![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 58
![]() இதழ் 58 [ ஏப்ரல் 26 - மே 20, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அச்யுதராயரின் காஞ்சீபுரக் கல்வெட்டு வடமொழிக் கல்வெட்டுக்களைப் போன்றி தெலுங்கு, கன்னடக் கல்வெட்டுக்களும் முதலில் மொழிபெயர்ப்போடு வெளியிடப்பட்டன. பின்னர் சிறு குறிப்புரையோடும் பின்னர் அமைந்துள்ள இடத்தை மட்டும் கொண்டும் வெளியிடப்பட்டன. அத்தகைய பொருள் கூறப்படாத கல்வெட்டுக்களின் விளக்கங்களை இங்கு காண்போம். 1. கல்வெட்டு அமைந்துள்ள இடம் காஞ்சீபுரத்தில் அத்தியூர் எனக்கூறப்படும் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள அருளாளர் கோயிலில் இரண்டாம் பிராகாரத்தின் தென்புறச்சுவற்றில் இந்தக் கல்வெட்டு இடம் பெற்றுள்ளது. இதன் தமிழ்ப்படி வடபுறச்சுவற்றில் இடம்பெற்றுள்ளது. 2. கல்வெட்டின் நிலை கோயிற்சுவற்றில் மாறி மாறி காவியும் வெள்ளையும் தீட்டப் பெற்றிருப்பதால் கல்வெட்டை அடையாளம் கண்டுபிடிப்பதே மிகவும் கடினமாக உள்ளது. தமிழ்ப்படி இதனைவிட மோசமான நிலையில் உள்ளது. 3. கல்வெட்டின் காலமும் அரசனும் கல்வெட்டின் வரிகள் சக ஆண்டு 1454 ஐக் குறிப்பிடுகின்றன. ஆகவே இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி.1533 ஆகும். இதனை வெளியிட்ட அரசனின் பெயர் அச்யுதராயன் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இவன் கி.பி 1529 முதல் 1542 வரை ஆண்டவன். விஜயநகரப் பேரரசனான கிருஷ்ணதேவராயனின் தமையன். இந்தக் கல்வெட்டு பட்டமேற்ற நான்காவது வருடம் வெளியிடப்பட்டுள்ளது. கல்வெட்டுப் பகுதி விரோதி வருடம் பட்டமேற்ற போது வெளியிட்ட நிவந்தத்தை நந்தன வருடம் அதாவது நான்காவது வருடம் சரிசெய்த விவரத்தைக் குறிப்பிடுகிறது. 4. எழுத்தியல் கன்னட வரிவடிவமும் தெலுகு வரிவடிவமும் பிரியத் துவங்கிய நேரம் என்பதால் பெரும்பாலும் வேறுபாடின்றியே காணப்படுகிறது. குறிப்பாக क என்னும் எழுத்து கன்னட எழுத்தாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. எழுத்துக்கள் ஓரளவிற்குச் சீராக உள்ளன. ளகாரம் சற்று முழுமை பெற்றுள்ளது. 5. பதிப்பு வரலாறு இந்தக் கல்வெட்டு 1919 ஆம் ஆண்டறிக்கையின் 545 ஆம் எண்ணாக குறிப்பிடப் பட்டிருந்தது. அதன் பின்னர் தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி பதினாறில் 102 ஆம் எண்ணாகப் பதிப்பிக்கப் பட்டது. 6. குறிப்புரை தரும் தகவல்கள் இந்தக் கல்வெட்டின் காலம் சகவருடம் 1454, நந்தன, பால்குன பகுளம் 4 (வெள்ளிக்கிழமை) ஆகும். இது கிறித்துவ சகாப்தத்தின் படி 1533 மார்ச் 14 ஆம் தேதியாகும். இது விரோதி வருடம் கார்த்திக பஹுள பஞ்சமியில் அச்யுதராயனின் பட்டாபிஷேகச் சூழலில் வெளியிடப்பட்டது. அச்யுதராயமன்னர் சாளுவ கிருஷ்ணப்ப நாயக்கரை வரதராஜர் மற்றும் ஏகாம்பரநாதர் கோயில்களுக்குச் சில கிராமங்களைச் சம்மாகப் பிரித்துத் தரும்படி ஆணையிட்டார். ஆனால் சாளுவநாயக்கர் ஏகாம்பரநாதருக்கு அதிகப் பங்கை அளித்துவிட்டார். இதனைக் கேட்ட அச்யுதராயர் மீண்டும் கிராம எண்ணிக்கையைச் சமமாக்கி அளித்தார். இந்தக் கல்வெட்டு 1919 ஆம் ஆண்டின் எண் 544 ஆம் தமிழ் கல்வெட்டின் தெலுகு மொழிபெயர்ப்பே ஆகும். 7. கல்வெட்டு வரிகள் (வரி 1) శుభమస్తు(।) స్వస్తి శ్రీమన్శశశ్రీమన్ మహారాజాధిరాజ రాజపరమేశ్వర మూవరాయరగండ అరిరాయవిభాడ అష్టదిక్కురాయమనోభయంకర భాషైక్కుతప్పువరాయరగండ పూర్వదక్షిణపశ్చిమసముద్రాధీశ్వర శ్రీవీరప్రతాప శ్రీవీర అచ్చుతయ దేవమహారాయులు పృథివీరాజ్యం చేయ నవధ(*త)రించిన శాలివాహన శకవర్షంబులు ౧౪౫౪ అగునేటి నన్దన సంవత్సర బా(*ఫా)ల్గుణ బ ౪ (శు)యందు శ్రీవీర అచ్చుతరాయమహారాయలు ప్రాకు విరోధి సంవత్సర కార్తిక బ (౫) నాండు పట్టాభిషేకస్తుండై విష్ణుకంచి వరదరాజదేవరకున్ను ఏకాంబ్రనాథునికిన్ని సమముగాను తమ పట్టాభిషేక కాల (வரி 2) మందు సమర్పించిన గ్రామంబులు (సమర్పించమని) సాళువ కిృ(కృ)ష్ణమనాయన్కి ఇప్పింబను ఆనతియ్యంగాను ఆ సాళువ నాయుంజును తన (కాణాచి)కంగాను గ్రామంబులను ఏకాంబ్రనాథన్కి ఎక్కుడు(*వ)గా విడిచి వరదరాజు దేవున్కి కొదవంగా నిడువంగాను ఆ వెనుకను స్వామిగ్రామంబులను వక్కిం(టి) తక్కువగా విడిచి ఉండంగాను పరామర్సిం(*ర్శిం)చి సమముగాను సమర్పించ్చి(*చి)న గ్రామంబులకున్ను వివరము। వరదరాజదేవరకూను (శియపురం) పల్లెలు ౪ గుం గూడాను గ్రామం ౧కి గ ౪౫0 అకాళి వెల్లూరు పల్లిగూడూను గ్రామం ౧కి గ ౪౫0 మణ్ణూర్కు పల్లెలు మూడూను గ్రామం (வரி 3) ౧కి గ ౯0 ఇపెట్టె గ్రామం ౧కి గ ౮౫ తినయనేరి సీమయలోన దేవాదాయ బ్రహ్మదాయంబు వెలిపగాను పల్లెలు.........................న్ను గూడూను గ్రామం ౧కి గ ౮౫ పాలయూరు పల్లెలు దూడాను గ్రామం ౧కి గ ౫0(0) గంగవరము గ్రామం ౧కి గ ౧౫౧౫ వెరశిగ్రామంబులు ౨ కిన్ని గ (౨)౫0౫ ౭ కిన్ని స్వామి రాయసప్రాకారనకు ఏకాంబ్రనాధనికిన్ని విడిచిన అక్కాళివెల్లూరు గ్రామం ౧కి గ ౪0౫ పోంగాను నిల్చిన గ్రామంబులు ౬కిన్ని గ ౨౧00 కిన్ని ప్రయము నై వైజ్య కట్టడప్రాకు స్వామి కట్టడ శేశిన పళ్యాలు ౫౪ కున్ను అతిరసపడి ౨న్ను దుధ్యన్న పళ్యాలు ౨న్ను తిరుపత్తి శామ పళ్యా (வரி 4) లు నాల్గు దీపాలు ౫0 కిన్ని ప్రాకు కట్టడ శేశిన గ (౧000) పోంగాను ఆ దినమునుంచి స్వామి రాయస ప్రాకారనకుం గ .................. కటడి శేసిన వరదరాజంముగారి ఉభయము పుళుగాపు ఏకాదశి ౧కి గ ౪0 లెఖను ఎండు ౧కి ఏకాదశి (౨౫) కిన్ని గ ౧000 కొమారవేంకటాద్రి అయ్యవారి ఉభయం దధ్యన్నపళ్యాలు ౨ కిన్ని సంబా బియ్యం న పెఱుగు శుంఠి అవాలు ఉప్పు మిరియాలు జీలకఱ్రలు మెంతుళ్ళు పచ్చళ్ళు ౪ కిన్ని నెల ౧కి గ ౭౨లెఖను ఎండు ౧కి గ ౩౬ స్వామి ఉభయ. పల్లకి శేవకుచేయను తిరువిళకు పంచులకు దినం ౧కి నూన్ రె ౧కి గ వె (வரி 5) ........ గ లెఖను ఎండు ౧కి గ ౩౬0 ఏకాంత అవసరముందు ఆరగించెట్టి తిరుపత్తిశామ పళ్యాలు ౨ కి సంబా బియం న ౧న్ను పాలముదు నెయ్యముదు చక్కెర పండ్డు తెంక్కాయలు కఱియముదులకు నెల ౧కి గ ౩రె లెఖను ఎండు ౧కి గ ౪౨ అడికాయముదు దినం ౧కి పొంకలు ౫0 తమలపాకులు ౧00 యా లెఖను ఎంజు ౧ పొంకలు ౬00............................... కి గ ౭(౮) ౫ తమలపాకులు (౩౬00) కు గ ౧౮ ..........వెరశి గ ౩౬ పెరుమాళ్ళకు చాత్తను దినం ౧కి గంధం పలం లెఖను ఎండు ౧కి పలాలు ౧ ౩౬0 కి ౮ ౧కి పలాలు ౬ లెఖను గ ౬0 వెరశి గ ౨౧౨౬౮౬ యా నైవేద్యప్రసాదం దధ్యన్నం తిరువత్తిశావాడి అతిరస(தொடர்ச்சியில்லை) (*- இக்குறியிட்டவை என்னுடைய திருத்தங்கள்) 8. பொருள் (வரி 1) శుభమస్తు(।) స్వస్తి శ్రీమన్శశశ్రీమన్ మహారాజాధిరాజ రాజపరమేశ్వర మూవరాయరగండ అరిరాయవిభాడ అష్టదిక్కురాయమనోభయంకర భాషైక్కుతప్పువరాయరగండ పూర్వదక్షిణపశ్చిమసముద్రాధీశ్వర శ్రీవీరప్రతాప శ్రీవీర అచ్చుతయ దేవమహారాయులు పృథివీరాజ్యం చేయ నవధ(*త)రించిన శాలివాహన శకవర్షంబులు ౧౪౫౪ అగునేటి నన్దన సంవత్సర బా(*ఫా)ల్గుణ బ ౪ (శు)యందు శ్రీవీర అచ్చుతరాయమహారాయలు ప్రాకు విరోధి సంవత్సర కార్తిక బ (౫) నాండు పట్టాభిషేకస్తుండై విష్ణుకంచి వరదరాజదేవరకున్ను ఏకాంబ్రనాథునికిన్ని సమముగాను తమ పట్టాభిషేక కాలమం சுபமஸ்து. ஸ்வஸ்தி ஸ்ரீமன் மஹாராஜாதிராஜ ராஜபரமேச்வர மூவராயகண்ட அரிராயவிபாட அஷ்ட-திக்கு-ராய-மனோ-பயங்கர பாஷைக்குதப்புவ-ராயர-கண்ட பூர்வ-தக்ஷிண-பச்சிம ஸமுத்ராதீச்வர ஸ்ரீ வீரப்ரதாப ஸ்ரீ வீர அச்சுதய தேவமஹாராயுலு ப்ருத்வீராஜ்ய சேயனவதரிசின சாலிவாஹன சகவர்ஷம்புலு 1454 அகு நேடி நந்தன ஸம்வத்ஸர பால்குண ப 4 (சு)யந்து ஸ்ரீவீர அச்சுதராயமஹாராயலு ப்ராகு விரோதி ஸம்வத்ஸர கார்திக ப (4) நாடு பட்டாபிஷேகஸ்துண்டை விஷ்ணு கஞ்சி வரதராஜதேவரகுன்னு ஏகாம்ப்ரநாதுனிகிந்நி ஸமமுகானு தம பட்டாபிஷேக காலமம் (பொருள்) சுபமுண்டாகட்டும். மஹாராஜாதிராஜனும் அரசர்களில் பரமேச்வரனும் மூன்றரசர்களை வென்றவனும் எதிரி அரசர்களைப் பிளந்தவனும் எட்டு திக்கிலும் உள்ள அரசர்களின் மனத்திற்கு அச்சமூட்டுபவனும் தன் சொல் தப்புபவரை அழிப்பவனும் கிழக்கு, தெற்கு மற்றும் மேற்குக் கடல்களுக்கு அதிபதியும் வீரப்ரதாபனுமான ஸ்ரீ வீர அச்சுதயதேவ மஹாராஜர் புவியை ஆள அவதரித்த சாலிவாஹன சகாப்தம் 1454 ஆன நந்தன வருடம், பால்குண பகுள நான்காம் நாளான இன்று முன்பே விரோதி வருடம் கார்த்திகை மாதம் பகுளம் நான்காவது நாள் பட்டாபிஷேகம் முடித்த விஷ்ணுகாஞ்சியில் உள்ள வரதராஜ தேவருக்கும் ஏகாம்பரநாதருக்கும் சமமாகத தனது பட்டாபிஷேக காலத்தில் (வரி 2) మందు సమర్పించిన గ్రామంబులు (సమర్పించమని) సాళువ కిృ(కృ)ష్ణమనాయన్కి ఇప్పింబను ఆనతియ్యంగాను ఆ సాళువ నాయుండును తన (కాణాచి)కంగాను గ్రామంబులను ఏకాంబ్రనాథన్కి ఎక్కుడు(*వ)గా విడిచి వరదరాజు దేవున్కి కొదవంగా నిడువంగాను ఆ వెనుకను స్వామిగ్రామంబులను వక్కిం(టి) తక్కువగా విడిచి ఉండంగాను పరామర్సిం(*ర్శిం)చి సమముగాను సమర్పించ్చి(*చి)న గ్రామంబులకున్ను వివరము। వరదరాజదేవరకూను (శియపురం) పల్లెలు ౪ గుం గూడాను గ్రామం ౧కి గ ౪౫0 అకాళి వెల్లూరు పల్లిగూడూను గ్రామం ౧కి గ ౪౫0 మణ్ణూర్కు పల్లెలు గూడూను గ్రామం மந்து ஸமர்பிஞ்சின க்ராமம்புலு (ஸமர்பிஞ்சமனி) ஸாளவ க்ருஷ்ணமநாயன்கி இப்பிம்பனு ஆனதிய்யங்கானு ஆ ஸாளுவ நாயண்டுனு தன(காணாசி)கங்கனு க்ராமம்புலனு ஏகாம்ப்ரநாதன்கி எக்குவகா விடிசி வரதராஜு தேவுன்கி கொதவங்கா நிடுவங்கானு ஆ வெனுகனு ஸ்வாமிக்ராமம்புலனு வக்கிண்டி தக்குவகா விடிசி உண்டங்கானு பராமர்சிஞ்சி ஸமமுகானு ஸமர்பிஞ்சின க்ராம்புலகுன்னு விவரமு. வரதராஜதேவரகூனு (சியபுரம்) பல்லெலு 4 கும் கூடானு க்ராமம் 1கி க 45- அகாளி வெல்லூரு பல்லி கூடானு க்ராமம் 1கி க 450 மண்ணூர்கு பல்லெலு கூடானு க்ராமம் (பொருள்) கொடுக்கப்பட்ட கிராமங்களை ஸாளுவ கிருஷ்ணநாயனை கொடுப்பிக்க ஆணைப் பிறப்பிக்க அந்த ஸாளுவநாயகர் தன்னிச்சையாய் ஏகாம்பரநாதருக்கு அதிகமாக விடுத்து வரதராஜதேவருக்கு குறைவாக விட எண்ணி அந்த ஸ்வாமியின் கிராமங்களை குறைத்து விடுத்து இருக்க இதனை அறிந்து சமமாகச் சமர்ப்பித்த கிராமங்களின் விவரம் வரதராஜருக்கு (சியபுரம்) சேரிகள் 4 இல் ஒன்றிற்கு கத்யம் (விஜயநகர கால நாணயம், கத்யணா என்றும் வழங்கப்படும்.) 45, அகாளி வெல்லூர் சேரி 1 ஒன்றிற்கு கத்யம் 450 மண்ணூரின் சேரிகள் கூடவும் (வரி 3) ౧కి గ ౯0 ఇపెట్టె గ్రామం ౧కి గ ౮౫ తినయనేరి సీమయలోన దేవాదాయ బ్రహ్మదాయంబు వెలిపగాను పల్లెలు.........................న్ను గూడూను గ్రామం ౧కి గ ౮౫ పాలయూరు పల్లెలు గూడాను గ్రామం ౧కి గ ౫0(0) గంగవరము గ్రామం ౧కి గ ౧౫౧౫ వెరశిగ్రామంబులు ౨ కిన్ని గ (౨)౫0౫ ౭ కిన్ని స్వామి రాయసప్రాకారనకు ఏకాంబ్రనాధనికిన్ని విడిచిన అక్కాళివెల్లూరు గ్రామం ౧కి గ ౪0౫ పోంగాను నిల్చిన గ్రామంబులు ౬కిన్ని గ ౨౧00 కిన్ని ప్రయము నై వైజ్య కట్టడప్రాకు స్వామి కట్టడ శేశిన పళ్యాలు ౫౪ కున్ను అతిరసపడి ౨న్ను దుధ్యన్న పళ్యాలు ౨న్ను తిరుపత్తి శామ పళ్యా 1 கி க 60 இபெட்டி க்ராமம் 1கி க 85 தினயனேரி ஸீமயலோன தேவாதாய ப்ரஹ்மதாயம்பு வெலிபகானு பல்லெலு...........................ன்னு கூடானு 1கி க 1515 பாலயூரு பல்லெலு கூடானு க்ராமம் 1 கி க 50(0) கங்கவரமு க்ராமம் 1கி க 1515 வெரசி-க்ராமம்புலு 2கின்னி க (2)505 7 கின்னி ஸ்வாமி ராயஸப்ராகாரானகு ஏகாம்ப்ரநாதநிகிந்நி விடிசின அக்காளிவெல்லூரு க்ராம்ம் 1 கி க 405 போங்கானு நில்சின க்ராமம்புலு 6கின்னி க 2100 கின்னி ப்ரயமு நைவைஜ்ய கட்டடப்ராகு ஸ்வாமி கட்ட சேசின பள்யாலு 54 குன்னு அதிரஸபடி 2ன்னு துத்யன்ன பள்யாலு 2ன்னு திருபத்திசாம பள்யா ஒன்றுக்கு 60 இபெட்டி கிராமத்தில் ஒன்றுக்குக் கத்யம் 85 தினயனேரி எல்லையில் அமைந்துள்ள தேவதாயம், பிரம்மதாயமான வேலிபகனின் சேரிகளான்.................... கூட ஒன்றுக்குக் கத்யம் 1515 பாலயூரின் சேரிகளைச் சேர்த்த கிராமம் 1க்கு கத்யம் 50(0) கங்கவரம் கிராமத்திற்கு 1க்கு கத்யம் 1515 வெரசி கிராமத்தின் இரண்டிற்கு கத்யம் (2)505 7 க்கு சுவாமியின் திருச்சுற்றுக்கு ஏகாம்பரநாதருக்கென்று விடுத்த அக்காளி வெல்லூரு கிராம்ம் கத்யம் 405 போக நின்ற கிராமங்கள் 6க்கும் கத்யம் 2100 ம் நைவேத்திய கட்ட்டம் முன்பு சுவாமி கட்டடம் செய்த பள்யம் 54க்கும் அதிரஸபடி 2க்கும் தயிர்சாத பள்யங்கள் ரெண்டும் திருபத்தி சாம பள்யங்கள் (வரி 4) లు నాల్గు దీపాలు ౫0 కిన్ని ప్రాకు కట్టడ శేశిన గ (౧000) పోంగాను ఆ దినమునుంచి స్వామి రాయస ప్రాకారనకుం గ .................. కటడి శేసిన వరదరాజంముగారి ఉభయము పుళుగాపు ఏకాదశి ౧కి గ ౪0 లెఖను ఎండు ౧కి ఏకాదశి (౨౫) కిన్ని గ ౧000 కొమారవేంకటాద్రి అయ్యవారి ఉభయం దధ్యన్నపళ్యాలు ౨ కిన్ని సంబా బియ్యం న పెఱుగు శుంఠి అవాలు ఉప్పు మిరియాలు జీలకఱ్రలు మెంతుళ్ళు పచ్చళ్ళు ౪ కిన్ని నెల ౧కి గ ౭౨లెఖను ఎండు ౧కి గ ౩౬ స్వామి ఉభయ. పల్లకి శేవకుచేయను తిరువిళకు పంచులకు దినం ౧కి నూన్ రె ౧కి గ వె லு நால்கு தீபாலு 50 கின்னி ப்ராகு கட்டட சேசின க (1000) போங்கானு ஆ தினமுனுஞ்சடி ஸ்வாமி ராயஸ ப்ராகாரநகும் க ....................... கட்டி சேஸின வரதராஜும்முகாரி உபயமு புளுகாவு ஏகாதசி 1 கி க 40 லெகனு எண்டு 1கி ஏகாதசி (25) கின்னி க 1000 கொமாரவேங்கடாத்ரி அய்யவாரி உபயம் தத்யன்னபள்யாலு 2 கின்னி ஸம்பா பிய்யம் ந பெறுகு சுண்டி அவாலு உப்பு மிரியாலு ஜீலகற்றாலு மெந்துள்ளு பச்சள்ளு 4 கின்னி நெல 1கி க 72 லெகனு எண்டு 1கி க 36 ஸ்வாமி உபய பல்லகி சேவகுசேயுனு திருவிளகு பஞ்சுலகு தினம் 1 கி நூன் ரெ 1 கி க வெ நான்கு தீபங்கள் 50க்கும் முன்பு செலுத்திய கத்யம் 1000 போக சுவாமி ப்ராகாரத்திற்கு கத்யம்...................... கட்டிச் செய்த வரதராஜும்மு என்பவரின் உபயம். மாத ஏகாதசி ஒன்றுக்கு கத்யம் 40 என்று வருடம் 1க்கு ஏகாதசி 25க்கும் கத்யம் 1000 கொமாரவேங்கடாத்ரி ஐயாவின் உபயம். தயிர்சாத பிரசாதம் 2க்கு சம்பா அரிசி, தயிர் சுக்கு, உப்பு, மிளகு, சீரகம் 4கென்று மாதம் ஒன்றுக்கு கத்யம் 72 என்று வருடம் 1க்கு கத்யம் 36.. சுவாமியின் பல்லக்கு சேவைக்கு திருவிளக்கு வைக்கப் பஞ்சுக்கு தினம் 1க்கு எண்ணை 1 கத்யம்......... (வரி 5) ........ గ లెఖను ఎండు ౧కి గ ౩౬0 ఏకాంత అవసరముందు ఆరగించెట్టి తిరుపత్తిశామ పళ్యాలు ౨ కి సంబా బియం న ౧న్ను పాలముదు నెయ్యముదు చక్కెర పండ్డు తెంక్కాయలు కఱియముదులకు నెల ౧కి గ ౩రె లెఖను ఎండు ౧కి గ ౪౨ అడికాయముదు దినం ౧కి పొంకలు ౫0 తమలపాకులు ౧00 యా లెఖను ఎంజు ౧ పొంకలు ౬00............................... కి గ ౭(౮) ౫ తమలపాకులు (౩౬00) కు గ ౧౮ ..........వెరశి గ ౩౬ పెరుమాళ్ళకు చాత్తను దినం ౧కి గంధం పలం లెఖను ఎండు ౧కి పలాలు ౧ ౩౬0 కి ౮ ౧కి పలాలు ౬ లెఖను గ ౬0 వెరశి గ ౨౧౨౬౮౬ యా నైవేద్యప్రసాదం దధ్యన్నం తిరువత్తిశావాడి అతిరస ........... க லெகனு எண்டு 1கி க 360 ஏகாந்த அவஸரமுந்து அரகிம்செட்டி திருபத்திசாம பள்யாலு 2 கி ஸம்பா பிய்யம் ந 1ன்னு பாலமுது நெய்யமுது சக்கெர பண்ட்டு தெங்காயுலு கறியமுதுலகு நெல 1கி க 38 லெகனு எண்டு 1 கி க 42 அடிகாயமுது தினம் 1 கி பொங்கலு 50 தமலபாகுலு (3600) கு க 18 .......... வெரசி க 36 பெருமாள்ளகு சாத்தனு தினம் 1 கி கந்தம், பலம், லெகனு எண்டு 1 கி பலாலு 1 36- கி 8 1 கி பலாலு 6 லெகனு க 60 வெரசி க 212686 யா நைவேத்யப்ரஸாதம் தத்யன்னம் திருபத்திசாவாடி அதிரஸ.... என்று ஆண்டு 1க்கு கத்யம் 360. தனி சந்தர்ப்பத்தில் அரகிம்செட்டி திருபத்தி சாம பள்யங்கள் 2க்கு சம்பா அரிசி 1ம் பாலமுது, நெய்யமுது, சக்கரை அடைக்காயமுது தினம் 1க்கு பொங்கல், 50 3600 கு கத்யம் 18............ வெரசி கத்யம் 36, 1க்கு நிலங்கள் 6 என்று 60 வெரசிக்கு 212686 நைவேத்திய பிரசாதம் திருப்பத்தி சாவாடி அதிரஸ.................... 9. குறிப்பு தமிழ்க் கல்வெட்டுக்களை ஒத்துள்ள இதன் பாணி தமிழ்ச் சொற்களை அப்படியே குறிப்பிடுகிறது. பாலமுது, நெய்யமுது, கறியமுது என்று நைவேத்தியச் சொற்கள் அப்படியே கையாளப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுக் குறிப்பிடும் ஊர்களில் ஒன்றான தினயனேரி திரையனேரி என்று புகழ்பெற்ற ஊராகும். அது தற்போது தென்னேரி என்று வழங்கப்படுகிறது. அதனை ஒட்டிய பகுதியில் அருளாளன் என்று 16 நூற்றாண்டு எழுத்துக்கள் கொண்ட ஆழிக்கல் ஒன்றைச் சமீபத்தில் நான் பார்த்தேன். இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் பகுதியில் அந்த ஆழிக்கல் அடையாளக்கல்லாக வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போது கேட்பாரற்றுக் கிடக்கிறது. அக்காலத்திலேயே அரசாணையை மதியாது தன் விருப்பப்படி நிலமளித்த விவரம் ஆச்சரியப்படத்தக்க முறையில் உள்ளது. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |