http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 5

இதழ் 5
[ டிஸம்பர் 15, 2005- ஜனவரி 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

தவறுகளைத் தவிர்ப்போம்
மத்தவிலாசப் பிரகசனம் - 3
இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ் - ஒரு அறிவிப்பு
ஸ்ரீபுறக்குடிப்பள்ளி
கல்வெட்டாய்வு - 4
கட்டடக்கலை ஆய்வு - 5
வைஷ்ணவ மாகேசுவரம்
இராஜசிம்மன் இரதம்
Political history of Thirutthavatthurai and it"s neighbourhood
எம்.எஸ் - ஒரு வரலாற்றுப் பதிவு
சங்கச்சாரல் - 5
கோச்செங்கணான் யார் - 3
இதழ் எண். 5 > தலையங்கம்
தவறுகளைத் தவிர்ப்போம்
ஆசிரியர் குழு
தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தலங்களைக் காண அன்றாடம் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பலர் வருகின்றனர். அப்படி வருகிறவர்கள், கலைக் களஞ்சியமாக விளங்கும் இக்கோயில்களை நேரில் காணும் பொழுது, இந்த இடங்களைப் பற்றிய தகவல்களை அறிய ஆவல் கொள்வது இயற்கையே.

பெரும்பான்மையான கோயில்களில் குருக்களே இந்த திருப்பணியை செய்வார். ஆனால் அவர் கூறும் செய்திகளுக்கும் வரலாறுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அவர் கூறுவதெல்லாம் அந்த கோயிலில் யார் யார் எந்த எந்த பாவங்கள் செய்து, தோஷங்களில் அவதிப்பட்டு, எந்த எந்த குளம் குட்டையில் நீங்கி எப்படி நற்கதி அடைந்தார்கள் என்பதைப் பற்றியே இருக்கும்.

கொஞ்சம் காசு உள்ள கோயிலில் இந்த வேலையை குருக்களுக்கு விடாமல் ஒரு பலகையில் எழுதி வைத்திருப்பார்கள். சில இடங்களில், இதைத் தல புராணம் என்ற பெயரில் புத்தகமாகவும் விற்பார்கள்.

இந்திரனும் சூரியனும் சந்திரனும் இந்த மஹானுபாவர்கள் கூறுவது போலப் பாவங்களைச் செய்திருந்தால், அவர்களையெல்லாம் நம் முன்னோர்கள் தெய்வமாக வணங்கியிருப்பார்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். வாய்மையும் இறைவனும் ஒன்றென்று கூறும் மரபில் வந்த நாம் இறைவனின் இருப்பிடத்திலேயே பொய்யை நுழைப்பது பெரிய பாவச் செயலாகும்.

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் தகவல்பலகைகள், மேற்கூறிய அபத்தங்கள் போலல்லாமல் உண்மையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் உயர்ந்த நோக்கோடு வைக்கப் பட்டுள்ளன. இப்பலகைகளை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் படிப்பதை மாமல்லபுரம், தஞ்சாவூர் போன்ற இடங்களில் கண்கூடாகக் காணலாம். இப்பலகைகளின் நோக்கம் உயர்வாக இருப்பினும், இப்பலகைகள் சொல்லும் செய்திகள் 100% சரியானதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.





உதாரணமாக, மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் ரதத்திற்கு அருகில் இருக்கும் பலகை, மாமல்லபுரத்திலுள்ள கோயில்களில் பெரும்பான்மையானவை முதல் நரசிம்ம வர்மன் என்ற மாமல்லன் கட்டியதாகத் தெரிவிக்கிறது. 'அத்யந்த காமம்' என்ற நூலில் முனைவர் கலைக்கோவன், பஞ்ச பாண்டவர் ரதம் என்றழைக்கப்படும் கற்றளிகளை எழுப்பியது இராஜசிம்மன்தான் என்பதை பல ஆதாரங்களுடன் முன் வைக்கிறார். மாமல்லபுரத்திலுள்ள குடைவரைகள், ஒருகல் தளிகள் (monolithic) மற்றும் கட்டுமான கோயில்கள் என்கிற மூவகை கோயில்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது 'இவற்றில் கட்டுப்பாடான வேலைப்பாடுடன் கூடிய குரங்குப் போதிகை' என்று ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டிட உறுப்பான போதிகையில் பல வகைகள் இருப்பினும் 'குரங்குப் போதிகை' என்றொரு வகை இருப்பதாகத் தெரியவில்லை. பல்லவர் காலக் கோயில்களில் பரவலாகப் காணப்படும் தரங்கப் போதிகைதான் இவ்வாறு தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சகாதேவ ரதத்தை சரியாக 'கஜ பிருஷ்ட' விமானம் என்று குறிப்பிட்டாலும் 'கஜ ப்ருஷ்ட' விமானத்தை 'வேசர விமான' வகையுள் சேர்த்திருப்பது தவறாகும்.

இரண்டாவது பத்தியில், 'வண்ணங்கள்' என்று இருக்க வேண்டிய இடத்தில் 'விண்ணங்கள்' என்றும் 'நுணுக்கங்களையும்' என்ற இடத்தில் 'நுணுக்கங்களாலும்' என்றும் இருக்கிறது. 'மாடச் சிற்பங்களில் மகா விஸ்தாரமாகக் கருதப் படுகிறது' என்ற வரிக்கு என்ன பொருள் என்று தெளிவாகத் தெரியவில்லை. 'மாடச் சிற்பங்கள்' என்று எதைக் குறிப்பிடுகிறார்கள் என்று விளங்கவில்லை. மாமல்லபுரத்தில் இருக்கும் கோயில்களைப் பொருத்த வரையில், எந்த கோயிலை எந்த மன்னன் எழுப்பினான் என்பதில் வரலாற்றாய்வாளர்களுள் பல வேறுபாடுகள் இருக்கும் நிலையில், இன்னார்தான் இதைக் கட்டினார், இந்த கல்வெட்டுகள் இந்த மன்னனைக் குறிக்கின்றது என்றெல்லாம் ஆணித்தரமாகக் கூறுவதைத் தவிர்த்திருக்கலாம்.





தஞ்சை பெருவுடையார் கோயிலில் உள்ள பலகையில், விமானத்தின் உச்சியில் இருக்கும் சிகரப் பகுதி 80 டன் எடையுள்ள பிரம்மந்திரக் கல்லுடன் வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறது. விமானத்தின் சிகரம் ஒரே கல்லால் ஆனதல்ல, பல கற்கள் கொண்டு இணைக்கப் பட்ட ஒன்று என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவுப்படுத்தப்பட்ட பின்னும் இப்படியொரு செய்தியைபைப் பலகைகள் தாங்கியிருப்பது வருத்தத்தையளிக்கிறது. சோழர் கால ஓவியங்களைப் பற்றி கூறும் பகுதியில், இராஜராஜன் மற்றும் கருவூர்தேவரின் ஓவியங்களும் இங்கு இருப்பதாகக் கூறுகிறது. இதற்கு என்ன ஆதாரம் என்று விளங்கவில்லை. ஒருவேளை, தட்சிணாமூர்த்தியிடம் பாடம் கேட்கும் சனகாதி முனிவர் இருவரைத்தான் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்கள் போலும்.

இந்த பலகைகள் முதல் முதலில் வைக்கப் பட்ட காலத்தில் உண்மையென்று நம்பப்பட்ட விஷயங்கள் பின்னால் நடந்த ஆய்வுகளில் தவறென்று நிரூபிக்கப் பட்டிருக்கலாம். ஆதலால், வருடா வருடம் இந்த பலகைச் செய்திகளில் ஏதேனும் மாற்ற வேண்டியிருக்குமா என்று ஆராய்வது அவசியம். இப்பலகைகளைப் படிப்போர்களுள் பெரும்பாலானோர் மறுபேச்சின்றி இச்செய்திகளை எடுத்துக் கொள்வதால்,அச்செய்திகளில் தவறிருப்பின், அது உலகம் முழுவதும் பரவும் அபாயம் இருப்பதை உணர்ந்து நடத்தல் வேண்டும். ஆனந்த விகடன் போன்ற பிரபலமான பத்திரிகையில் புகைப்படத்துடன், 'தஞ்சாவூர் விமானத்தின் நிழல் தரையில் விழும்' என்ற செய்தி வெளியான பின்னும்கூட, நிதமும் 'நிழல் தரைவீழா விமானமாக' அவ்விமானத்தை வர்ணித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். நாம் பெருமை கொள்ள உண்மையான தகவல்கள் கணக்கிலடங்காமல் கொட்டிக்கிடக்கையில், உண்மைக்குப் புறம்பான செய்தி மூலம் பெருமைப் பட்டுக் கொள்வது அவசியமற்றதாகும்.

தவறுகளைத் தவிர்ப்போம், கட்டுக் கதைகளைக் கட்டோடொழிப்போம்!!

அன்புடன்
ஆசிரியர் குழுthis is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.