http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 35

இதழ் 35
[ மே 15 - ஜூன் 14, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆய்வேடுகளின் அருமை
போசளீசுவரம் கோயிலில் புதிய கல்வெட்டு
பைசாசம் - வாசகர் எண்ணங்கள்
பைசாசம் - ஒரு விமர்சனம்
பழுவூர் - 14
உண்மைகள் சுடும் - மதனுக்கும் நண்பர்களுக்கும் விளக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 7
கோயில்களும் கலைகளும்
திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - 1
தமிழின் பெருமையைக் குறைசொன்னாரா மதன்?
Links of the Month
சங்ககாலத்து உணவும் உடையும் - 1
இதழ் எண். 35 > இதரவை
தமிழின் பெருமையைக் குறைசொன்னாரா மதன்?
ச. கமலக்கண்ணன்
திரு. மதன் அவர்களுக்கு,

வணக்கம்.

25-04-2007 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வரலாறு டாட் காமின் கடிதம் குறித்த தங்களின் பதிலுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. எங்களின் மூன்றாண்டு கால முயற்சியையும் உழைப்பையும் கண்டு மகிழ்ந்ததற்கும் மதிப்பளித்ததற்கும் மீண்டும் ஒரு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்களும் மற்ற சில வாசகர்களும் கருதுவதுபோல் அக்கடிதம் நிச்சயம் உணர்ச்சிப் பெருக்கால் எழுதப்பட்டதல்ல. சோழப் பேரரசின் வரலாற்றை எழுதப் போதுமான ஆதாரங்கள் உண்டு என்ற உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடே அது. இந்த விஷயத்தில் உணர்ச்சிவசப்படுவதும் தவறல்லவே!! அந்த உணர்ச்சி இல்லாததால்தானே பழங்கால வரலாற்றைப் படிப்பதால் என்ன பயன் என்று தமிழன் புரியாமல் முன்னோர்களின் சுவடுகளை அழித்துக் கொண்டிருக்கிறான்!! தாங்கள் தமிழ் ஆய்வாளரோ, தொல்லியல் அறிஞரோ அல்ல என்பதை நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். இதுபற்றிக் கேட்டிருந்த வாசகருக்கு அளித்த பதிலையே இங்கும் பதிவு செய்கிறோம். தாங்கள் ஒரு பத்திரிக்கையாளராக மட்டும் இருந்திருந்தால் இக்கேள்வியைக் கேட்டிருக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது. வ.வெ மூலம் சொல்லவந்ததை எளிதாகச் சொல்லக்கூடிய எழுத்தாளர் என்ற பெயர் பெற்ற பிறகு தமிழனுக்கு ஏற்படும் சாதாரணக் கேள்விதான் தங்களிடம் கேட்கப்பட்டது. தாங்கள் கல்வெட்டுகளையும் இலக்கியங்களையும் ஆராய்ந்து வரலாற்றை எழுதவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கனவே ஆராய்ந்து வைத்திருக்கும் தகவல்களைத் தொகுத்துச் சுவையான நடையில் எழுதலாமே என்று கேட்டதற்கு, ஏன் இன்னும் தொகுக்கவில்லை? ஏன் இன்னும் பாலம் கட்டவில்லை என்று கேட்டால், என்ன சொல்வது?

கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் எதுவும் தற்போது இல்லை என்பதோ கி.பி 600ம் ஆண்டு வரை தமிழ் மன்னர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் இல்லை என்பதோ சற்றும் உண்மையல்ல. சங்ககாலம் என்பது கி.மு 3 முதல் கி.பி 3ம் நூற்றாண்டு வரையிலானது என்ற வரையறை பெரும்பாலான தமிழறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதே. என்றைக்குப் பாண்டிய நெடுஞ்செழியனைக் குறிப்பிடும் மாங்குளம் பிராமிக் கல்வெட்டு கி.மு 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று சந்தேகத்துக்கிடமின்றி தெள்ளத் தெளிவாக திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் நிரூபித்தாரோ, அன்றைக்கே சங்க இலக்கியங்கள் அதற்கும் முந்தையவை என்று உறுதிப்படுத்தப்பட்டு விட்டன. அதற்கு முன் எழுதப்பட்ட நூல்களில் வேண்டுமானால் இத்தகவல் தெரியாத காரணத்தால் பிற்காலத்தைச் சேர்ந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கலாமேயொழிய, இன்றைக்கும் அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது அறிவுடைமையாகாது.

இறையன்பு அவர்கள் தங்களிடம் கேட்டது மொத்தமாகச் சோழப் பேரரசின் வரலாறுதானே தவிர, தனித்தனி மன்னர்களின் வாழ்க்கை வரலாறு அல்ல. இருப்பினும், அதுவும் சாத்தியமே! ஒரு சமுதாயத்தில் வாழும் மனிதன் ஒருவனின் வாழ்க்கையில், அதே சமுதாயத்தில் வாழும் பிற மக்கள் பின்பற்றிப் பயன்பெறும் வண்ணம் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பே வாழ்க்கை வரலாறு என்பது எங்கள் கருத்து. உதாரணமாக, இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது, அவர் தனது தொழில் வாழ்க்கையில் கடந்துவந்த இன்னல்களையும், அவற்றிற்கு அவர் தீர்வு கண்ட விதங்களையும் பற்றிக் குறிப்பிட்டால் போதுமானது. சோழ மன்னர்களின் வாழ்க்கை வரலாறும் இப்படித்தான். எப்போதும் பொது வாழ்க்கையின் நிகழ்வுகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார்களே தவிர, தனிப்பட்ட வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்ட யாரும் விரும்பியதில்லை. அதனால்தான் தமிழர்களின் சுயசரிதைகள் அருகியே காணப்படுகின்றன. முகலாய மன்னர்கள் இட்லிவடை சாப்பிட்டதைப் பதிவு செய்திருப்பதால், சோழமன்னர்களும் அதையே செய்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும், அப்படிப் பதிந்திருந்தால்தான் அது முழுமையானது என்று எண்ணுவதும் சற்றும் நியாயமில்லை. இருப்பினும் இதுபோன்ற சில தகவல்களும் கல்வெட்டுகளில் இல்லாமல் இல்லை. இராஜராஜசோழர் தஞ்சாவூரில் திருமஞ்சன அறையில் இருந்தபோது கல்வெட்ட ஆணையிட்டதையும், இராஜேந்திரசோழர் திருவலஞ்சுழியில் உள்ள வியாளகஜமல்லன் என்ற தோட்டத்தில் மதிய உணவு உண்ணும்போது கொடையைப் பதிவு செய்யக் கட்டளையிட்டதையும் உதாரணங்களாகக் கொள்ளலாம். சங்க இலக்கியங்களில் மக்களின் அன்றாட வாழ்க்கை குறித்த மிக நுணுக்கமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவையே மன்னர்களின் வாழ்க்கை முறைக்கும் பொருந்தும்.

பிறப்பு, போர்கள், திருப்பணிகள் மற்றும் நிர்வாகத் தகவல்கள்தானே ஒரு மன்னரின் பொதுவாழ்க்கை பற்றிய குறிப்புகள்! பிறகு தனியாக வாழ்க்கை வரலாறு என்ற ஒன்றை ஏன் தேடவேண்டும்? கரிகாலன் போன்ற இருபொருட் சொற்கள் எல்லா நாடுகளின் வரலாற்றிலும் உண்டு. ஏன், Chola Pass கூட அப்படிப்பட்டதுதானே! அதில் 'சோ' என்றால் 'நீர்நிலை' என்கிறீர்கள். 'Goddess' என்று வேறுசிலர் விளக்கம் தருகிறார்கள். இரண்டில் எது சரி? இதுபற்றி ஆய்வறிஞர் மு.இராகவையங்கார் அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களையும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

பாபர்நாமாவுக்கும் அயினி அக்பரிக்கும் உரையெழுதிய அல்லது மொழிபெயர்த்த அனைத்து வரலாற்றாசிரியர்களின் கூற்றுகளும் 100% ஒரே மாதிரியாக இருக்கும் என்று சொல்லமுடியுமா? அவற்றை எழுதியதும் புலவர்கள்தானே! அவர்களுக்கும் மது கொடுத்து மிகையாக எழுத வைத்திருக்க முடியுமே! ஒரே பொருள் குறித்த ஒவ்வொரு ஆசிரியரின் நூலிலும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அவற்றில் எது பொருத்தமானது என்பதைப் படிக்கும் நாம்தான் தேர்ந்து கொள்ளவேண்டும். திரிபுவனச் சக்கரவர்த்தி என்ற பட்டப்பெயரைக் கொண்டிருந்தால், அவர் மூன்று உலகங்களையும் ஆண்டவர் என்று பொருள் கொள்வது நம் அறியாமையே. அப்படிக் கொண்டிருந்தார் என்பதற்காக அக்கல்வெட்டில் இருப்பவை யாவுமே பொய் என்றும் ஆகிவிடாது. சற்று நுணுகிப் பார்த்தால் உண்மை வெளிப்பட்டுவிடும். 'கல்வெட்டுகளில் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள்' என்று நீலகண்ட சாஸ்திரிகள் சொல்வதும் இதைத்தான். கற்பனைகளை விடுத்து உண்மைத் தகவல்களைத் தேர்ந்தெடுப்பது ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தையும் அனுபவத்தையும் பொறுத்தது. ஆழ்ந்து வாசித்தால், மதுவின் மயக்கத்தில் மகிழ்ந்து புனைந்த கவிதைக்கும் உண்மையின் உரைகல்லாகத் திகழும் இலக்கியத்துக்கும் உள்ள வேறுபாட்டை நிச்சயம் உணரமுடியும்.

களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று அரை நூற்றாண்டுக்கு முன் கூறப்பட்ட தகவலையே மற்றவர்களைப்போல் தாங்களும் நம்பியிருக்கிறீர்கள். சங்கம் மருவிய கால இலக்கியங்களும் திருமுறைகளும் களப்பிரர் அன்றி எக்காலத்தைச் சேர்ந்தவை? திருமுறைகளில் வரலாற்றுத் தகவல்கள் இல்லையா? டாக்டர்.மா.இராசமாணிக்கனாரும், அவர் பெயரில் இயங்கும் வரலாற்றாய்வு மையமும் களப்பிரர் காலத் தமிழகம் பற்றிய பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. புத்தக வடிவிலும் உள்ளன. காலவாரியான தமிழக வரலாற்றைத் தொகுக்கத் தமிழ்நாடு அரசு 1989ல் மேற்கொண்ட முயற்சியில் கி.பி 3 முதல் கி.பி 6ம் நூற்றாண்டு வரையிலான வரலாறும் அடக்கம். இனிமேலும் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று கூறுவது கண்மூடிய பூனையின் நிலையைப் போலத்தான்.

நீலகண்ட சாஸ்திரியாரும் பி.டி.ஸ்ரீனிவாச ஐயங்காரும் ஆய்வு செய்து ஆதாரங்கள் குறைவாக உள்ளன என்று கூறியது 60, 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை. நம் காலத்தில் ஒரு ஆதாரம் கிடைக்கவில்லை என்பதற்காக, எந்தக் காலத்திலும் அந்த ஆதாரம் கிடைக்கவே கிடைக்காது என்று சொல்ல முடியாது. அவர்களுக்குப் பின் பல்வேறு தனியார் ஆய்வு நிறுவனங்களும், நூற்றுக்கு மேற்பட்ட கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் ஆய்வாளர்களும், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்ந்த ஆய்வுகளும், இலட்சக்கணக்கான முதுகலை, முதுமுனைவர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளும் நடைபெற்றுத் தமிழக வரலாற்றிற்கு வளம் சேர்த்திருக்கின்றன. அத்தகைய ஆராய்ச்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டும் இருக்கின்றன. இவையெல்லாம் புத்தக வடிவில் கடைகளில் கிடைக்கவில்லை என்பதற்காக, ஆதாரங்களே கிடைப்பதில்லை என்ற முடிவுக்கு வருவது முறைதானா? இவை மட்டுமின்றி, இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் படியெடுக்கப்பட்ட சுமார் 30000 தமிழ்க் கல்வெட்டுகள் என்ன காரணத்தாலோ மைசூரில் ஆய்வு வெளிச்சம் காணாமல் இருட்டறையில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் தொகுத்தால் நிச்சயம் ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் ஒவ்வொரு நூல் எழுதுமளவுக்குத் தகவல்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் அக்கடிதம்.

ஆதாரங்கள் எதுவும் தானாக வந்து நம் கையில் விழாது. நாம்தான் அவற்றைத் தேடிப்போகவேண்டும். முயற்சியும், அதற்கேற்ற உழைப்பும் இருந்தால் நிச்சயம் எதிர்பார்த்தது கிடைக்கும். சரித்திரக் குறிப்புகளும் ஆய்வு முடிவுகளும் தட்டுவார் திறனுக்கேற்பத் திறக்கும் கதவுகள்தாம். ஆதாரங்கள் எதுவும் இல்லையென்றால், ஆய்வுகளும் கருத்தரங்குகளும் என்றோ நின்று போயிருக்கவேண்டும். ஆனால், சோழப் பேரரசைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் அனைத்து ஆய்வாளர்களுக்கும் தினம் ஒரு புதுத்தகவல் கிடைத்துக் கொண்டுதானே இருக்கின்றன? தமிழ்நாடு தொல்லியல் கழகம் போன்ற அமைப்புகள் நடத்தும் கருத்தரங்குகளுக்குச் சென்று பார்த்தால், பாடநூல்களைத் தாண்டிய எத்தகைய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது புலப்படும்.

ஒரு பேரரசைப் பற்றிய 100% தகவல்களும் தெரிந்த பின்னரே அதைப்பற்றி எழுதவேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தால், எக்காலத்திலும் எந்த நாட்டுச் சரித்திரத்தையும் எழுதவே முடியாது. ஒரு மன்னர் எப்படி இறந்தார் என்று தெரியாவிட்டால் என்ன? 'எப்படி இறந்தார் என்று இன்னும் அறியப்படவில்லை' என்று சொல்லிவிட்டு மீதமுள்ளவற்றைத் தொகுத்துத் தந்தால் என்ன? தெரியவரும்போது இணைத்துக் கொள்ளலாமே! தெரியாத சில தகவல்களுக்காக, தெளிவாக நிரூபிக்கப்பட்ட உண்மைகளையும் ஏன் வீணாக்கவேண்டும்? எளிமையான, சுவையான நடையில் தமிழக வரலாறு எழுதப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லை. தாங்கள் எழுதினாலும், நாங்கள் எழுதினாலும் அல்லது வாசகர்கள் விருப்பப்படுவதுபோல் இருவரும் சேர்ந்தே எழுதினாலும் அது தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமை சேர்ப்பதேயாகும். தேவை முயற்சி மட்டுமே.

நன்றி
கமல்




2007-மே-16 வரை கிடைக்கப்பெற்ற பின்னூட்டங்களில் கட்டுரைக்குத் தொடர்பில்லாதவற்றையும் மதன் மீதான தனிமனித/இனத் தாக்குதல்களையும் தவிர்த்துவிட்டுப் பிறவற்றை (மாற்றுக் கருத்துக்களாக இருப்பினும்) இங்கு வெளியிடுகிறோம். சில பின்னூட்டங்களில் சில வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன.




1. Vinod

(4/20/2007 4:42:13 PM)

Fantastic. Varalaaru.com -ku migavum nandri




2. Baskar .d

(4/21/2007 9:28:47 AM)

naanum antha pathilai kandu thigaithu ponen, super ungal intha varalattru patriya pathivu, mathanukku, purinthirukkum namathu tamil varalatrai innum mulumaiyaga avar therinthukolla

natpudan
Baskar




3. Raghu Bhaskaran

(4/21/2007 12:43:39 PM)

Kamal,

This is Raghu-Covansys(if you remember). I rather not comment on the subject for I am a dabbling amature in History. Also I agree with Madan that we do not have evidences to the par of Caesar's Bello Gallico, Plutrach or Cassius Dio. We can't compare KAN or Pandarathar with Plutarch or Livy as they wrote perhaps 100/200 years after the events, while KAN wrote a 1000 yrs later.

However we must know our history based on the evidence we have. His answer does a disservice to those efforts. And being a popular columnist his opinion is of great influence. I do hope this riposte has not only been sent to AV, Madan, but also Thiru.Iraianbhu. I do hope AV publishes this reply, for this is a blessing in disguise to popularise our history and also efforts of Varalaaru.com.

Talking about imagination, since Caeser (and Hiritius) himself was the authors of COMMENTARIES, it is more possible that he would have used a lot of exagerrations and maybe even lies to popularise himself. After all he was a successful politician in republican Rome, hence our sangam poets might have more truth in their works.




4. Muralidharan

(4/22/2007 2:46:44 AM)

I read the open letter by Mr. Kamalakkannan and the reply by Mr. Madhan. While Kamalakkannan's well researched reply deserves a great appreciation, Madhan's views on the availability of reliable historic evidences on Tamil History, adequacy of elicitation of the available evidences and rigor and prioritization of archeological discoveries are certainly unignorable. My brief knowledge on contemporary research on Tamil History does not identify a structured, proved and well recognized historic research at a large scale to establish the facts and chronology of Tamil Kings or Tamil civilization is certainly not adequate.

The underlying concern both to Madhan and Kamalakkannan are the same; that is, "As a State and Society, Tamil Nadu is yet to take up the task of Discovery, Research and mass awareness of Tamil History to all sections of Indian and International society - available ones are NOT ADEQUATE". Let us bear this common concern in our mind and work towards a future where our next generation has all the reliable history of their proud Tamil Culture - Let us take a oath for ourselves to dedicate for this noble cause. Would like to thank both Madhan and Varalaaru.com for creating awareness around at least what we don't know or what we need to explore further...

Regards, Muralidharan




5. Vasan

(4/22/2007 8:35:28 PM)

Dear Mr. Kamal,

Thangal padil migavum pottrathakkathu. Melum thangal ezhuppiya kelvigal payanulladu.

Mr. Madan, oru unnada knowlege-bank for tamilans. You are really a tamil-patriot. Why you should not work with him to come out with a "TAMIZHAR" "IRUNDARGAL - IRUPPARGAL". You both can do a better job.




6. Arun Kumar

(4/23/2007 8:05:03 AM)

This article is written to condemn Mr.Madhan,one of the respected person in media. But the language used is very rough.....Infact he has not written anything wrong about our Kings or about our culture....Remeber he is also a Tamilian.....and one who loves Tamil and its culture..........You should have send him a letter in a much soft way....




7. குன்றன்

(4/23/2007 8:39:18 AM)

வரவேற்கிறோம். தங்களின் முயற்சி தமிழனை தூக்கி நிறுத்தியுள்ளது. யாரும் எப்படியும் கருத்தறிவிக்கலாம் எனும் நிலை வந்துவிட்டது.




8. ramya

(4/23/2007 7:50:47 PM)

very good research




9. Hariharan

(4/24/2007 6:46:18 AM)

great work by kamalakannan.thank you. Madhan should apologise by the way of writing the history of Tamils like his previous work(vanthargal.. Venrargal)




10. Anand

(4/26/2007 5:34:32 AM)

Respected Sir, Terrific reply with good justifications. Good work sir, inspiring website.




11. sathappan.k.v

(4/27/2007 1:33:59 AM)

Please kindly ignore Mr.Madan's 'Ularals'.I also belived Madan is a good historian , Now i find him as an HALF -BACKED EGG only . He do 'cut & Paste' techniques for his survival -after he kicked -out of Anantha vikatan . I put all my Madan's Books to dust bin( I wrongly spend more money on buying Man's half backed books )




12. சுகுமார் கோவிந்து.

(4/29/2007 7:05:18 AM)

நான் ஒரு 'Hai' மதன் விசிறி. எங்கே மதனுக்கு கொஞ்சம் செருக்கு வந்துவிட்டதோ என்று கவலையாய் இருக்கு. நான் தமிழன்தான் ஆனால் இந்த வரலாற்று விவரங்கள் ஏதும் தெரியாது. விவரங்குளுக்கு மிக்க நன்றி. மேலும் இவ்வளவு கொதிப்பான ஒரு உணர்வைகூட மிக கன்னியமாக வெளிப்படுத்தி தமிழ் இனத்துக்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள் போங்கள்.




13. C.Balakrishnan

(5/1/2007 5:50:25 AM)

Dear Sir,

I saw your letter to Mr.Madhan after his reply in Vikatan. You both of them are very Intellectuals. Our (Tamilans) wish, why don't you work together to brought out the ancient history of TamilNadu. I would like to remember a dialog (approx.)in the flim Tiruvilaiyadal," Pulavar kalukul (Intellectuals) pooti irukalam sandai irukka vendam" please try this, Good research article




14. mahesh

(5/4/2007 8:18:12 AM)

hi you are having a nice collection of cholas history then why can"t u try to make it as a book because these msg can't reach people who are not popular with internet.to make people interested in tamil history is the most best work to stop all these answers.

thankyou




15. m.raja

(5/5/2007 7:02:02 AM)

its amazing letter.great super




16. PAVITHRA

(5/6/2007 2:10:21 AM)

VERY GOOD EXPLANATION... APPLAUSE FOR YOUR SERVICE. CONTINUE YOUR WORK AND SERVE TAMIL AND TAMILIANS. I dont know much about tamilar history. I LIKE TAMILAR HISTORY VERY MUCH. I AGREE YOUR ANSWERS. I WANT TO KNOW ABOUT TAMILIANS VARALARU STILL MORE. I WILL LEARN FROM YOUR WEBSITE. VALZHA VALAMUDAN.. VALZHA PALLAANDU. THODDARATUM UNGAL SEVAI.




17. Meenakshi, Nz

(4/20/2007 1:54:07 AM)

One good thing happened because of this discussion, it has enlightned readers in more in Tamil history.Now through Madhan's prompt reply works of varalaaru.com is known to more people. But I think Kamal's letter to madhan is not relevant in the sense Madhan is a writer who combines right amount of satire,humour,correct historical references in his book. He style is different from Kalki. Kalki's style is to write a historical novel that has hypothetical characters(like poonkulali for instance) and imaginary sequences. His whole book is based on one proof that arumolzhi sacrificed his throne. But to write a book like vandargal vendrargal ,on cholas there should be more true historical references that is to close to life(not mere statistical data). It is true we do not have them in chola history and that is what he has pointed out. The one thing that makes history interesting and takes it to children and common folks is only when people can relate history to their life and this can happen only when we have more historical references close to life.




18. karthikeyan

(4/20/2007 5:04:40 AM)

I appriciate m\Mr.Mathan comments because he told only our careless mentolity i understand his words clearly he don't irritate our kings because he is a tamizan and he know very very well our culture




19. ரூபன் ஜே

(4/20/2007 12:16:48 PM)

உங்களைப் போல் படித்த, ஆய்வு செய்யும் வசதியுள்ள அறிவாளிகள் அல்லது அறிவாளிகளாக தங்களை கருதுபவர்கள் தங்கள் அறிவுத்திறனையும், முனைப்பையும் அவசியமான வழியில் பயன்படுத்தி, கி.பி. 5ம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழகத்தின், தமிழர்களின் வரலாற்றை ஆராய்ந்தால் என்னைப் போல் எளிய, ஆனால் ஆர்வமுள்ள தமிழர் வரலாற்று மாணவர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும். இது மதன் மற்றும் ஞானி அல்லது ஞாநி இன்னும் இறையன்பு, போன்ற அறிஞர்களுக்கு அல்லது தங்களை அறிஞர்களாக கருதுபவர்களுக்கு ஒரு ஏழை அறிவிலி தமிழனின் எளிய விண்ணப்பம் இது.




20. Ram

(4/20/2007 12:40:49 PM)

I personaly feel there is no mistake in Mr.Madan's part. Mr.Iraiyanbu was asking madan ,whay you cann't try to write history of hola kings on the lines of your 'vandharkal ventraarkal' book. for taht madhan replied that, moguls had recorderd their history in detail(thanks to contemperory historians like Al baruni). They could cleraly understand the geography of entire India and about the life of the people, life of elites and prevailing customs though the records But take the case of chola history. whatewer the infomation availabe now are all in bit's and pieces. Tall claimwith out substantiations(over naval expedition.......what type of ship they used, their sailing techniques, warfare, about the number of people employed in army, dress codes..). Informations availabe are all onesided. Unbiased info are rare to find. (example Claims and counter claims by cholas and chalukiyas about their victory against each other)




21. soundhar

(4/20/2007 2:43:47 PM)

This is the right time to do something.Wakeup,look around what THEY are doing. Dont blame them, they are very clear about their job. Let us do what ever we can .

Thanks Madan for intro this site.

Meithiru Annal.




22. Rajesh

(4/20/2007 5:02:43 PM)

I just wanted to reply Ms. Patricia george for her Angry Questions..

1. If Babar even wrote about Mangoes and summer in India we can easily come to a conclusion that the book is so much detailed and there will be a lot of information that we can get about the period of Babar. This is the sense of Mathan's words.

2. Above reply will be suitable for this question too.

3. What is the problem with you if Mr. Iraiyanbu asked Mr. Mathan to write a Book. If you accept that Mr. Irai.. is an intellectual then you should accept that he has a good impression about Mathan and Mathan has examples that he can write such a kind of books.

4. I don't think that Mathan is just a Gossip reader and try to know better about a person before criticise him.

5. True. But why did you ask this? Did Mathan say anything wrong about Mr. Raja Raja Cholan.

Thanks,
Rajesh




23. s.balasubramani B+

(4/21/2007 1:07:54 AM)

Thanks for your initiatives. now madan also agrees our logic. but expect more collective primary souce from your group. when www.varalaaru.com is possible by your team. this also will be posible in due course




24. r.seenivasn

(4/21/2007 8:09:15 AM)

just now i came to know your website and read about your letter to madhan. you fulfilled lot of aspirations after saw the ananda vikatan(madhan) comments on tamil history. good work.

regards seenivasan.




25. p.arivukkarasan

(4/21/2007 12:06:42 PM)

we tamillians we should be proud of culture and tradition mathan thinks himself as genoiou by highlighting egypt history and by critisising the great tamil culture and tradition sure u belled the cat




26. v sivasankaran

(4/22/2007 1:22:02 AM)

i thought mr.kamal might have studied madhan's reply to your commemnts so now you tell whats your answer, never over estimate your knowledge in tamil histry you mis lead all tamil readers we are waiting for your reply to madhan's ans any way you are doing very good job !




27. Karthi

(4/22/2007 3:08:40 PM)

I read Mathan's explanation in this week's vikatan. I am strongly agreeing his words, we need to build a bridge where the gap exists.. The way he conveyed his message is not so good,but nothing to worry,Coz this is explaining very clearly where we are standing..




28. Mannargudi Senthilkumar

(4/23/2007 2:42:31 AM)

Dear All,

I feel, mathan could have avoided the sarcastic tone in his reply. It is really annoying. His reply is misleading for the younger generation tamil guys. Already we lost our pride and now guys like mathan trying to spoil it completely.

I would like to share some of the historical facts with friends here. The late - first Prime Minister of India Hon Jawarhalal Nehru rightly observed in his book titled "The Glimpses of the History of India" wherein he says Cholas are the only Indian Dynasty whose kings crossed oveseas and conquered distant lands. This was historically true, but needs a small correction as we have to add another dynasty to this list namely the Pandyas. Other than these two dynasties we donot find kings from so many other Indian dynasties to have gone on war expeditions overseas.

The foremost among them are the "Medieval Cholas" who reached their peak under RajaRaja Chola - 1 and his son Rajendra Chola - 1. RajaRaja - 1 at the height of his power after bringing almost half the region of mainland India at the height of his rule brought almost half of Sri Lanka under direct rule,and also conquered the Maldives Islands. Rahendra Chola - 1 the able son of RajaRaja first reached his peak expanded the territory of Chola authority to almost three quarter of India. He successfully marched up to Ganges capturing the lands presently covered by Bangaladesh and reached the Ganges and brought the waters of Ganges in containers and celebrated his northern victory building the great Siva Temple near Chidambaram in Tamilnadu which is a living monument known as Gangaikonda Cholapuram.

Now he concentrated on lands overseas,in addition to half of Sri Lanka & Maldive Islands being in the Chola fold conquered Lacadive Islands the west of present Kerala State of South India. Then he sent many ships overseas and conquered, Nicobar Islands near Andaman Islands. He captured the kingdom of Kadaram which was at the present Kedah state in north Malaysia and defeated its "overlord king" Sangirama -Vijayotungavaraman who was ruling from the kingdom of "Sri Vijaya" located in the present Palembang of Sumatra (part of present Indonesia). He captured another kingdom nearby to Sri Vijaya known as"Malaiyur" also in Sumatra,& presently too known as Malaiyur. They also captured "Pannai" presently known as Pane in North Sumatra.

His forces also conqured another region in Malaysia known as "Ilangasokam"identified with present Lanksuka region. The other two teritories conquerd by Chola forces in Malaysia were "Mevilibangam" and "Mayirudingkam" appears to be Banga Island and other in central Malaysia. The other territories called "Takkolam" known as Takkola identified to be at the lower Thailand, and "Mathamalingam" probably the Penang Island on the west of Malaysia. They also captured the city of "Mapappalam" former Rammanadesa of Burma,"Vallaipandur" located closer to the boundry of lower Thailand and Cambodia identified as Pandurang the present Panrang. All these territorial conquests were completed by Rajendra Cholas forces by A.D.1025.

In addition to these territories Rajendra Chola -1 had good political relations with the Chinese Empire of that period & the Hindu king of Cambodia. Many Indian,Western and Japanese Scholas are working presently in unearthing more informations on the medieval Chola Empire and its connection with countries overseas especially in the south and south-east Asian region. Rajendra Chola - 1 after reaching his peak in his political career made it a law to carve on the walls of the Hindu Temples his "True Glory" known as"Meikeerthi"in Tamil before each record is made on the donations made by various people to the respective temples. These remained to this date as Stone Inscriptions in many temples of Tamilnadu and elaewhere.

As a result there are very many Temples,closer to hundred in number in various parts of Tamilnadu, one in Sri Lanka and if I am not mistaken a few in Karnataka State & Andhra Pradesh with this "True Glory", all copied exactly in the same words and version and remains as a well preserved historical document on the achievements of Rajendra Chola - 1.

For the interest of those who will like to know the contents of this Meikeethi - Inscription of Rajendra Chola - 1 which speaks of his war expeditions especially the ones relating to the territories in the South-East Asian regions I will commence from half way of the Meikeerthi from where it starts. This Meikeerthi is in Tamil,found in the most volumes of South Indian Inscriptions.The English translation of same is reproduced below.

----------

"......having despatched many ships in the midst of the rolling sea and having caught Sangirama Vijayotungavarman the king of Kadaram along with (his) rutting elephants which put up rare fight and brought victory, (took) the large heap of treasures which (that king) had rightfully accumulated, the (arch called)Vichchathara-thoranam put up at the gate of his wide inland city provided with accoutrements of war, the jewel-gate adorned with great splendour, the gate of large jewels, the prosperous "Sri Vijayam" with ghat (bathing) water, the ancient "Malaiyur" (with) a fort situated on a fine hill,"Mayirudingam" sorrounded by the deep sea(as) a moat. "Ilangasokam" undaunted (in)fierce battles,"Mappappalam" having abundant high waters as defence, "Mevilimbangam" having fine walls as defence, "Valaippandur" possessing (both) cultivated land and jungle, the principal (city of) "Takkolam" praised by great men(versed in) the sciences, the island of "Mathamalingam" of strong battlements, "Illamuridesam" provided with scientifically excessive strength, the great "Nakkavaram" whose gardens (abounded in) flowers dribbling honey, and Kadarem of fierce strength protected by foot-soldiers wearing kalal(anklets)......"

Copper Plate Grant of Rajendra Chola-1 to Parijatha Vanesvara Temple, Mannargudi, Tamilnadu State, India.
South-Indian Iscriptions - Vol 3, Part 4, No 207




29. sadeesh

(4/23/2007 3:07:05 AM)

After reading the reply from Madan in AV this week, he seems to step back a little about his comments. But you cannot totally blame him because the way he replies he try add some sense of humour to the facts that he give and i think that became very inflammatory. I surely agree your(Kamal) reply to Madan but i feel it had strong emotions. We shouldn't just get excited/emotional when analyzing the history. Though i feel what Madan did (on 7.3.07's answer) was too-much (trying to be too funny), i also feel the emotional replies from people make me feel that "Sagipputhanmai is going down for people these days" as Sujatha say.




30. Kundhavai

(4/23/2007 3:45:14 AM)

Did you Read Manthan's reply in Vikatan. Thanks Kundhavai




31. prawny

(4/23/2007 9:07:48 AM)

i feel that mr.madhan's answer is not proper.even though the sources of chola history are comparatively lesser, an attempt could have been made to write an account with the information available. reading that, many people may have come forward to share their knowledge on chola history. a screening process could have been undertaken to verify the correctness of their facts and a proper,complete account of chola history would have been achieved by now. urs sincerely, prawny.




32. Senthilkumar

(4/24/2007 4:23:07 AM)

Hi, Good reply, i really got angry with madan's reply. Have you sent this to Madan and AV. Post Madan's reply if he sent. Thanks, senthilkumar




33. ரத்தன் (http://rathan.wordress.com)

(4/25/2007 1:12:46 AM)

வரலாறு.காம் குழுவினருக்கு எனது முதற்கன் வணக்கங்கள். தங்களின் இந்த அற்புதமான முயற்சிக்கு (வரலாறு.காம்) எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தங்களின் இந்த முயற்சி இன்னும் பெரு வெற்றி நடைபோட எனது வாழ்த்துக்கள். இந்த வாரம் (25-04-07) வெளியான ஆ.வி.யில் ஆர்.ஜெ.மாயவநாதன் அவர்களோட கேள்விக்கு மதன் கொடுத்த பதிலை படித்த பிறகு தான் என்ன நடந்ததுன்னு தெரிநஞ்சுகிட்டேன். நீங்களும் படிச்சிருப்பீங்கன்னு நினைக்கறேன். "தமிழ் வரலாற்றை புத்தகமாக வெளியிடுற அளவுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை" ங்கிற என்னோட ஆதங்கத்த தான் சொல்லிருக்கேன்னு பெரிய விளக்கம் கொடுத்திருந்தாலும் அவர் பதில சொன்ன விதம் சரி இல்ல தான். கொஞ்சம் நக்கலா அவர் பாணில சொல்லிட்டாரு பாவம். தமிழ் வரலாற்றை பத்தி அதிகம் தெரியாத எனக்கே அத படிச்சவுடனே "என்னப்பா இவர் இந்த மாதிரி சொல்றாரு" ன்னு தான் தோனுச்சு. எந்த ஒரு கெட்டது நடந்தாலும் அதோட முடிவுல ஒரு நல்லது நடக்கும்னு சொல்லுவாங்க. அந்தமாதிரி இந்த வார இதழ்ல "வரலாறு.காம் உதவியோட என்ன மாதிரி ஒரு பத்திரிக்கையாளன் தமிழ் வரலாற்றை பற்றிய புதிய புத்தகம் ஒன்றைக் கூட எழுதலாம்"னு அவர் சொல்லிருக்கறது நல்ல விஷ்யம். அது தமிழர்களுக்கு சந்தோஷம் தர்ற விஷயமா மட்டுமில்லாம சரித்திரத்திலயும் இடம் பிடிக்குற விஷயமாவும் இருக்கும்னு நம்பறேன். அப்படி ஒன்னு நடக்க கடவுள்கிட்ட வேண்டிக்கறேன். இனி என்னோட வலைப்பதிவில இருந்து ஒரு சுட்டி "வரலாறு.காம்" க்கு எப்பவும் உண்டு.




34. pothumsami

(4/25/2007 11:00:57 AM)

hey why you peoples are so arrogant to err is human madhan is also a noraml human as like you and me. what is this ? i dont like? but ok do anyone in this forum agree that what is the utility or needness in the market for tamil related things, is there any science related articles coming in tamil? in any of the collges science or computers are instructed in tamil? if it is also like that no body likes that? and tamil history is only the referrece for tamilians, madhan may miss up some things? i dont think this is the correct way of openeing a forum or discussion board to condemn this? who needs the Tamil history rather than knowing the past happenings and past incidents, their society status , does it make any impact on current unemployed youths? does your things make any difference ? again to err is human?

i am also a tamilian proud of tirukkural, ponniyin selvan, sivakamiyin sapatham , very proud of kalki. but the point is does tamil earn money to us. ok i agree tamil is our mother tongue and we must follow the tamil culture , but only knowing this will not make a bit of difference in the life...

i am sorry to say like this , forgive and pardon me,, but this board is to warn madan sar as i am posted here to convince the mistakes.... sorry sir , but this site is total amazing ..i am wondering how you peoples make this great job buddied , no words to speak... god bless you...




35. தனசேகர்

(4/25/2007 11:49:50 PM)

மிகச்சரியான கேள்வி. நம் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் வெறும் கற்பனையே என்று மதன் சொல்வதில் எவ்வித நியாயமோ உண்மையோ இருக்க வாய்ப்பு இல்லை. எல்லா இலக்கியங்களிலும் கற்பனை கலந்து இருக்கிறதே தவிர முழுக்கற்பனை ஆகி விடாது. ஏன் அவ்ருடைய வந்தார்கள் வென்றார்கள் கூட 100% அப்படியே கற்பனை இல்லாத உண்மையா?? மக்கள் படிக்க சுவாரசியமாக இருக்க மதனின் கற்பனை சேர்த்த்துதான் என நம்புகிறேன்.




36. Vivek

(4/26/2007 3:15:14 AM)

The "Vandarkal Vendarkal" by Mr.Madhan is mere translation from the works of various historians who have spend their time in ideal thinking of what exactly could have happened with the evidences and information they had. Unlike the Mughal's history Madhan do not have much of tamil's history in comprehended style that's true. If so he would have further abridged it and would have provided a old wine in a new bottle.

Madhan could answer questions from any field referring to various books or resource persons, and I appreciate him to the extent of answering in "Hi Madhan"'s column and nothing more. I'm afraid he could not answer more detail than the answer what he provides in his column in Ananda Viaktan. And the column is that sort of. I don't find his works equivalently good compared to any other writer of his period.

And finally It is our ignorance to expect such a great work from Mr.Madhan while many others are doing it, who are be identified, appreciated and if possible be helped. After Mr. Kalki's work which describes Cholas, I admire Mr. Balakumaran's "Udayar" details more of Raja Raja Chola's later period close to his tenure. Finally to conclude do not expect full course meal from meagers, be satisfied with some chat's or pixza's. My greeting to Varalaru.com and its team members.

Vivek




37. Karthik

(4/26/2007 5:58:58 AM)

hi i tto read the answer given by Mr.Madan..dont criticise him for the answer.. criticise the Indian educatiobn system and indian history books most of them prepared by English ppl or those who stuided and lived most of ther time in abroad.. Any one ever went thru history books of ur children... main higlighted areas will be Muslim kingdoms and english ppl alone.. it wont give info abt tamil or any other kingdom which was there befoer muslims invaded india.. so lets try to change the education system first




38. Palanisamy Ammasai

(4/26/2007 11:26:46 AM)

Hi Kamal, I think there is nothing wrong in being proud about our land, language ....! But why can not we accept some ground realities too! What was wrong in what Madhan said that angered so many of you is beyond me! I only saw his anguish that our history was not well documented as elsewhere. Is not that true? See, our sentimentality like this is keeping us so confined and hurts our growth (also the language). Why do you think that english flourished though our tamizh, being arguably the most ancient language, could not go past our own state? Because we wanted her to be "kanni tamizh" but not a "amma tamizh". How can a language grow if we dont let it? Anyways, I think we should be more critique-friendly and see the right meaning of Madhan's comments, rather than reading in-between the lines and thrash him for that!

BTW, Kudos & Best of luck for all of you at Varalaru.com. It's a great service that you guys are doing for the future generation. I applaud that.




39. Geetha,Kumbakonam.

(4/26/2007 2:38:30 PM)

This is really ridiculous... I didn't expect this from Madan. Actually i used to read "Hi madan" first if i open vikatan link. Thatday i was totally shocked to see his answer. I couldn't put my feelings in words.But in latest edition he has given a bigggggg lecture on "tamil history"... I felt like laughing and he didn't even feel guilty for his action.




40. santhanam.v

(4/28/2007 10:10:34 AM)

First i must say sorry to all that i am not able to mail in tamil. i am extremely happy to see the history of tamilculture in the web. Regarding the madan's answer to a question about Chola period i want to ask some I think he didnt mean that tamil kings were inferior. First we have to accept that THERE ARE NO EVIDENCES THAT ARE UNDOUBTFUL REGARDING THE REIGN OF ANY KING BEFORE THE NAICKERS. sOME QUESTIONS I WANT TO ASK. 1. can you say that which karikaal cholan built the kallanai? as there are scriptures of very different times are found referring to that name? 2. Leave the kings can any one say which Avvaiyar wrote AAthisudi? Is she same as the lady who went as a messenger? same as who wrote Nalvazhi? Of course we will get answers note answers not an answer . as we are searching for the answers in the imagnation of poets. Thats what he told we are not having any fool proof evidence.

I want to register my sincere thanks to all who are kean in the history . lets look for the history not a historical novel please. as one of the mailer had said we dont know how old the palani temple is! thats the real situation we have to digest the blowing fact and strive to get more evidences.




41. sathappan.k.v

(4/28/2007 11:18:23 AM)

kindly advise Mr.Madan to stop writing Tamil histroy in a Half backed way . Let him do the carttons , cinema & thairsadan etc only




42. Thirunavukkarasu

(5/2/2007 6:10:17 AM)

Whether Madhan knows about Tamil history or not is not the problem now. Anyways he has told that we do not have such clear cut information as the other Civilizations have. We keep saying "Kal Thondri Mann Thondrak kaalathey Mun Thondi Mootha kudi TamizhKkudi." But how do we prove it ?

May be as "Varalaru.com" says we have lot of information in all the temples and inscriptions how are we going to present it to the world ? Madhan has done a fair job with his "Vandargal vendrargal" to show case the Indian history. But how are we going to bring Tamil History and Civilization to the world's vision ?




43. P.Rajasekaran

(5/2/2007 12:20:11 PM)

Dear kamal,

This is most unfortunate and plight of Tamil communities who still not known about their own identity and history.People like Madhan and another genius writing regularly in his Vikadan also another writer and political critic are all commenting Tamil origines always degraded. They never know they are selling Tamil and earn out of it. Once this computer genius written in Vikadan Silappathiharm is a superfluous lie it is only a beautiful drama like,now Madhan continue the same abuse.Weeklys like Vikadan foster nurture these gimmic genius.

It is our plight to read such ugly comments about our ancestor, I dont know why Mr.Irai anbu asked Madhan to do this great job just like that.Well atlast now we have forum to react protect and safeguard our tradition culture and History.

Herewith I laud and appreciate your great effort and patronage well I pray for this to continue and to have you great strength We meet often in this website.

Thanking you,




44. Ram Kumar

(5/3/2007 11:53:48 AM)

Dear Team,

I appreciate your efforts finding the history. As Kanchi Periyaval said, there is some connection between temples, places and Puranas. Why don't you look into it? This is his sincere wish. Please see whether you can help in this.

Cheers,
S. Ram Kumar




45. Mahesh

(5/4/2007 8:39:02 AM)

hi ,cholas history is very old one and due to many invaders we have lost a lot .Inscriptions and Songs are not compeletly prefarable because due to many reasons make them cotravacy.with these lots of information u can do a nice job instead of writing to Mr.Madan or Av,because many people are not aware of our history.being an article in net ,it is good to have a book on Cholas history .Thank you.




46. matheswari

(5/5/2007 12:15:56 PM)

its really interesting to know about the culture of our country! this really facinates me!i love to see sculptures and very interested in archeological stuffs! its very interesting to see our different cultures as sculptures on temples! its gonna help the future generation a lot in knowing our culture! i conclude this by telling this website is very helpful and it should show many more ancient stuff!

thank you! matheswari!




47. Raghavendran N

(5/6/2007 10:47:18 AM)

All the best for ur good work. In future i expect complete books about our kings from u people.




48. Shobana

(5/11/2007 4:23:24 AM)

I happened to read this article only today. The sad fact is that many tamilians think themselves to be inferior about their history since they happen to beleive that whatever written in tamil is only a humbug and not true and whatever is written by other authors in English, hindi or may be in any other languages are true. Tamilan than perumayai eppodum unarndadillai. Tamilanin perumayai pesum ilakiyangayalai unmayenru nambadpodu epidi unara mudium. If those poems and history of tamilians were written by any european they would celeberate it as a true verdict.




49. Augustus Ceasar

(5/12/2007 4:25:32 AM)

i think both of you , madan and varalaaru team, have valid points. But one think that emerges from the opinions is that it is dangerous and embarrassing to make superficial observations without going into actual details. Examples('chola pass' , madan saying there is nothing concrete to write abt our history.)

Apart from this I have one query, that i hope some one can educate me on - WHY IS IT THAT ONLY THE CHOLAS GET ALL THE ATTENTION. I AM NOT ACCUSING OR ANYTHING, BUT IF YOU SEE THE % OF WORKS BASED ON THE CHOLAS AND THE IMPORTANCE GIVEN TO CHOLA HISTORY BY HISTORIANS, this becomes evident. It seems that the Pandyas and Pallavas and Cheras If i may add, have been relegated to lesser importance. Please correct me if i am wrong.

PS: Sorry for this, could not help but have a good laugh about the Chola Pass, the pass being mistook for CHOLA instead of Cho La , just like Nathu La or Shangri La.




50. sabari

(5/15/2007 6:07:19 AM)

simply superbh




51. Mahalakshmi

(5/8/2007 3:33:06 AM)

I think you are expecting too much from Mr. MAdan. Help him to write a book of chola kingdom if you have good evidences. WE are not going to achieve anything by finding mistakes of others.




52. thyga vinidhan

(5/10/2007 10:25:13 AM)

excellent work




53. K. Saravanan

(5/13/2007 12:19:18 PM)

Whatever u have said is true. Our people doesn't know the value of our history and they degrade it. Other races will not degrade their history, their culture language and everything. Its only our tamilians are degrading without knowing anything. u r doing a very grate job. Please keep on doing the same, so that many of our people will get knowledge and awareness of our history. thanks K. Saravanan




54. sivaranjani suresh

(5/14/2007 9:58:39 PM)

Hat's of for your wonderful answer.




55. இராஜா

(5/15/2007 3:27:37 PM)

கமலகண்ணன் அவ்ர்களுக்கு, "ஹாய் மதனுக்கு ஒரு பகிங்கிர கடிதம்" .படித்தேன்.பெரு மகிழ்ச்சி...பதில் அளித்த விதம் நன்று...எவ்வித காழ்ப்புணர்ச்சியும் காட்டாமல் பதிலலித்திருக்கின்றீர். மதனின் ஆதங்கம் தமிழ்னுக்கு வரலாறு இல்லை என்பதற்காக அல்ல.இருக்கின்ற வரலாறு முறையாக தொகுக்கப்படவில்லை என்பதே.. சில கேள்விகள்...(கேள்விகள் பாமரத்தனமாக இருக்கும்..மன்னித்துக்கொள்ளுங்கள்) விடுதலை பெற்று அறுபது ஆண்டுகளாகியும் தமிழனுடைய வரலாறு ஏன் முறையாக தொகுக்கப்படவில்லை?அப்படி தொகுக்கப்பட்டிருப்பின் அவை பல்கலைக்கழகங்களின் சுவர்களைத் தாண்டி வெளிக்கொணரும் முயற்சி ஏன் இதுவரை இல்லை.? "கல்தோன்றி .........மூத்தக்குடி தமிழ்க்குடி" என்று நம் பெருமையை பேசுகிறோம்..அதை வரலாற்று ஆதாரங்களுடன், உலக அரங்கில் ஏன் நிருபிக்கவில்லை?.. தமிழனுடைய பல வரலாற்று செய்திகள் இலக்கியங்களில் புதைந்து கிடைக்கிறதென்று படித்திருக்கிறேன்....அப்படியாயின் ஏன் அவை வரலாற்று நூலாக தொகுக்கப்படவில்லை.? ஆதி முதல் இன்று வரை,தமிழனின் வரலாறு தொகுக்கப்பட்டு,அவை எல்லாத் தரப்பு மக்களாலும் படிக்கக்கூடியாதாய் எளிய இனிய நடையில் இருக்கவேண்டும் என்பது என் போன்றோரின் ஆசை.




56. Vijay Dev

(5/18/2007 9:01:51 AM)

Excellent writeup ! Touched my heart !!




this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.