http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 150

இதழ் 150
[ ஜனவரி 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

சிந்தை சிலிர்க்கும் சிற்பங்கள் - 1
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 3
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர்-2
முக்தீசுவரம்
உலக்கணேசுவரம்
விளக்கேற்றல் எனும் அறம்
வரலாற்று நாயகர் பேராசிரியர் மா. ரா. அரசு
ஜப்பானில் மணல்மேட்டு மாஃபியா
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும் கட்டுமானக் கோயில்களும்
மா.ரா. அரசு - அனைவருக்கும் நல்லோன்
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் -7
இன் சொல்
இதழ் எண். 150 > இலக்கியச் சுவை
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் -7
சு.சீதாராமன்

“தீர்க்கசுமங்கலி“ திரைப்படத்தில் ‘புன்னகை அரசி கே.ஆர்.விஜயா மற்றும் திரு.முத்துராமன் அவர்கள் நடிப்பில் காட்சிப்படுத்தப்பட்ட கவிஞர் வாலியின் வனப்பான தமிழால் ஆய்ந்த வைர வரிகள் கொண்ட



”மல்லிகை என்மன்னன்மயங்கும் பொன்னான மலரல்லவோ” என்ற பாடல் கால வெள்ளத்தில் கரையாமல் நிலைக்கும் தன்மை கொண்ட சாகாவரம் பெற்ற பாடலாகும்.



”ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?” என்றால் அந்தந்த ஸ்வரங்களாகவே தன் தேமதுரக் குரலால் வாழும் ,எஸ் எம் சுப்பையா நாயுடு அவர்களால் தமிழ் திரைக்கு அறிமுகம் செய்யப்பட்ட திருமதி. வாணி ஜெயராம் அவர்கள் தனது நாதலயஸ்வரம் கலந்த குரலில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் மென்மையான இசையில் இந்த பாடலைப் பாடிய பிறகு புகழின் சிகரம் தொட்டார் என்றால் அது சற்றும் மிகையாகாது. இப்பாடல் சந்திராதித்யர்களும் தமிழும் இப்புவியில் உள்ளவரை சாகா வரம் பெற்று எல்லா இதயங்களையும் என்றென்றும் ஈர்க்கும் இன்பமயமான பாடல்!



இப்பாடலை இயற்றிய கவிஞர் வாலி , இப்பாடலுக்கு இசை கொடுத்த மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் , இப்பாடலை இனிதாகப் பாடிய திருமதி. வாணி ஜெயராம் ஆகியோரின் உழைப்பை தம் மெய்ப்பாடுகளால் உலகுக்குக் காட்டிய திருமதி கே.ஆர்.விஜயா மற்றும் திரு.முத்துராமன் ஆகியோர்



என்றுமே நினைவு கூறத்தக்கவர்கள்.!



அகத்திணை இலக்கியங்கள் கூறும் கற்பியலில் சேர்க்கப்பட வேண்டிய உன்னதமான பாடல்!



தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே பல்வேறு காரணங்களால் பிணக்குகள் வரலாம். இதனை ஊடல் என்று கூறுவர். இந்த ஊடலைக் குறிக்கும் திணை



மருதத் திணை. திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள். பாட்டுக்கு உரிய தலைவர்களின் ஒழுக்கத்தை பாடல் பொருளாக பாடுவதை திணை என்று நம் முன்னோர் வகைப்படுத்தியுள்ளனர்.



அகத்திணை - ஓர் ஆணும், பெண்ணும் காதலால் இணைந்து தமக்குள்ளே இன்பம் துய்த்து வாழ்தலே அக வாழ்வு ஆகும். இவ்வாறு அவர்கள் தமது அகத்துள் நுகரும் உணர்வுகள் குறித்தவற்றையே பழந்தமிழ் இலக்கியங்கள் அகத்திணை என்கின்றன.



ஒவ்வொரு திணைக்கும் நிலமும் அகம் சார்ந்த ஒரு குறிப்பிட்ட குணமும் உண்டு.



மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த நிலமும். இவை வளமான செந்நெல் (செம்மையான என்று பொருள் கொள்க)விளையும் பகுதி என்பதால், இங்கே உழுது/உழுவித்து உண்ணும் ”பெரும் செல்வர்” (உழுதுண்டு வாழ்வோரை சங்க இலக்கியங்கள் இப்படித்தான் பதிவு செய்திருக்கின்றன) வாழ்வது இயல்பு. இவர்கள் தம் வளமையால் காமத்தில் எளியராகி பரத்தமை மேற்கொள்ளுதல் இந்நிலத்தில் வாழ்பவர்களுக்கு இயல்பாக நிகழ்வதாகும். இதனால் தலைவியர்க்கு 'ஊடலும் ஊடல் நிமித்தமும்' ஆக எழும் பேச்சுக்களும் இயல்பாக இந்நிலத்தில் காணப்படும். இது குறித்தே ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதத்திணைக்கு உரித்தாக்கினர் நம் முன்னோர் . ஆனால் இப்பாடலின் தலைவன் வளமையிலும் கற்புநெறி தவறாதவன். பிறகேன் ஊடல்? தலைவனுக்கும் தலைவிக்கும் ஊடல் தோன்ற எண்ணிறந்த காரணங்கள் உள்ளன! அப்படி நடைமுறை வாழ்விலும் இருந்தால் தான் அகத்திணை விளம்பும் இன்பம் வாழ்வில் வசப்படும்.



மேற்கூறிய கூற்றை வள்ளுவக் கிழவன் வரிகளில் காண்போம்



ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம்



கூடி முயங்கப் பெறின்



இந்த குறள் காமத்துப் பாலில் வரும் ஒன்று! ”மல்லிகை என் மன்னன் மயங்கும்” பாடல் மேற்கூறிய குறளின் பொருளை விரிவாக நாம் உணரச்செய்யும் வகையில் கற்பியலில் அமைந்த அகம் சார்ந்த பாடலாக இக்கட்டுரையாசிரியர் கருதுகிறார்!.



கற்பு வாழ்வின் போது, பெரும்பாலும் பரத்தையிற் பிரிவு நிகழ்த்தும் தலைவன் அயல்மனை, அயற்சேரி, புறநகர் என்ற மூன்று இடங்களுக்கும் சென்று தங்கிவிடுவதால் தலைவிக்கு ஏற்படும் ஊடல் பற்றியே சங்க இலக்கியங்கள் பேசும். ஆனால் நடைமுறை வாழ்விலே கற்பின் நெறி பற்றி நடக்கும் தலைவன்



சில புறக்காரணங்களால் ஊடல் கொள்வதும் அவ்வூடலை தலைவி முயன்று



சரிசெய்வதும் இப்பாடலில் அழகாக எடுத்தாளப்பட்டிருப்பது இப்பாடலின் தனிச்சிறப்பு என்றால் அது சற்றும் மிகையாகாது!



தலைவிக்கு ஏற்படும் ஊடலைத் தீர்த்து மீண்டும் தலைவன், தலைவியின் கற்பு வாழ்வை இணைத்து வைக்கும் இனிய பணியை ஆற்றுபவர்களை” நம்பி அகப்பொருள் நூற்பா” ஊடல் தீர்க்கும் வாயில்களாகப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. பாணன், விறலி, கூத்தர், ஏவலர், தலைவி ஊடியுள்ள நிலையைக் காண்பவர்கள் , பாங்கன், பாங்கி, தேர்ப்பாகன், செவிலி, சான்றோர், காமக்கிழத்தி, புதல்வர், விருந்தினர், தலைவியின் ஆற்றாமை (பொறுத்துக் கொள்ள முடியாத தனிமையும் வருத்தமும்) ஆகியவை ஊடல் தீர்க்கும் வாயில்களாகக் கூறப்பட்டிருக்கின்றது. தலைவியின் ஊடல் தீர்க்க தலைவனுக்கு இத்தனை வாயில்கள் உள்ளன! ஆனால் இச்சூழலில் தலைவி தலைவன் விரும்பும் “மல்லிகை” மலரையே வாயிலாகக் கொண்டு தலைவனின் ஊடல் தீர்த்த பாங்கு



வார்த்தைகளின் விவரணங்களுக்கு அப்பாற்பட்டதாகும்!.



மல்லிகை என் மன்னன் மயங்கும்



பொன்னான மலரல்லவோ



மல்லிகை என் மன்னன் மயங்கும்



பொன்னான மலரல்லவோ



தலைவனின் ஊடல் தணிக்க முற்படும் தலைவி அவன் விரும்பும் மல்லிகை மலரை உலக விஷயங்களில் ஒன்றிய மாந்தர்களின் கண்களால் உயர்வாக கருதப்படும் ”பொன்”னுடன் ஒப்பிட்டு அம்மலரை முதலில் உயர்த்தி ஊடல் தணிக்கும் பணியைத் துவங்குகிறார்!



என் நேரமும் உன் ஆசை போல்



பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ



மல்லிகை மலர் சூடிய தலைவியை கண்ணுறும் போழ்தெல்லாம் ஆசைகளால் கிளர்ந்தெழப்பட்ட தலைவன் தலைவியின் பால் ஈர்க்கப்படுகிறான் என்பது



இவ்விடத்தில் வாசனையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த விஷயங்களை நினைவு படுத்துதல் வாசனையாகும். தலைவனின் கோபம் தணிக்கும் அம்மலரை சூடிக் கொள்ளவா என்று சூடிக்கொண்டு (ஊடல் தணிக்கும் உத்திகளில் ஒன்றாக கொள்ளலாம்) அனுமதி வேண்டுகிறாள்.



மல்லிகை என் மன்னன் மயங்கும்



பொன்னான மலரல்லவோ



வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்



வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்



திங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது



உவமையும் உருவகமும் கலந்து புது விதமாக கவிஞர் கையாளும் இப்பகுதி வெகு அற்புதம்.



இங்கு தலைவனை திங்களாகவும், தலைவியை மேகமாகவும் உருவகப் படுத்தும் கவிஞர் உருவகத்திற்கு “வெள்ளி ஊஞ்சலை” உவமைப்படுத்துகிறார்.



இங்கு தன்னை அந்த மேகமாக பாவித்து தலைவனை திங்களாக பாவித்து மேகம் மதியை தாலாட்டுவது போல் தான் தலைவனை தாலாட்ட தயாராக இருப்பதை குறிப்பால் உணர்த்தி செயலிலும் அவ்வுணர்வை தலைவனுக்கு வழங்க முற்படுகிறார்.



குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி



கொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது



இவ்வரிகளிலும் மேற்கூறிய இலக்கணத்தையே கவிஞர் பயன்படுத்தியிருக்கிறார்



இங்கு குளிர் காற்றாக தலைவனையும் தளிர்ப்பூங்கொடியாக தன்னையும் உருவகம் செய்யும் தலைவி ஊடல் தணிக்கும் உத்தியாக கொஞ்சிப்பேசி அன்புபாராட்டி தலைவனாகிய குளிர்ந்தகாற்றால் தான் தளிர்ப் பூங்கொடி(தலைவி) அசையும் என்பதையும் குறிப்பால் உணர்த்தி ஊடலை முற்றாகத் தணிக்கும் அடுத்த கட்டத்தை நோக்கி தலைவி நகர்கிறார்!



என் கண்ணன் துஞ்சத்தான்



என் நெஞ்சம் மஞ்சம்தான்



கையோடு நான் அள்ளவோ!?



தலைவனை காதலில் மன்னனாகிய கண்ணனாகவும் தனது மார்பகங்களை தலைவன் துஞ்சும் மஞ்சமாகவும் உருவகப் படுத்தி தலைவனை கைகளால் அள்ளி தனது மார்போடு அணைத்துக் கொள்கிறாள்! தலைவன் கோபம் நீங்கியவனாய் தலைவியிடம் ஊடல் தணிந்ததை புன்னகை என்னும் குறிப்பால் உணர்த்துகிறான்.



என் தேவனே உன் தேவி நான்



இவ்வேளையில் உன் தேவை என்னவோ?



குறிப்பறிந்த தலைவி ஊடல் தணிந்த இவ்வேளையில் தலைவனின் தேவை அறிந்து அதனை நிறைவேற்ற சித்தமாயிருப்பதை மகிழ்வான தன் மெய்ப்பாடுகளால் தலைவனுக்கு உணர்த்துகிறார்.





 



மல்லிகை என் மன்னன் மயங்கும்



பொன்னான மலரல்லவோ



பொன் மாங்கல்யம் வண்ணப் பூச்சரம்



பொன் மாங்கல்யம் வண்ணப் பூச்சரம்



மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது!



மஞ்சளும் குங்குமமும் வண்ணப்பூச்சரமாகிய தங்க மாங்கல்யத்தையும் தனக்கு வழங்கிய தலைவனை நன்றியுடன் எண்ணிப்பார்த்து,



ஓராயிரம் இன்பக்காவியம்



உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது!



பதிலுக்கு ஆயிரம் இன்பக் காவியங்களை தன் தலைவனின் கண்களுக்கு அள்ளி வழங்கியதை வாசனையாக உணர்த்தி





நம் இல்லம் சொர்க்கம்தான்



நம் உள்ளம் வெள்ளம்தான் ஒன்றோடு ஒன்றானது



உணர்வால் ஒன்றிய நாம் இருக்கும் நமது இல்லம் சொர்க்கமென விளித்து



என் சொந்தமும் இந்த பந்தமும் உன்னோடுதான்



நான் தேடிக்கொண்டது



இவ்வாறு, தான் தலைவான் பால் கொண்ட உறவை வெளிப்படுத்தி சகலவிதத்திலும் தலைவன் பால் தன்னை ஒப்புக்கொடுத்த தலைவி



என்னை நீ கோபிப்பது சரிதானா? என்று தலைவனை நோக்கி வினவாமலே தன் மென்மையான வெளிப்பாடுகளில் வெளிப்படுத்திய பாங்கு நிஜமாகவே வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது!



கவிஞர் வாலியின் புகழ் நிலைத்து நிற்கட்டும்!


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.