http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 174

இதழ் 174
[ ஜனவரி 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

திருமடத்துக் குடைவரைகள்
Gajendra Moksham - A Miniature panel from Thiruvalanchuzhi
The dance of Shiva in Thiruvalangadu and karana Vishnukrantam
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 2
எலவானசூர்க்கோட்டை மாடக்கோயில் - 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 58 (மறந்ததைக் காற்றும் மறைக்காதே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 57 (நிலவென மறைந்தது நீயா?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 56 (ஒருமுறை வந்து பாராயோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 55 (நெஞ்சம் மறப்பதில்லை)
இதழ் எண். 174 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 58 (மறந்ததைக் காற்றும் மறைக்காதே!)
ச. கமலக்கண்ணன்


மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்
ありま山
ゐなの笹原
風吹けば
いでそよ人を
忘れやはする

கனா எழுத்துருக்களில்
ありまやま
ゐなのささはら
かぜふけば
いでそよひとを
わすれやはする

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் சான்மி

காலம்: கி.பி. 999-1082.

இத்தொடரின் முந்தைய பாடலை இயற்றிய முராசாகிக்கும் நொபுதக்காவுக்கும் பிறந்தவர் இவர். முராசாகி எழுதிய 'கென்ஜியின் கதை' புதினத்தின் கடைசி 10 அத்தியாயங்களை இவர் எழுதினார் என்றொரு கருத்தும் ஜப்பானிய இலக்கிய உலகில் நிலவுகிறது. ஜப்பானிய வரலாற்றில் முதன்முதலில் வெட் நர்ஸ் (பெற்ற தாய் ஏதோ காரணத்தால் குழந்தைக்குப் பாலூட்ட இயலாத சூழலில் மாற்றாந்தாயாகப் பாலூட்டும் பெண்) என்ற தகவல் இடம்பெறுவது இப்பாடலில்தான்.

கி.பி. 1026ல் அரசவையின் படைத்தளபதியாக இருந்த கனேதக்காவுடன் மலர்ந்த காதலால் ஒரு பெண்குழந்தையைப் பெற்றெடுக்கிறார். அதே காலகட்டத்தில் பேரரசர் சுஜாகுவுக்குப் பிறந்த குழந்தைக்கு ஏதோ காரணத்தால் பாலூட்டி இருக்கிறார். பின்னாளில் அக்குழந்தை இரண்டாம் ரெய்செய் என்ற பெயருடன் கி.பி. 1045ல் அரியணை ஏறியது. பின்னர் நரிஅகிரா என்பவரைத் திருமணம் செய்து ஓர் ஆண் மகவைப் பெற்றெடுக்கிறார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 37 பாடல்களும் ஒரு தனிப்பாடல் திரட்டும் இடம்பெற்றிருக்கின்றன.

பாடுபொருள்: காதலர் தம்மை மறந்துவிட்ட வருத்தம்

பாடலின் பொருள்: அரிமா மலையின் அடிவாரத்திலுள்ள இனா சமவெளியில் இருக்கும் மூங்கில்கள் உரசும்போது வெளிப்படும் காற்று நீ என்னை மறந்துவிட்டாய் என்கிறது. ஆனாலும் நான் உன்னை மறக்கமாட்டேன்.

ஜப்பானின் புவியியல் கூறுகளைப் பதிவு செய்திருக்கும் ஒரு பாடல். தற்போதைய ஹ்யோகோ மாகாணத்தில் உள்ளது புகழ்பெற்ற அரிமா வெந்நீர் ஊற்று. ஜப்பானில் வெந்நீர் ஊற்றுகள் மிகவும் புகழ்வாய்ந்தவை. நிலத்துக்கடியில் அவிந்துபோன எரிமலைகள் இருக்கும்போது அங்கே இயற்கையாக ஏற்படும் ஊற்றில் வெளிப்படும் நீர் வெதுவெதுப்பாக இருக்கும். குளிர்காலங்களில் இத்தகைய வெந்நீர் ஊற்றுகளுக்குச் சென்று நீராடி வருவது ஜப்பானியர்களின் வழக்கம். அந்த நீரில் கந்தகச் சத்து கலந்திருப்பதால் தோலிலுள்ள நச்சுப்பொருட்கள் நீங்கிப் புத்துணர்ச்சி பெருகுவதாகவும் கருதுகிறார்கள்.

அந்த அரிமா மலையின் அடிவாரத்தில் இனா என்றொரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் இருபுறமும் உள்ள சமவெளியில் மூங்கில் மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. அந்த மூங்கில்களினூடே காற்று புகுந்து இசையாக வெளிப்படும்போது அந்த இசை "ஆமாம். அப்படித்தான். நீ என்னை மறந்துவிட்டாய்" என்பதுபோல் ஒலிப்பதாக ஆசிரியர் கூறுகிறார். ஜப்பானிய மொழியில் சோயோ என்றால் ஆமாம்; அப்படித்தான் என்று பொருள். நம் கோவலனும் கண்ணகியும் மதுரை நோக்கி வரும்போது வழியில் கட்டப்பட்டிருந்த தோரணங்கள் அவர்களை வரவேண்டாம் எனக் கூறியதுபோல் இளங்கோவடிகள் பயன்படுத்திய தற்குறிப்பேற்றத்துடன் இதை ஒப்பிடலாம். தன்னை மறந்துவிட்ட ஆணை நோக்கிப் பெண் பாடுவதாக அமைந்துள்ள இப்பாடலின் கடைசி வரியை "இருப்பினும் நான் உன்னை மறக்க மாட்டேன்" என முடிக்கிறார்.

வெண்பா:

அன்பதன் தாக்கம் வருத்தமும் தந்திடத்
துன்பமும் கொள்வது பெண்டிரே - என்பதை
மூங்கிற் குழலும் மறந்தனை என்றிடினும்
வாழ்கிலேன் உன்னை மறந்து

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.