http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 56
இதழ் 56 [ ஃபிப்ரவரி 24 - மார்ச் 15, 2009 ] இந்த இதழில்.. In this Issue.. |
வாசகர்களுக்கு வணக்கம். இவ்விதழில், நாம் அன்றாடம் வழிபடும் இறைவன் இறைவிகளுக்கான தமிழ்ப் பெயர்களை அறிமுகப்படுத்த உள்ளோம். முனைவர் இரா.கலைக்கோவன் அவர்கள் தனது நூல்களில் பயன்படுத்தும் சொல்வழக்குகளைத் தொகுத்து அளிக்கிறோம். 1. பிரகதீசுவரர் - பெருவுடையார் 2. தட்சிணாமூர்த்தி - தென்முகக் கடவுள், ஆலமர் அண்ணல் 3. கஜசம்ஹாரமூர்த்தி - ஆனை உரித்த தேவர் 4. கல்யாணசுந்தரேசுவரர் - மணவழகர் 5. ரிஷபதேவர் - காளைத்தேவர் 6. திரிபுராந்தகர் - முப்புரம் எரித்த தேவர் 7. பிட்சாடனார் - பிச்சைத்தேவர் 8. அர்த்தநாரீசுவரர் - அம்மையப்பர் 9. நடராஜர் - ஆடல்வல்லான் 10. பிரம்மா - நான்முகன் 11. விஷ்ணு - திருமால் 12. துர்கை - கொற்றவை 13. கஜலட்சுமி - யானைத்திருமகள் 14. சப்தமாதர் - எழுவர் அன்னையர் 15. ஜேஷ்டை - சேட்டைத்தேவி இம்முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ் விக்கிபீடியா என்ற அமைப்பு தமிழ் வலையுலகில் தனித்தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது. ஒரே பணியை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் திரும்பத் திரும்பச் செய்வதைக் காட்டிலும் இனி புதிய தமிழ்ச் சொற்களைத் தமிழ் விக்கிபீடியாவில் பதிவு செய்யக் கருதியும், அனைவரும் பயன்பெறும் விதத்தில் ஒரே தொகுப்பாக ஒரே இடத்தில் சேமித்து வைக்கும் எண்ணத்திலும், இத்தொடர் இத்துடன் நிறுத்தப்படுகிறது. வாசகர்கள் அனுப்பும் அனைத்துச் சொற்களும் தமிழ் விக்கிபீடியாவில் சேர்க்கப்படும் என்று உறுதியளிக்கிறோம். நன்றி. வணக்கம். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |