http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 3
இதழ் 3 [ அக்டோபர் 15 - நவம்பர் 14, 2004 ] இந்த இதழில்.. In this Issue.. |
இதோ! வரலாறு.காம் மூன்றாவது இதழ் உங்கள் வாசிப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. முதல் இரண்டு இதழ்களுக்குத் தாங்கள் அளித்த ஆதரவும் ஊக்கமும் புதிய தொடர்களுடன் வெளிவந்திருக்கும் இம்மூன்றாவது இதழுக்கும் தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பின்னூட்டப்பகுதி, தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் வைட்டமின் மாத்திரைகளை அனுப்பிய நண்பர்களுக்கு நன்றிகள் பல. இணையதளத்தை மேம்படுத்தத் தாங்கள் அளித்த யோசனைகள் ஒவ்வொன்றாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாங்கள் இதில் பகுதி நேரமாக மட்டுமே ஈடுபடுவதால் அவ்வளவு விரைவாகப் பணிகளை முடிக்க இயலவில்லை. எனினும் கூடிய விரைவில் அனைத்தையும் முடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களில் அடிக்கடி நாம் சந்தித்த கேள்வி, ஏன் திரு. கலைக்கோவன் வெளியிடும் வரலாறு ஆய்விதழின் பெயரையே வைத்திருக்கிறீர்கள் என்பதுதான். இதன் விடை மிகவும் எளிதானது. ஆராய்ச்சியாளர்களால் ஆராய்ச்சியாளர்களுக்காக வெளியிடப்படுவது வரலாறு ஆய்விதழ். ஆராய்ச்சியாளராக விரும்புபவர்களால் ஆராய்ச்சியாளராக விரும்புபவர்களுக்காக நடத்தப்படுவது வரலாறு.காம். ஆனால் இரண்டின் நோக்கமும் வரலாற்றுச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான். முதல் இரண்டு இதழ்களில் இயற்றமிழும் இசைத்தமிழும் மட்டும் இடம்பெற்றன. நாடகத்தமிழையும் சேர்க்கும் முயற்ச்¢யின் முதல்படியாக மன்னர் மகேந்திரவர்மர் இயற்றிய மத்தவிலாசம் என்ற இந்த அரசியல் அங்கத நாடகத்தை அளிக்கிறோம். வரலாறு.காமில் இதை வெளியிட அனுமதியளித்த அமெரிக்காவைச் சேர்ந்த திரு. மைக்கேல் லாக்வுட் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மத்தவிலாசத்தின் தமிழாக்கத்தின் பதிப்பாசிரியர் இவரே. தஞ்சாவூர்ப் பயணக்கட்டுரை கருங்கல்லில் ஒரு காவியத்தின் நிறைவுப்பகுதியுடன், சமீபத்தில் நாங்கள் சென்று வந்த ஆறகழூர்ப் பயண அனுபவங்கள் வல்லமை தாராயோ என்ற பெயரில் வந்திருக்கிறது. தவிர்க்க இயலாத காரணங்களால் இலலிதாவின் இராகமாலிகையும் இலாவண்யாவின் கல்வெட்டாய்வும் இந்த இதழில் இடம்பெறவில்லை. அடுத்த இதழிலிருந்து தொடரும். உயர்நிலைப்பள்ளி மாணவி செல்வி. வாருணி திரு. கலைக்கோவன் அவர்களுக்கு அனுப்பியிருந்த கடிதத்திற்கு, டாக்டர் அனுப்பிய பதில் கடிதத்தின் நகல் கலைக்கோவன் பக்கத்தில் இடம்பெறுகின்றது. மேலும், டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் கோச்செங்கணான் கால ஆய்வை இன்னும் விரிவாக ஆராயும் ஆய்வுத்தொடர் இந்த இதழ் முதல் இடம்பெறுகிறது. மகேந்திரர் குடைவரைகளை விளக்கும் கட்டடக்கலை ஆய்வுடன் கல்வெட்டு இருக்கும் கல்லிலிருந்து வரலாறு எனும் வைரம் எவ்வாறு பட்டை தீட்டப்படுகிறது என்பதை விளக்குகிறது பேராசிரியர் மு. நளினி அவர்களின் கைவண்ணத்தில் உருவான என்றைக்கு விழிப்பது கட்டுரை. கோகுல் தீட்டிய இராஜகேசரி ஆறாவது அத்தியாத்துடன் கல்வெட்டு சொன்ன இரண்டாவது கதையும் இடம்பெறுகிறது. குமாரவயலூர்க் கல்வெட்டின் பின்புலத்தில் அமைந்திருக்கும் இக்கதை காரிநங்கை... வேண்டாம். சிங்கப்பூரிலிருந்து கோகுல் முறைக்கிறார். கதைநேரத்தில் நீங்களே படித்துக் கொள்ளுங்கள். அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |