ஓர் ஒப்பாய்வு என்ற தலைப்பில் குடைவரைகளைப் பற்றிய திறனாய்வு. மகேந்திரரின் ஆளுமை ஆய்வாகப் பேரறிவாளர் என்ற தலைப்பில் தனிக் கட்டுரை. வல்லம், குரங்கணில் முட்டம், மேலைச்சேரிக் குடைவரைகள் மகேந்திரர் காலக் குடைவரைகளாக விளக்கம் பெறல். குடைவரைகளைப் பற்றித் தமிழில் வெளிவந்த முதல் விரிவு நூல்.
4. பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும் [2005]

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி - 620 018. பக்கங்கள் 248 விலை ரூ. 120.

பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும், பிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்த இலக்கியம், கல்வெட்டு, சிற்பம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளும் பெண் தெய்வங்களின் தொன்மையான சிற்பங்கள், காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பங்கள் எனும் சிற்ப ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டறிக்கைகள் பதிப்பும் பயன்பாடும், கல்வெட்டுகள் தேடல்-தெளிதல்-பதிப்பித்தல்-சிக்கல்களும் தீர்வுகளும், கோயிற்கலை ஆய்வு நெறிமுறைகள் ஆகிய ஆய்வியல் பதிவுகளும் தலைப்பறை-மத்தளம்-சிரட்டைக்கின்னரி ஆகிய இசைக்கருவிகள் குறித்த ஆய்வுக் கட்டுரையும் உள்ளன. அரும்பாவூர்க் கோயில், சதுர்வேதிமங்கலம் உருத்திரகோடீசுவரர் கோயில் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளுடனான விரிவான பதிவுகள்.5. வலஞ்சுழி வாணர் [2005]

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி - 620 018. பக்கங்கள் 244 விலை ரூ. 120.

குடந்தை தஞ்சாவூர்ச் சாலையில் 6 கி. மீ. தொலைவில்அமைந்துள்ள திருவலஞ்சுழிக் கோயிலை முழுமையான அளவில் ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல். ஆய்வின்போது பல புதிய கல்வெட்டுகளும் சிற்பத்தொகுதிகளும் கண்டறியப்பட்டன. கல்வெட்டுகள் குறிப்பிடும் பிடாரி ஏகவீரி அடையாளப்பட்டதுடன் அவர் கோயிலும் கண்டறியப்பட்டது. கட்டடம், சிற்பம், கல்வெட்டுகள், இலக்கியம் சார்ந்து உருவான நூல்.6. கோயில்களை நோக்கி [2006]

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி - 620 018. பக்கங்கள் 228 விலை ரூ. 120.

சிராப்பள்ளி வானொலியில் 12 வாரங்கள் தொடர்ந்து கோயில்களின் மேன்மை பற்றியும் அவை வரலாற்றுக் களங்கள் என்பது குறித்தும் மக்களிடம் பகிர்ந்து கொண்ட தரவுகளை ஒருங்கிணைத்துத் தலைமைக் கட்டுரையாக்கிப் பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளுடன் சேர்த்து உருவாக்கிய நூல். பல்லவர்களின் பிராகிருதச் செப்பேடுகள், சிம்மவர்மரின் சமஸ்கிருதச் செப்பேடுகள், ஓங்கோடு-சுராச் செப்பேடுகள் பற்றிய கட்டுரைகளும் காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரம் பற்றிய அம்ம அழகிதே, தேவதேவிக் கல்வெட்டுகள் ஆகிய கட்டுரைகளும் திருவலஞ்சுழிக் கோயில் ஆய்வுக் கால அனுபவங்கள் பற்றிய பதிவுகளும் பேய்த்தொழிலாட்டி, யார் காரணம், மன்றத்துப் புன்னையும் மாமனிதர் அப்பரும், சில நேரங்களில் சில கேள்விகள், தட்டாத கதவுகள் திறப்பதில்லை, என்றைக்கு விழிப்பது, சாந்திக்கூத்து, வரலாறு காத்திருக்கிறது, ஆத்மாவின் அடையாளங்கள் எனும் பொதுக் கட்டுரைகளும் நகர் அப்பிரதீசுவரர் கோயில் தொடர்பான சமய சாசனம், நன்றியுடன் நகரிலிருந்து ஆகிய கட்டுரைகளும் திருநெடுங்களம் கோயில் ஆய்வில் வெளிப்பட்ட நெடுங்களத்தில் புதிய கல்வெட்டுகள், ஸ்ரீபுறக்குடிப்பள்ளி ஆகிய பதிவுகளும் மீட்டுருவாக்கத்திற்கு ஆளாகி இடம்பெற்றுள்ளன.7. தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் [2007]

சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம். ஜி. ஆர். நகர், சென்னை - 600 078. பக்கங்கள் 208 விலை ரூ. 100.

தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொடர்பான நூலாசிரியர்களின் ஆய்வுப் படைப்புகளில் இது இரண்டாம் தொகுதி. குன்றக்குடித் திருமடத்தின் ஆளுகையில் உள்ள குன்றக்குடிக் குடைவரைகள், பிரான்மலைக் குடைவரை, அரளிப்பட்டிக் குடைவரை, திருக்கோளக்குடிக் குடைவரை வளாகம் ஆகியன பற்றிய விரிவான ஆய்வு நூல். இந்நான்கு இடங்களிலும் அகழப்பட்டுள்ள குடைவரைகள், செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் பற்றிய ஒப்பீடு இடம்பெற்றுள்ளது.8. மதுரை மாவட்டக் குடைவரைகள் [2007]

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி - 620 018. பக்கங்கள் 272 விலை ரூ. 150.

தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொடர்பான நூலாசிரியர்களின் ஆய்வுப் படைப்புகளில் இது மூன்றாம் தொகுதி. அரிட்டாபட்டி, மாங்குளம், குன்றத்தூர், ஆனைமலை, பரங்குன்றம் ஆகிய இடங்களிலுள்ள அனைத்துக் குடைவரைகள், குடைவுத் திருமுன்கள், சிற்பங்கள் குறித்த முழுமையான ஆய்வு நூல். மதுரை மாவட்டக் குடைவரைகள் தொடர்பான ஒப்பீடும் இடம் பெற்றுள்ளது.9. தென்மாவட்டக் குடைவரைகள் [2009]

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி - 620 018. பக்கங்கள் 208 விலை ரூ. 200.

தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொடர்பான நூலாசிரியர்களின் ஆய்வுப் படைப்பு களில் இது தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் உள்ள 18 குடைவரைகளைப் பற்றிப் பேசும் நான்காம் தொகுதி. திருமலை, கூத்தம்பூண்டியான் வலசு, மூவரைவென்றான், புதுப்பட்டி, திருத்தங்கல், பாறைக்குளம், செவல்பட்டி, கழுகுமலை, மலையடிக்குறிச்சி, வீரசிகாமணி, திருமலைப்புரம், ஆனையூர், சொக்கம்பட்டி, ஆண்டிச்சிப்பாறை, குரத்தியறை, சிவகிரி, விழிஞம், நந்திக்கரை ஆகிய குடைவரைகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் அவை சார்ந்த ஒப்பீடும் இடம்பெற்றுள்ளன.10. புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள் [2010]

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி - 620 018.

பக்கங்கள் 400 விலை ரூ. 300.

தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொடர்பான நூலாசிரியர்களின் ஆய்வுப் படைப்பு களில் இது ஐந்தாம் தொகுதி. புதுக்கோட்டை மாவட்டத்தில் அகழப்பட்டுள்ள மலையடிப்பட்டிக் குடைவரைகள், குன்றாண்டார்கோயில் குடைவரைகள், மெய்யம் குடைவரைகள், நகரத்தார்மலைக் குடைவரைகள், மலையக்கோயில் குடைவரைகள், கோகர்ணம், தேவர்மலை, பூவாலைக்குடி, ஆய்ங்குடி, மாங்குடி, குலாலக்கோட்டையூர், குடுமியான்மலை, சிற்றண்ணல்வாயில் ஆகிய இடங்களிலுள்ள குடைவரைகள் குறித்த முழுமையான ஆய்வு நூல். இம்மாவட்டக் குடைவரைகள் குறித்த ஒப்பீடும் உள்ளது.11. மாமல்லபுரம் குடைவரைகள் [2012]

சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம். ஜி. ஆர். நகர், சென்னை - 600 078. பக்கங்கள் 248 விலை ரூ. 250.

தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொடர்பான நூலாசிரியர்களின் ஆய்வுப் படைப்புகளில் இது ஆறாம் தொகுதி. மாமல்லபுரம், கழுக்குன்றம் குடைவரைகள் முதல்முறையாக நிறைவடையாக் குடைவரைகள், கருவறைத் தெய்வமற்ற குடைவரைகள், கருவறைத் தெய்வம் பெற்ற குடைவரைகள் என்ற முப்பிரிவுகளின் கீழ் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இக்குடைவரைகள் குறித்த ஒப்பீடும் இவற்றை உருவாக்கியவர் குறித்த கருதுகோள்களும் இடம்பெற்றுள்ளன.12. பல்லவர்-பாண்டியர்-அதியர் குடைவரைகள் [2012]

சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம். ஜி. ஆர். நகர், சென்னை - 600 078. பக்கங்கள் 352 விலை ரூ. 300.

தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொடர்பான நூலாசிரியர்களின் ஆய்வுப் படைப்பு களில் இது ஏழாம் தொகுதி. முதல் ஆறு தொகுதிகளில் இடம்பெறாது போன இருபது குடைவரைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் பல்லவர் குடைவரைகள், அதியர் குடைவரைகள், பாண்டியர் குடைவரைகள் எனும் பெருந்தலைப்புகளின் கீழ்ப் பதிவாகியுள்ளன. சிங்கப் பெருமாள் கோயில் பாண்மலை, ஆவூர், சிங்கவரம், திரைக்கோயில், கீழ்மாவிலங்கை, அறையணிநல்லூர், பைஞ்ஞீலி ஆகிய ஊர்களிலுள்ள குடைவரைகளுடன் சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை, திருவெள்ளறைக் குடைவரைகள், தான்தோன்றிமலைக் குடைவரைகள் ஆகியன பல்லவர் குடைவரைகளாக அமைய, அதியேந்திர விஷ்ணு கிருகமும் நரசிம்மர் குடைவரையும் அதியர் குடைவரைகளாக இடம்பெற்றுள்ளன. பிள்ளையார்பட்டி, மகிபாலன்பட்டி, மணப்பாடு, பூதப்பாண்டி, குற்றாலம், திருச்செந்தூர் ஆகிய இடங்களிலுள்ள குடைவரைகள் பாண்டியர் குடைவரைகளாகப் பதிவாகியுள்ளன. இந்த இருபது குடைவரைகள் பற்றிய ஒப்பீடும் உள்ளது.


நூலாசிரியர் மு. நளினியின் படைப்புக்கள்
1. பாதைகளைத் தேடிய பயணங்கள் [2009]

சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம். ஜி. ஆர். நகர், சென்னை - 600 078. பக்கங்கள் 240 விலை ரூ. 150.

22 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. அவற்றுள் முதற் கட்டுரையான வரலாற்றுப் பதிவுகள் களஆய்வுகளின்போது ஆசிரியரின் கண்களில் விழுந்து வரலாற்று மேடைக்கு வந்த புதிய பதிவுகளாகும். புணை ஆவணம், காவற்காட்டு இழுவை, கல்வெட்டில் மருத்துவர், இராமாயணக் கதவுகள், தொட்டான் பட்டான், மரணதண்டனை, மகப்பேற்றின் கொண்டாட்டம், கழுதையேற்றம், மீனாட்சி திருமணத்தில் மங்கம்மாள், மீனாட்சி கோயில் மேற்றள மணிக்கூண்டு, திருமுன் நிற்கும் திருமலை, மரபுவரிசையில் நாயக்க அரசர்களின் சிற்பங்கள், எப்பாடுபட்டாகிலும் மகப்பேறு, பார்க்கவும் படிக்கவும் இராமாயணப் பத்திகள், சிவிகை பொறுத்தாரும் ஊர்ந்தாரும், ஆரத்தழுவ நீயிருந்தால் அமைதியாகப் பெற்றிடுவேன், கழுக்குன்றப் புதையல்கள்ஆகியன இத்தகு பதிவுகளாம்.

தமிழ்நாட்டுக் குடைவரைகள் - சிலசெய்திகள், பரமேசுவர மகா வராக விஷ்ணு கிருகம், தமிழ்நாட்டு ஆடற்கலை, நங்கவரம் சுந்தரராஜப் பெருமாள் கோயில், சோழர் கால ஆடலாசான்கள், இராஜராஜீசுவரத்துப் பாடகர்கள், மூவேந்தன் என்றும் பசாசின் பேர், ஏகவீரி, திருமணல்மேடு பஞ்சநதீசுவரர் கோயில், கோவண நாடகம், உடையாளூர்க் கயிலாசநாதர் கோயில், திருக்கோயில் ஆடலரங்குகள், வைஷ்ணவ மாகேசுவரம், விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில், ஓங்கார நாதத்து வேதமங்கலம், திருவரங்கத்து வைகாசித் திருவிழா, அங்கயற்கண்ணி வளாகம், வரலாறு வழங்கும் விளக்குத் தோரணங்கள், மங்களாவூர் மத்யார்ச்சுனேசுவரர் கோயில், பூலோகநாதசுவாமி கோயில், எரணியம்மன் கோயில் ஆகிய தலைப்புகளில் பிற கட்டுரைகள் அமைந்துள்ளன.


நூலாசிரியர்கள் அர. அகிலா, இரா. கலைக்கோவனின் படைப்புக்கள்
ஒருகல் தளிகள் ஒன்பது [2009]

டாக்டர் மா. இராச மாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி - 620 018. பக்கங்கள் 280 விலை ரூ. 200.

மாமல்லபுரத்திலுள்ள பல்லவர் கால ஒருகல் தளிகளான ஒன்பது தளிகளையும் நிறைவாக ஆய்வு செய்து விரிவான அளவில் உருவான கட்டுரைகளை உள்ளடக்கிய நூல். ஒன்பது தளிகளையும் பல கோணங்களில் ஒப்பீடு செய்து பொதுக்கருத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நூலாசிரியர்கள் கோ. வேணி தேவி, இரா. கலைக்கோவனின் படைப்புக்கள்
மலைக்க வைக்கும் மாடக்கோயில்கள் [2011]

டாக்டர் மா. இராச மாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி - 620 018. பக்கங்கள் 384 விலை ரூ. 300.

சோழப் பெருவேந்தர் கோச்செங்கணான் அமைத்த 32 மாடக்கோயில்களை ஆய்வு செய்து எழுதப்பெற்ற நூல். கோச்செங்கணான் பற்றிய ஆய்வுக் கட்டுரையும் மாடக்கோயில்கள் பற்றிய விரிவான அளவிலான ஒப்பீடும் குறிப்பிடத்தக்கன. பசுபதிகோயில், நல்லூர், ஆவூர், ஆறைவடதளி, சேய்ஞலூர், தலைஞாயிறு, நாலூர், நறையூர், குடவாயில், நன்னிலம், அம்பர், வைகல், மலையீசுவரம், சட்டநாதர் கோயில், கீழ்வேளூர், சிக்கல், வலிவலம், தேவூர், தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர்-தட்சிணபுரீசுவரர், ஆக்கூர், திருவிளையாட்டம், பண்டார வாடை, பெருவேளூர், நாங்கூர், நகரி, இந்தளூர், கீழையூர், திருப்பேர்நகர், ஆலம்பாக்கம், எலவானசூர்க் கோட்டை, பெருங்கடம்பனூர் ஆகிய ஊர்க்கோயில்கள் நன்கு படம் பிடிக்கப்பட்டுள்ளன.


பதிப்பாசிரியர்கள் மா. ரா. அரசு, மு. நளினி, அர. அகிலா
கலை 66 [2014]

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி - 620 018. பக்கங்கள் 642 விலை ரூ. 500.

டாக்டர் இரா. கலைக்கோவனின் ஆய்வு மாணவர்களும் நண்பர்களும் இணைந்து வெளியிட்டிருக்கும் பணிப் பாராட்டு நூல். உறவுகள், நண்பர்கள், மாணவர்கள் என 66 பேர் டாக்டர் கலைக்கோவனிடம் கற்றதும் பெற்றதும் பற்றிக் கட்டுரைத்துள்ளனர்.

நூல்களைப் பெற விழைவோர் நூல்களுக்குரிய விலைத்தொகையுடன், தனியர் அஞ்சலில் அனுப்ப நூல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அஞ்சல் தொகையும் இணைத்தனுப்புக. முகவரி - டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி87, பத்தாம் குறுக்கு, தில்லைநகர், திருச்சிராப்பள்ளி - 620 018. தொடர்பு எண் - 0431 2766581 (பகல் 10-1 மாலை 5.30-8.30). மின்னஞ்சல் -
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.