http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 56

இதழ் 56
[ ஃபிப்ரவரி 24 - மார்ச் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

என்று திருந்தும் எங்கள் தமிழ்ச் சமூகம்?
புவனேசுவர விளக்கு
Elephant - The War Machine
திரும்பிப்பார்க்கிறோம் - 28
திருத்தங்கல் குடைவரை
கங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு - 2
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 3
அழகி
அவர் - பகுதி 8
Thirumeyyam - 3
Silpi's Corner-08
அவர் இல்லாத இந்த இடம் . . .
வடமொழிக் கல்வெட்டுக்கள் – 1
தசரூபகத்தில் நாட்டியம்
SMS எம்டன் 22-09-1914
இதழ் எண். 56 > பயணப்பட்டோம்
கங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு - 2
ரிஷியா
விதி எழுதும் வித்தகன்:வடக்குப் புறச்சுவற்றை நெருங்க முடியவில்லை - காவற்தளமாய் மாறிவிட்டிருந்தது. முன் அனுபவம் எச்சரிக்க, சற்று விலகி தாடியுடன் நின்றிருந்த பிரம்மனை சந்தித்தேன். அவரோ ஒரு மெல்லிய புன்னகையுடன் தன் இரு மனைவியரான சரஸ்வதி, சாவித்திரியுடன் அருள்பாலிக்க, ஏன் இந்த சோக தாடியோ ? பக்கச் சுவர்களில் சூரிய சந்திரர்கள் மற்றும் தேவர்கள், ரிஷிகள் சிற்ப எழிலுடன் காட்சியளித்தனர். பைரவர் மண்டை ஓடுகளுடன் என்னை பயமுறுத்த, மன்மதன் இரதி சகிதம் காமாந்தகமூர்த்தி வீற்றிருந்தார். காலாந்தகர், துர்க்கை என எங்கெங்கு காணினும் ருத்திர வடிவங்களுடன் வடக்குப்புறச் சுவர் கம்பீரமாய் எழுந்து நிற்கிறது.

பிரம்மாண்டம் என்ற சொல்லின் தத்துவம்தான் என்னவோ இராஜேந்திரா என்று யோசித்த வண்ணம் மேற்குப் புறச்சுவர் பக்கம் நகர்ந்தேன். நின்ற திருக்கோலத்தில் நமது சுப்பிரமணிய சுவாமி அபயம் அளித்தார். மற்றும் அருளாள அண்ணலாய் சிவனும் உமையும் கலைப்பொலிவுடன் ஒரு கோஷ்டத்தில் காட்சிதர மனநெகிழ்ச்சி ஏற்பட்டது. சிவனின் வெவ்வேறு அனுக்கிரக கோலங்களைக் காண இத்தலமே சிறந்தது என்று தோன்றியது.





கல்லா? சுதையா?


வைஷ்ணவ மஹேஸ்வரன் :சங்கு சக்ரதாரியாய் மகாவிஷ்ணு மந்தகாசம் புரிந்தார். நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நேமியோனின் அருகே சென்று வணங்கினேன். கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ ? கதிரவன் கணைகடல் முளைத்தனன் இவனோ எனப் பாடி வாழ்த்தியது என் மனம்.

அடி முடி காணா அண்ணல் :அடுத்ததாய் இலிங்கோத்பவர் அமைதியாய் நின்றிருந்தார். வலது மேற்கரம் பரசு ஏந்த, கீழ்க்கரமோ அபயம் வழங்கிற்று. இடது மேற்கரம் மானைப் பிடித்திருக்க கீழ்க்கரமோ தொடையில் அழுந்தியவண்ணம் இருந்தது. வழக்கமாய்க் காணும் சிற்பத் தொகுதிதான் இது.

கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் :சிவனும் பார்வதியும் அணுக்கமாய் நின்றிருந்தனர். சிவனின் வலது மேற்கரம் கங்கையை ஏற்றவண்ணம் இருந்தது. கீழ்க்கரமோ பார்வதியை அணத்தவண்ணம் இருந்தது. இரசித்தவாறு புகைப்படம் எடுக்க முயல்கையில் ஹா ஹா எனச் சிரிப்பலைகள் என் முதுகுப்புறம் எழுந்தன. மெல்லத் திரும்பினேன். தேவதைகள் நின்றிருந்தனர். மோகன இராகம் இசைத்த சிற்பத் தொகுதியைப் புகைப்படம் எடுத்தேன். தொடர்ந்த சிரிப்பலைகளைத் தாங்கமுடியவில்லை. பிடிக்கவில்லையென்றால் பார்க்காமல் போகவேண்டியதுதானே? ஆனால் அவர்களோ சிற்பத்தைப் பார்த்துக்கொண்டும் என்னைக் கேலிபேசிக்கொண்டும் சிரித்தார்கள். மனிதனின் ஆன்மா விழித்தெழுவது கலைகளில்தான். எதையும் கலைக்கண்ணோடு பார்த்து இரசிக்கப் பழகவேண்டும். மனவிகாரத்தோடு அல்ல.





சண்டேச அருளாளர்


தொலைநோக்கியை உயர்த்தி ஒவ்வொரு தளமாய் நோட்டம் விட்டேன். ஒரு தளத்தில் பாமா ருக்மணி சகிதமாக உல்லாசத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் குழல் இசைக்கும் சிற்பத் தொகுதி கண்டு குதூகலித்தேன். "ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா..." வேறொரு தளத்தில் வில்லேந்திய இராமன் தன் மனைவி சீதை மற்றும் தம்பி இலக்குவனுடன் காட்சிதந்தார். இராமா இராமா என்று முணுமுணுத்தபடி தெற்குப் பக்கம் நகர்ந்தேன்.

ஆனந்த அழகன் :சொற்களுக்கு அப்பாற்பட்டது சோழர்களின் படைப்பாற்றல். என் விழிகள் அப்படியே நிலைகுத்தி நின்றன. ஆனந்தம் என்ற சொல்லின் அர்த்தங்கள், அதன் உள்ளீடுகள் அனைத்தும் விளங்கியது அந்தக் கணத்தில். ஆதி அந்தமற்றவன் நானே, படைப்பவன் நானே காத்து அழிப்பவன் நானே என்ற களிப்பு ஆடவல்லான் முகத்தில் தெரிந்தது. அவன் கண்களும் ஆனந்தமாய் நகை கூட்டின. முதன்முறையாக ஒரு சிற்பத்தின் கண்கள் புன்னகைப்பதைக் கண்டேன். ஆடவல்லானின் ஒவ்வொரு அங்கத்திலும் ஆனந்தத்தின் உச்சங்கள் வெளிப்பட்டன. தெய்வீக வசீகரம் என்பது இதுதானோ? ஆனந்தத் தாண்டவம் இதுதானோ? இதழ் விரிந்து வெளிப்படும் அந்தக் களிப்பில்தான் எத்தனை கோடி வசீகரம்...

இந்த ஆடவல்லானை அனிமேஷன் செய்தால் அழகிய சோழன் ஒருவன் களிநடம் புரிவான் நம் கண்முன்னே. யாரை மனதில் கொண்டு செதுக்கினான் அந்த சோழசிற்பி? இராஜேந்திரா - அந்தச் சிற்பிக்கு சொல்லிப் புரியவைத்தாயா ? வரைந்து காட்டினாயா ? அல்லது அவிநயம் பிடித்தாயா? உனக்கென தனித்துவம் தேடிய விழைவு புரிகிறது. வழக்கமாய்க் காணும் ஆடவல்லானின் சிற்பம்தான். அபயம், வேழமுத்திரை, தணல், உடுக்கை ஏந்திய கரங்கள். ஆனால் இங்கே உயிர் உள்ளது. அழகின் சிரிப்பும் ஆனந்தமும் நிலையாய்க் குடிகொண்டு விட்டது.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.